Monday, May 20, 2019

மந்திரம்....


கோவிலில் /ஹோமங்களில் வட மொழியில் - ஸமஸ்க்ருத மந்திரம் சொல்லித்தான் வழிபட வேண்டுமா?!
விக்ரஹங்கள் ஒரு விதமான காந்த சக்தி உள்ள கற்களிலேயே செய்யப்படுகிறது...
அது போல ஹோமங்களில் கலசங்கள் வைக்கப்பட்டு இருக்கும் மருந்துப் பொருட்கள் கலக்கப்பட்ட நீரில் - மூலிகைகளால் வளர்க்கப்பட்ட தீயில் புனல் மற்றும் அணல் மின் காந்த சக்திகள் மூலம் செரிவூட்டப்பட்ட புனித நீர் உருவாக்கப்பட்டு உபயோகிக்கிறோம்..
இப்படிப்பட்ட மின் காந்த அலைகளுக்கு கமகங்கள் அதிகம் வாய்ந்த ஒலி மூலம் மேலும் நல்ல ஆக்கப் பூர்வமான சக்திகள் ஏற்படுத்தி அவற்றை நாம் அனுபவிக்கிறோம்....
வீட்டின் ஒரு மூலையில் இருக்கும் wi-fi மோடம் வீட்டிற்க்குள் நெட்வொர்க் தருகிறது - வீடு முழுவதும் பரவும் புனித கனப்புடன் கூடிய புகை /புனித ஓலி / தெளிக்கப்பட்ட நீர் நமக்கு நல்ல பலன்களை கொடுக்காதா?
சரி... சமஸ்க்ருத மொழி மட்டுமே சக்தி வாய்ந்ததா?!
சமஸ்க்ருத மொழியில் / தூய தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் மட்டுமே பேச்சு வழக்கில் கமகங்கள் இயற்கையாக அமையும்...
ஆனால் தமிழும் தெலுங்கும் இப்போது பூகோள ரீதி வித்யாசத்தோடு புழங்கப்படுகிறது - சித்தூர் காக்கிநாடா விஜயவாடா என தெலுங்கு வித்யாசம் பெற்றது - தமிழ் நம் எல்லோரும் அறிந்தது போல சென்னை / கோவை / மதுரை / நெல்லை என பகுதிபட்டு வீணானது...
மேலும் ஒவ்வொரு மொழியும் எல்லைப் புரங்களில் மற்ற மொழியின் தாக்கத்தால் உதாரணமாக குமரி மாவட்டத் தமிழில் மலையாள வாசம் போல சுயத்தை இழந்தது...
ஆனால் சமஸ்க்ருதம் மட்டுமே எல்லா பிராந்தத்திலும் சுயத்தை இழக்காது இருக்கிறது...
சமஸ்க்ருத மந்திரங்களுக்கு உரிய அதே ஒலிப் பண்புகள் ஏறத்தாழ எல்லா பழமையான மொழிக்கும் உண்டு.
ஆனால் நமது ஆழ்வார்கள் நாயன்மார்கள் அருளாளர்கள் பயன்படுத்திய பஞ்சமம் / நாதநாமகிரியை /காந்தாரம் என்ற பண் (ராகம்) அறிந்து - அறு சீர் கழி நெழிலடி / நாலடி மேல் வைப்பு / ஆசிரியப்பா / வெண்பா அமைப்பின் படி மூல மொழி இலக்கணத்தோடு தூய உச்சரிப்போடு கூடிய அணைத்து மொழி உச்சரிப்புக்கும் மந்திர சக்தி நிச்சயமாக உண்டு. 

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...