ஸ்ரீ மத் பாகவதம் ஸ்கந்தம் 3 அத்தியாயம் 6
ஸ்லோகம் 27
விராட் புருஷன் தலையில் தேவலோகம் கால்களில் பூலோகம் தொப்புளில் ஆகாயம் தோன்றின.
அந்த மூன்று இடங்களிலும் சத்வம் ரஜஸ் தமஸ் என்ற 3 குணங்கள் உடைய தேவர்கள் மனிதர்கள் பூத கணங்கள் வசிக்கிறார்கள்.
ஸ்லோகம் 28, 29
சத்வ குண மிகுதியால் தேவர்கள் சொர்கத்தையும் ரஜோ குண மிகுதியால் மனிதர்களும் அவர்களுக்கு உதவும் கால் நடைகளும் பூஉலகை பெற்றனர்.
தமோ குண மிகுதியால் விண்ணுக்கும் மண்ணுக்கும் இடைப்பட்ட விராட புருஷனின் தொப்புள் பிரதேசமான அந்தரிட்ச உலகை ருத்ரனின் கணங்களான பூத கணங்கள் அடைந்தன.
ஸ்லோகம் 30
விராட புருஷனின் முகத்தில் இருந்து வேதங்கள் தோன்றின. அதை அனவரதமும் போற்றி காக்க அந்தனனும் உடன் தோன்றினான்.
ஆகவே, அவன் 4 வர்ணங்களுள் மிக முக்கியமானவன், மற்ற 3 வர்ணத்தவருக்கும் ஆசான்.
ஆகவே, அவன் 4 வர்ணங்களுள் மிக முக்கியமானவன், மற்ற 3 வர்ணத்தவருக்கும் ஆசான்.
ஸ்லோகம் 31
விராட புருஷனின் கைகளில் இருந்து மக்களை காக்கும் தொழில் திறனும் அதை போற்றும் க்ஷத்ரியனும் தோன்றினர். அவன் பகவான் விஷ்ணுவின் காக்கும் அம்சம் கொண்டவன். மற்ற 3 வர்ணத்தவர்களையும் திருடன் முதலிய தீயோர்களிடமிருந்து காக்க கடைமைப்பட்டவன்.
ஸ்லோகம் 32
பகவானது துடைகளில் மக்களுக்கு ஜீவனத்துக்கு உரிய விவசாயம் முதலியனவும், அவற்றை மேற்கொண்ட வைசியர்களும் தோன்ற, அவர்களின் தொழில் மக்களின் வாழ்க்கைக்கு வேண்டியவற்றை செய்து தரவேண்டும்.
இனி, இந்த இடம் தான் நம்ம பகுத்தறிவு பக்கோடாக்களுக்கு முக்கியமான இடம்.... ஆம், சூத்திரன் விராட புருஷனின் கால்களில் இருந்து தோன்றினான்... ஸ்லோகம் 33.... சூத்திரனுக்கு கொடுக்கும் definition என்ன?!
மேலே கூறிய அனைத்து அறநெறிகளும் செவ்வனே செயல் பட.... அதாவது ஆசிரியர் தொழில் (வேதம் பேணுதல்) க்ஷத்திரிய தொழில் (காத்தல்) வைசிய தொழில் (பேணுதல்) ஆகிய அனைத்தும் செவ்வனே செயல் பட இறைவனது திருவடித் தாமரையில் இருந்து (பத்ப்யாம் பகவதோ)
சேவை என்னும் உயர்ந்த தொழிலும் (ஜக் ஞே ஸுஸ்ரூஷா தர்ம ஸித்தயே)
அதை செய்து தர (தஸ்யாம் ஜாத:) 4 ஆம் வர்ணத்தவரான வேளாளர்களும் தோன்றினர்... (புரா ஸூத்ரோ யத் வ்ருத்த்யா துஷ்யதே ஹரி:)
இந்த வர்ணத்தவர்கள் சேவையால் தான் பகவான் ஸ்ரீ ஹரி மகிழ்ச்சி அடைகிறார்...
முக்கிய விளக்க குறிப்பு (especially for பஹூத் அரிப்பு பக்கோடா க்களுக்கு)...
*அனைத்து அறங்களும் செவ்வனே நடக்க மூல காரணம் (ஆணிவேர்) சேவை மனப்பான்மையே. அச்சேவை இல்லையேல் எந்த அறநெறியும் நிற்காது. ஆகவே, அனைத்து அறங்களும் நன்கு நடக்க உதவும் சேவை மனப்பான்மை கொண்ட வேளாளர்களே 4 வர்ணங்களிலும் உயர்ந்தவர்கள்.*
*அந்தணர்கள் நெறி முக்தி நெறி, க்ஷத்திரியர்கள் நெறி போக நெறி, வைசியர்கள் நெறி பணம் திரட்டுவது, அதை பிறருக்குத் தருவது. ஆனால் வேளாளர்கள் நெறி, #அறநெறி.*
*அதாவது, 3 வர்ணத்தவர்கள் நெறிமுறைகளுக்கு உதவி செய்வது. இவ்வாறு முதல் 3 வர்ணத்தவர்களின் நெறி மற்றைய புருஷார்த்தங்களை அடைவதற்குகென்று இருப்பது. ஆனால், சூத்திரர்களான வேளாளர்கள் நெறியோ, தனக்கென வாழா பிரற்குறியாளர் நெறி. எனவே, வேளாளர் நெறி கண்டுதான் இறைவன் மகிழ்கிறான்*
இப்போ இப்பிடி simple ஆக பார்ப்போம்...
வாத்தியார் தொழில் செய்பவன் எல்லாம் பிராம்மணன்...
போலீஸ், ராணுவம் உத்தியோகஸ்தர்கள் க்ஷத்ரியன்.
விவசாயி, கோனார், வட்டிக்கடை சேட்டு, வியாபாரி எல்லாம் வைசியன்.
ஹோட்டல் நடத்துரவன், ராக்கெட் விடுபவன், ஆவடி tank பேக்டரி தொழிலாளி, திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை தொழிலாளி, துணி, சர்க்கரை ஆலை bhel தொழிலாளிகள், பேங்க் வேலை பார்ப்பவன், இன்ஜினியர், மருத்துவர், வக்கீல், CA இத்யாதி இத்யாதி எல்லாம் சூத்திரன்.
எதா இருந்தாலும் ஒழுங்கா படிச்சுட்டு, புரிஞ்சிக்கிட்டு போராடுங்கடா பேப்பய புள்ளைகளா!
No comments:
Post a Comment