உலகமே கொண்டாடும் ஒரு உன்னத மொழியை நம்மை ஆண்ட இன்னமும் மறைமுகமாக ஆண்டு கொண்டு இருக்கின்ற இஸ்லாம் கிறித்தவ சக்திகள் சதியின் காரணமாக நாம் செத்த மொழி என்று கைவிட்டு விட்ட, சமஸ்க்ருதம் மீண்டும் ஒரு பேச்சு வழக்கு மொழியாக வேண்டும்.
இன்று சமஸ்க்ருதம் கூடாது என்று கூச்சல் போடுபவர்கள் அதற்கு சொல்லும் காரணம் என்ன?
அது பிராம்மண, ஆரிய பாஷை.
இல்லாத ஆரிய திராவிட கற்பனையின் கீழ் கைபர் போலன் கணவாய் வழியாக கடந்து வந்து நம்மை அடிமைப் படுத்தியவர்கள் பாஷை....
அதாவது ஆதாரமே இல்லாத ஒரு புளுகு மூட்டையின் படி, ஒரு மகோன்னத மொழி நம் நாட்டில் செத்த மொழி...
நம் மனம் ரத்தம் வரலாறு என ஒவ்வொன்றிலும் நம்மை இன்னமும் அடிமை படுத்தி வைத்து இருக்கும் கிறித்தவ துலுக்க பாஷைகள் நம்மை ஆண்டால் தப்பில்லை என்ற எண்ணம், எச்சில் பிச்சை அமுதம் என்ற அடிமை மனோபாவம்.
இந்த நாட்டில் பிறந்ததாக ஒட்டுமொத்த உலகமே கொண்டாடும் ராமாயண மகாபாரத ஏன், வேதங்கள் கூட சமஸ்க்ருத மொழியில் இருக்கும்போது, சமஸ்க்ருதம் எப்படி கைபர் போலன் கணவாய் வழியாக வந்த ஆரிய அல்லது வெளிநாட்டு மொழியாக இருக்க முடியும்?!
க்ருத யுகத்தில் மச்ச ரூபத்தில் விஷ்ணு காப்பாற்றிய, பிரம்மன் கையேடு வேதம் சமஸ்க்ருதம்.
த்ரேதா யுகத்தில் வேடுவ வால்மீகி எழுதிய ராமாயணம் சமஸ்க்ருதம்.
துவாபர யுகத்தில் மீனவ பெண்ணின் மகன் வ்யாஸன் தொகுத்த வேதம் _ எழுதிய மஹா பாரதம் அதன் உள்ளே இடையன் சொன்ன கீதை சமஸ்கிருதம்.
1947 இல் சுதந்திரம் பெற்று 1950 இல் இந்தியாவுக்கு என்று நாமே நம் தலையில் கூட்டிக் கொண்ட குப்பை குவியல் இந்திய அரசியல் அமைப்பின் / இலச்சினை யின் சத்யமேவ ஜயதே கூட சமஸ்க்ருதம்...
உண்மைகள் யுக யுகங்களாக சமஸ்க்ருதம் சாமானியன் மொழி என்ற சத்தியத்தை உணர்த்திக்கொண்டு இருக்கும்போது அது எப்படி பிராம்மண பாஷை ஆனது அதுவும் கடந்த 50 ஆண்டுகளில்?! என்பதை பார்ப்போம் 6 இல்...





