மண்டன மிஸ்ரர்/ சரசவாணி தம்பதிகள் ப்ரம்மா/ சரஸ்வதி அம்சம், அவதார காரணம், நோக்கம் குறித்து முந்தைய பதிவில் பார்த்தோம்...
மண்டன மிஸ்ரர் இல்லற தர்மத்தை உயர்த்திப் பிடித்தவர்... சங்கரர் சந்நியாசி... இருவருக்குமிடையே வாதம் துவங்கியது யார் வெற்றி பெருகிறாரோ அவருடைய தர்மத்தை எதிராளி ஏற்க வேண்டும்... இந்த match refree மண்டன மிஸ்ரர் மனைவி சரசவாணி... என்ன புரிகிறது!!!
பெண்கள் கணவனுக்காக கூட தர்மத்தை விட்டு விலக மாட்டார்கள்... ஆனால், இப்போது கணவனின் தர்மத்தை கூட திசை திருப்பி முதியோர் இல்லங்களில் மாமியார் மாமனார் களை விட்டு வைக்க காரணமே பெண்கள் தான்... இனி, நாட்டில் எப்படி மழை பெய்யும்?!
போட்டி துவங்கியது... 21 நாட்கள் வாதம் என்றும் ஒரு மாதம் விவாதம் நடந்தது என்றும் இரு வேறு கருத்துக்கள் உண்டு... சரசவாணி, இல்லத்தரசி கூட... உணவும் தயாரித்து கணவனுக்கு/ அதிதி/ சந்நியாசி சங்கரருக்கு பிக்ஷையும் தயார் செய்து கொடுக்கவேண்டும்... எனவே இடையிடையே சரசவாணி இல்லற விஷயங்களில் ஈடுபட வேண்டி இருப்பதால் போட்டியாளர்கள், மண்டன மிஸ்ரர்/ சங்கரர் கழுத்தில் தலா ஒரு மாலை அணிவிக்கப்பட்டது... யாருடைய கழுத்தில் உள்ள மாலை முதலில் வாடுகிறதோ அவர்கள் தோற்றவர்கள்...
இங்கே கொஞ்சம், தகவல் பதிவு...
சந்நியாசிகள் நெருப்பு போல... காரணம் சுக்கிலம் கட்டுதல்... பிரம்மச்சரியம் அக்கினி போன்றது... ஒரு உதாரணம்...
காஞ்சி மகா சுவாமி ஒருமுறை ஒரு சிவாலயத்துக்கு சென்றார்... அங்கு ஸ்ரீ சுந்தர குருக்கள் முறை... சிவாலயங்களில் அர்த்த மண்டபத்துக்கு அடுத்து நாம் நின்று தரிசிக்கும் இடத்தில் ஒரு நந்தி பலிப்பீடம் இருக்கும் (கொடி மரம் அருகே இருப்பது வேறு) அந்த நந்திக்கு எதிரில் ஒரு ஹோம குண்டம் இருக்கும்...அந்த ஹோம குண்டம் அருகே கடம் ஆவாகனம் செய்து (ஸ்தபன பூஜை) அக்கினி வளர்த்து அந்த நீரால் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறும்...
பொது சிவாலயங்களில், ஆதி சைவர்களை தவிர வேறு யாருக்கும் மூலவரை தொட்டு பூஜிக்கும் தகுதி கிடையாது... திருவானைக்கோவில்/ ராமேஸ்வரம் போன்ற வைதீக பூஜை ஸ்தலங்களில் சில விதி விலக்கு உண்டு...
சுந்தர குருக்கள் பூஜை ஏற்பாடுகளை செய்து கொண்டு இருக்கும் போது திடீர் என்று பின்னால் ஒரு ஒளிபிழம்பு... சுந்தரம் திடுக்கிட்டு பார்த்து புரிந்து கொள்ளும் முன்பு, சுந்தரம், அக்கினி ஹோமங்கள் முடிச்சிட்டியா?! என்றபடி நம் பரமாச்சாரியாள்...
குருக்கள் சுந்தரத்துக்கு, (ஆதி சைவர்) நமஸ்கரிக்க தோன்றவில்லை... ஆனாலும் வயது கருதி வாய் பொத்தி, பொறி இல்லை, (பரிசாரகன் பெயரை சொல்லி) எடுத்துண்டு வர போய் இருக்கான்...
பெரியவர் கீழே குனிந்து கடத்தின் கீழ் வாழை இலைமேல் பரப்ப பட்டு இருந்த நெல் மணிகளை கையில் எடுத்து தேய்க்க... ஆசார்யாள் கைகளில் இருந்து, நெல் பொறி நெய்வேத்திய தட்டில் விழுந்தது...
சுவாமி காத்துண்டு இருக்கப்படாது, ஆகட்டும் என்றார்... மகாஸ்வாமி... ஆடல்வல்லான் பரமேஸ்வரன் கையில் அக்கினி இருக்கே.... ஆச்சாரியரின் கை சூட்டில் நெல் பொரிந்து நெய்வேத்தியமாக நின்றது...
சாதாரணமாக ஆதி சைவர்கள், சிவனின் வாரிசுகள் என்ற கொள்கை உடைய அவர்கள் வைதீக சந்யாசிகளை அல்லது பிறர் காலில் விழுந்து நமஸ்கரிக்க மாட்டார்கள். ஆனால் சுந்தரம் குருக்கள் பரமேஸ்வரன் தரிசனம் கண்டு ஆச்சாரியரின் கால்களில் அடியற்ற மரம் போல விழுந்து நமஸ்கரிக்க...
பின் சடங்குகளை முடித்து கண்களில் நீரோடு, ஸ்தபனத்தை நம் சுவாமி கையில் எடுத்துக் கொடுத்து நீங்களே அபிஷேகிக்க வேண்டும் என்று கோர, நம் ஆச்சாரியார், முறை மாற்றக்கூடாது என்று சொல்லி மறுத்து, ஆனால் சுந்தரத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி தானும் கர்ப்ப கிரகத்துக்கு உள்ளே சென்று சுந்தரம் பூஜை செய்வதை கண்டு மகிழ்ந்தார்...
சந்நியாசி- அக்கினி கதை இன்னும் கொஞ்சம் தொடரும்...
No comments:
Post a Comment