Monday, May 20, 2019

இனிய ஆன்மீகம்...



கடலூர் மாவட்டம் - கெடிலம் நதிக்கரை - ஏறத்தாழ 50 ஆண்டுகள் முன்பு...

சாது ஒருவர் - துர்கா உபாசகர்... வெள்ளிக்கிழமை இரவில் அம்பிகையோடு பேசி பக்தர்கள் கேட்ட கேள்விக்கு பதில் பெற்று மறுநாள் பகிரக்கூடிய பரிகாரத்தை / பதிலை பக்தர்களிடம் பகிர்வார்.

சாதுவின் இடதுகாலில் யானைக்கால் வியாதி இருந்தது. சாதுவுக்கு நெருக்கமான தொண்டர்கள் (சகஜ பாவத்தோடு கூடிய பக்தி) ஒரு நாள் சாதுவை விளையாட்டாக கேலி பேசினார்கள்...

பக்தர்களுக்காக அம்பிகையிடம் பேசும் நீங்கள் ஏன் உங்கள் யானைக்கால் நோய்க்காக பேசக் கூடாது? என ஒருவர்...

இடைமறித்த மற்றொரு அணுக்கத் தொண்டர்.... அம்பிகையோடு சம்பாஷணை எல்லாம் பக்தர்களை ஏமாற்றும் வேலை - என இடைமறிக்க...

சாது - சிரித்துக் கொண்டே சரிதான்... இன்று கேட்டுவிட வேண்டியதுதான் என்றார் உரக்க....

வெள்ளியிரவு சாது துர்காம்பிகையிடம் பேசி மறுநாள் சனிக்கிழமை பரிகாரம் / பதில் கேட்டு வந்த பக்தர்களிடம் அருள்வாக்கு சொல்லிக் கொண்டே வந்தார்...

சூரியன் உச்சியில் - எல்லா பக்தர்களும் கிளம்பிவிட்டார்கள்.. சாதுவோடு இப்போது அணுக்க (நெருக்கமான) தொண்டர்கள் மட்டுமே...உணவு பரிமாறிய படி....

சுவாமி, அம்பாளிடம் உங்கள் யானைக்கால் வியாதி பற்றி கேட்டீரா?

ஓ.... கேட்டேனே...

யானைக்கால் அப்படியேதானே இருக்கு என பக்தர்கள் சகஜமாக நகைத்தபடி...

சாது; ஆமாம் ஆமாம்... யானைக்கால் அப்படியேதான் இருக்கு! ஆனால் எந்தக் காலில் பாருங்கள்....

பக்தர்கள் நெடுஞ்சாண்கிடையாக சாதுவை நமஸ்கரித்து.... குருதேவா மன்னித்து விடுங்கள் - யானைக்கால் இடமிருந்து வலம் போனது எப்படி?!

சாது அமைதியாகச் சொன்னார்...

அம்பிகை இந்த வியாதியை நீக்கிவிடலாம் என்றும் சொன்னாள் - ஆனால் இந்த குறைபட்ட கர்ம வினையை அனுபவிக்க இன்னொரு ஜென்மா எடுத்து பின் அதன் பாவ புண்ணியம் எனது பிறவிகளை நீட்டித்து விட்டால்... அதனால் நான் அம்பிகையிடம் கால் மாற்றிவிட மட்டும் கோரினேன்...

தீதும் நன்றும் பிறர் தர வாரா.... அவரவர் வினைவழி அவரவர் வந்தனர்...

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...