Thursday, February 7, 2019

ராம ராஜ்யம் என்றால் என்ன?!

ராம ராஜ்யம் என்றால் என்ன?!
ஸ்ரீ ராமன் ஆட்சியில் மக்களிடையே அல்பாயுசில் குழந்தைகள் இறந்து போனதாக நிகழ்ச்சிகள் கிடையாது.
பெண்கள் விதவைத் தன்மையை எய்தாமலும், கற்பை இழக்காமலும் நல் வாழ்வு வாழ்கிறார்கள்.
தீ, காற்று, தண்ணீர் இவற்றினால் எந்த ஆபத்தும் மக்களுக்கு ஏற்படாது.
திருடர் பயம் கிடையாது
பசி, நோய் துன்பம் கிடையாது
பயிர்கள் செழித்து செல்வம் கொழிக்கும்
மக்கள் மகழ்ச்சி பொங்க சீரோடும் சிறப்போடும் வாழ்ந்தார்கள்....
மேற்கு வங்கத்தைப் போல அரசு ஆஸ்பத்திரிகளில் கொத்து கொத்தாக குழந்தைகள் சாகாது. சென்னையில் இன்குபேட்டரில் குழந்தைகள் சாகாது
டாஸ்மாக்கினால் பெண்கள் விதவை ஆகமாட்டார்கள். சூரிய மின் தகடால் சரிதா நாயர் கற்பிழந்து இருக்க வாய்ப்பில்லை. நிர்பயா வழக்கும் இல்லாது இருந்து இருக்கலாம்.
கும்பகோணம் பள்ளித் தீவிபத்து கடலூர் தானே புயல், சென்னை வெள்ளம் கிடையாது.
தமிழக கள்வர்களுக்கும் காவல்துறைக்கும் கூட்டுக் களவானி உறவு இருக்காது
சுகாதாரத் துறை மூலம் காசு பார்க்க அரசு மருத்துவ மனை, ஆம்புலன்ஸ், மருத்துவ காப்பீட்டுத் திட்டமே தேவை இல்லை
காவிரிப் பிரச்சனை மணல் கொள்ளை பாசனத் தூர்வாரல் என்ற பெயரில் கொள்ளைகள் இல்லாது மக்கள் செல்வம் கொழிக்க சுகமாக இருந்திருக்கலாம்....
ராமன் - தனி ஒருவன். ஆனால் தற்போது ஜனநாயகம் என்ற பெயரிலும் / கூட்டணி என்ற பெயரிலும் நடப்பது ராஜ்யம் அல்ல - ஒரு கூட்டு வண்புணர்வு - political gang rape.⁠⁠

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...