Monday, May 13, 2019

மமதேஹி கராவலம்பம் -10 (1)


#ஒருவனுக்கு_ஒருத்தி-1
ராமன், சமூக சமன்பாட்டின் ஓவியம். ஒருவனுக்கு ஒருத்தி என்ற சித்தாந்தமே சமூக/ மனித குல சமன்பாடு.
தென்கச்சி திரு சுவாமிநாதன் வீடியோ clip ஒன்று பார்த்தேன்.
அதில் அவர் சொன்ன தகவல்.... உலகில் ஆண் பெண் பிறப்பு விகிதம் ஆண்116:100 பெண் என்று உள்ளதாம்...
ஆண்களில் 16 கூடி இருப்பது காலத்தின் மாற்றத்தால் ஆண் பெண் உறவு சமன்பாட்டை துள்ளியமாக எட்டிவிடுமாம்.
உலக பெரும் போர் காலத்தில் இயற்கை இந்த பிறப்பு விகிதத்தை 100 பெண்களுக்கு நேராக 150 அல்லது 160 ஆண் பிறப்புக்களை உருவாக்குதாம். காரணம், போர் உயிர் இழப்புக்களை சரிக்கட்ட...
இப்படி சொல்லிக்கொண்டே சென்ற திரு சுவாமிநாதன், தன் வீட்டில் தானே புறா வளர்த்ததாகவும், அது குறித்த ஒரு தகவலையும் சொன்னார்... புறா ஒவ்வொரு முறையும் இரண்டே இரண்டு முட்டைகள் மட்டுமே இடுமாம்... அந்த முட்டையில் ஒன்று ஆண் மற்றொன்று பெண் புறா.... இந்த சமன்பாட்டு விதி எப்போதும் மாறவே மாறாதாம்...
இதை தொடர்ந்து அவர் ஒரு நகைச்சுவை கதையையும் சொன்னார் அது பகுதி 2ஆக வெளிவரும். காரணம் ஒரு உயர்ந்த காவிய நாயகன்/ சமூக அக்கறை பதிவின் நோக்கை மாற்ற விரும்பவில்லை.
#என்_புரிதல்
இந்த இயற்கையின் சமன்பாட்டு சின்னமே ஸ்ரீ ராமன்... ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்து காட்டினான்.
மேலும், எப்போதெல்லாம் உலகின் எந்த பகுதியிலாவது ஆண் பெண் பிறப்பு விகிதாசாரங்கள் மிக பெரிய முரண்பாடுகளோடு இருக்கிறதோ, அதை ஒட்டி வரும் காலத்தில் அங்கே இயற்க்கை க்கு முரணாக உயர்வாக பிறந்த பாலினம் ஏதோ காரணத்தால் வெகுவாக அழியும்...
உதாரணமாக.... நாளை துவங்கி ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்டில் 150ஆண் 100 பெண் என்ற விகிதத்தில் பிறப்புக்கள் இருந்தால்... எதிர் காலத்தில் அந்த பகுதியில், போரால் அல்லது ஆண்களை மட்டும் தாக்கும் ஏதோ நோய் காரணமாக உயிரிழப்புகள் அதிகமாகும் என்று எதிர்பார்க்கலாம்.
இதை முதல் இரண்டு உலகப்போர்களுக்கு முந்தைய கால பிறப்பு விகித்துடன் ஒப்பிட்டு சரிபார்க்கு முயற்சியில் விவரம் தேடிக்கொண்டு இருக்கிறேன்.... நீங்களும் தேடலாம்....

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...