Monday, February 11, 2019

ஜெய் அனுமான் -2

ரத்தத்தில் இருப்பதே வியர்வையில் வெளிப்படும் / ஹனுமான் மகன் மகரத்வஜன்
மகாபாரதத்தில் சந்தனு மகாராஜா மகன் பீஷ்மர்.. இவர் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து வீழ்ந்தார்... இவர் தான் பிரம்மச்சாரியாகவே வாழ்வேன் என்று சபதம் செய்த போது சொன்ன வாக்கியங்களில் ஒன்று "ஊர்த்துவரேதஸ்"
"ஊர்த்துவரேதஸ்" என்றால் என்ன?
நீரின் இயல்பு என்ன தெரியுமா? பள்ளமான இடங்களை நோக்கி ஓடுவது... தீயின் இயல்பு மேல் நோக்கி செல்லுவது..
மனிதனின் விந்து நீர்த் தன்மை கொண்டது தானே... அப்போது அது கீழ்நோக்கியே பாய்வதுதானே இயற்க்கை... நம் பீஷ்மாச்சரியார், அந்த சுக்கிலத்தை உர்த்தவ அதாவது மேல்நோக்கி கொண்டு செல்வேன் என்று சத்தியம் செய்தார்,..
இதை, கொஞ்சம் வேறு விதமாகவும் பார்க்கலாம்... சன்யாசிகள் உயிர் நீத்தாள், கபால மோக்ஷம் என்று தலையில் தேங்காய் உடைத்து... அவர்களின் ஆன்ம சக்தியை (பிரம்மச்சரிய விரதத்தால் தேக்கி வைக்கப்பட்ட ஆண்மை சக்தியை) வெளியேற்றுவார்கள்...
சரி, இந்த விந்து எரு வாய் மற்றும் கருவாய் ஆகிய இரண்டுக்கும் இடையே உற்பத்தி ஆகி, எப்படி மேலே செல்லும்... ரத்தத்தின் வழியாகத்தானே? அதாவது உபயோகிப்படாத விந்து மீண்டும் உர்த்தவ ரேதஸ் மூலம் ரத்தத்தோடு ரத்தமாக கலந்து, தலைக்கு செல்லும்... அப்படி ரத்தத்தோடு ரத்தமாக கலந்த ஹனுமான் விந்து அவன் வியர்வையில் வெளிப்பட்டு அதுவே மகரகன்னி யாக இருந்த தேவதை வயிற்றில் மகரத்வஜன் ஐ உண்டு செய்ததது...
(அதுநாள் வரை ஹனுமனுக்கு வியர்வை வெளிப்படவே இல்லையா? அல்லது அதற்க்கு முன் அல்லது பின் வெளிப்பட்ட வியர்வையில் உயிர் உற்பத்தி சக்தி இல்லையா? - அது எப்படி வாய் வழி உண்டது குழந்தையை உற்பத்தி செய்யும்? இந்த கேள்விகளுக்கும் விஞ்ஞான ரீதியில் பதில் உண்டு - நீங்கள் விரும்பினால் தனி பதிவாக)

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...