Sunday, February 10, 2019

விராட் புருஷன்

ஸ்ரீ மத் பாகவதம், ஸ்கந்தம் 3 அத்தியாயம் 26... அண்டம் மற்றும் விராட் புருஷன் தோற்றம் பற்றி விரிவாக சொல்கிறது....
1. விராட் புருஷனுக்கு முதலில் முகம் தோன்ற அதில் இருந்து வாக் (சொல்) பின் வாக் கின் அதிஷ்டான தேவன் அக்னி தோன்ற...
இப்போது புரியும், தீயினால் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு என்று திருவள்ளுவர் எழுதிய காரணம்...
மூக்கின் தேவதை வாயு
கண்களின் தேவதை சுட்டும் விழிச் சுடராய் சூரியன்... காதுக்கு தேவதை திக்...
விராட புருஷனுக்கு நாடி நரம்பு ரத்தம் அதன் தேவதை நதிகள் பின் வயிறு அதில் பசி தாகம் பின் அதன் தேவதையாக சமுத்திர தேவன் அதன் பின் இதயம் அதில் இருந்து மனசு.... இப்போ புரியுதா மனசு ஏன் அலை பாய்ந்து கொண்டே இருக்கு என்று...
ஒன்றில் இருந்து ஒன்று உண்டான படியால், பின்னர் உண்டான வஸ்து வுக்கு (காரியத்துக்கு) அதன் தாயான மூல வஸ்து (காரணத்தின்) குணமும் கலந்து இருக்கும்.... தாயை போல பிள்ளை...
மனதில் இருந்து அதன் தேவதை சந்திரன் பிறகு புத்தி அதன் தேவதை பிரம்மன் பின் அகங்காரம் அதன் தேவதை ருத்ரன் கடைசியில் சித்தம் (பகுத்தறியும் திறன்) அதன் தேவதை க்ஷேத்ரக்ஞன் வெளி வந்தனர்...
ஆனா, இன்னிக்கி பூரா பய புள்ளைக்கும் சித்தம் கலங்கி போய் தன்னைத் தானே பகுத்தறிவாளன் என்று சொல்லிக்கிட்டி திரியிறான்! 
Image may contain: 11 people, including Harit Churu

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...