Monday, May 13, 2019

மமதேஹி கராவலம்பம் -12

ஆதி சங்கரர்... கிறிஸ்து பிறப்புக்கு முன்...
கிறிஸ்து பிறப்புக்கு பின், கி பி 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலை அருணகிரிநாதர், பரகாய பிரவேச வித்தை கற்றவர்...
அந்த ஊர் அரசனின் நம்பிக்கைக்குரிய சம்பந்தாண்டான் என்பவன் செய்த சூழ்ச்சியால், அருணகிரி நாதரின் பூத உடலுக்கு எரியூட்டப்பட, அருணகிரியார் ஒரு கிளியின் உடலுக்குள் புகுந்து, கோபுரம் மீது அமர ... அது இன்றும் கிளி கோபுரமாக திருவண்ணாமலையில்...
கூடு விட்டு கூடு பாயும் போது தன்னை மறந்த நிலை உண்மைதானா?!
நமக்கு நாமே ஒரு பரிக்ஷை வைத்துக் கொள்வோம்... ஆடி மாதங்களில் அம்மன் கோவில் செல்லாத்தா செல்ல மாறியாத்தா போன்ற பாடல்களில் மனது ஒன்றி கூடவே இசைக்கப்படும் தாரை தப்பு ஒலியில் உங்களை கரைத்துக்கொண்டு சில நிமிடங்கள் இருந்து பாருங்கள்...
உங்களையும் அறியாமல் உங்கள் கால்கள் நடனமாட துடிக்கும்...உங்களை மறந்த பரவச நிலை ஏற்படும்... சாமி வந்துடுச்சு என்று சொல்லி, விபூதி பூசி, மலை ஏற்றுவார்கள்... சாமியாடியவர் சற்று நேரம் மயக்க நிலையில் இருப்பார்...
அமருகன் உடலில் சங்கரர், அந்த தன்னை மறந்த நிலையில்...
கிருகஸ்த ராஜ்ய தர்மங்களை நீதிகள் பரிபாலன சூக்ஷமங்களை பற்றி சபையில் இருந்த சான்றோர்களிடம் தெளிவாக கேட்டு விவாதித்து புரிந்து கொண்டார் சங்கரர்...
அரசவை பணியாட்கள் சங்கரர் பூத உடலை கைப்பற்றி சிதையில் வைத்து தீ வைக்க ...
சங்கரரின் சீடர்கள் அமருகனிடம் ஓடோடி வந்து ... தத்வம்மசி... தத்வம்மசி ... தத்வம்மசி... என்று அது நீயே உணர் என்று மகாவாக்கியம் சொல்ல...
ஒரு க்ஷணத்தில் சங்கரர், அமருகன் உடலை விட்டு நீங்கி சிதையில் வைத்து எரியூட்டப்பட தன் உடலை அடைந்து... தீயை உதறி எழுந்து நிற்க... அவரது வலது கரம் நெருப்பில் பொலிவிழந்து கருகி இருக்க...
சங்கரர் புன்முருவளோடு சீடர்களிடம் சொன்னார்... இல்லறம் கடினம்... என்றேன்.... 30 நாள் கர்மத்தில் என் வலது கையை இழந்தேன், என்று சொல்லி...
சீடர்கள் சங்கரரின் இந்த நிலைக்கு தாங்களே காரணம்... சற்று முன்கூட்டியே நினைவூட்டல் செய்து இருக்கலாம் என்று வாட்டம் அடைய...
சங்கரர், லட்சுமி நரசிம்ம ஸ்வாமியை ஸ்தோத்திரம் செய்து, மம (எனக்கு) தேஹி (கொடு) கரா (கை) வலம்பம்(வலது) என்று கோரி, மீண்டும் பழையபடி தன் பொன்போன்ற கரத்தை பெற்றார்! (முற்றும்)
ஹர ஹர சங்கர
ஜெய ஜெய சங்கர! 

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...