குல குருவின் ஆலோசனைப்படி, அப்பா இளைஞனை ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் மண்டபத்துக்கு அழைத்து வந்தார்... குருவின் மீது இருந்த மரியாதை... இளைஞன் தயங்கி தயங்கி அங்கே வந்தான்.... இளைஞன் சில தப்படிகள் தொலைவில் வரும்போதே, குரு ஓடோடி வந்து இளைஞன் கால்களில் விழுந்து வணங்க... இளைஞன் பதறிவிட்டான்... குருவே, நீங்கள் என் காலில் விழுவதா?!
குரு சொன்னார், பிள்ளாய், நான் ஆண்டவன் பரம் பொருள் போன்ற பேரின்ப சுக வாழ்வுக்காக இந்த உலகத்தில் இருக்கும் அற்ப சுகங்களை தியாகம் செய்கிறேன்.... ஆனால் நீயோ இந்த உலகத்தில் உள்ள அற்ப மதுவுக்கு, மாது, சூது க்காக பெரிய சொர்க்க வாழ்க்கையை தியாகம் செய்கிறாய்... என்னை விட நீதான் பெரிய தியாகி... நான் கோடியை சம்பாதிக்க 100 ஐ இழக்கிறேன்... நீ 100 ஐ சம்பாதிக்க கோடி யை இழக்கிறாய் என்று சொல்ல இளைஞன் யோசிக்க தொடங்கினான்... திருந்தி விட்டான்...
நெருப்பு சுடும்... இதை தொட்டு உணறுவது ஒருவகை... நெருங்கி போகும்போது வெம்மை தாக்குவதை எண்ணி/ உணர்ந்து விலகி நிற்பது இன்னொரு வகை...
இல்லறம் கடினம் என்பதை உணர்வது ரெண்டாவது வகை.... இல்லறம் என்றாலே காமம் என்பது முதல் பகை...
4 எட்டுக்கு அதாவது 32 வயதுக்குப் பின் பிள்ளை பிறப்பது, ஓய்வுக்காலத்தில் உதவாது... முதல் பிள்ளை மட்டுமே கர்மத்துக்கு/ தர்மத்துக்கு... மற்ற குழந்தை பிறப்புக்கள் காமத்துக்கு... ஆசை காரணமாக சேர்த்த சொத்துக்களை அனுபவிக்க மட்டுமே!
அமருகன் உடலுக்குள் பரகாய பிரவேசம் செய்த சங்கரர்... உடல் தீட்டை தவிர்க்க ஒரு சடலத்துக்கு ஒரே ஒரு மாதம் மதிப்பு கூட்டினார்... மற்றபடி, அதில் காமம் மட்டுமே இருந்தது என்று அந்த வழியில் சிந்திப்பது நம் பார்வை வக்கிரம்.
ஒரு முக்கிய விஷயத்தை இங்கே தொட்டு காட்ட விரும்புகிறேன்... நம் ஹிந்து தர்மங்கள் சொன்ன பல விஷயங்களை நாம் கடைபிடிக்கிறோமா என்றால், இல்லை... என்பதையும் தாண்டி வெளிநாட்டில் அந்த ஞாயங்களை கடை பிடிக்கிறான், சர்வ உண்மை.
இலங்கை பிரதமர் பதவிக்கு பிரமாணம் ஏற்றுக்கொண்ட உடனே அவர் கீழே வந்து முதலில் புத்த பிக்குகள் சிலரிடம் ஆசி வாங்கி பின் அந்த துறவிகள் கொடுக்கும் தீர்த்தம் பருகி தன் வேலையை துவாக்குகிறார்...
முற்றிலும் முன்னேறிய அமெரிக்க நாட்டில் கடவுளை நம்பி பிரமாணம்... இந்தியாவில் தலைவனின் மனைவி, துணைவி, இணைவி, பெயரால், புழுத்த அறிவின் பெயரால் பிரமாணம்...
அரசன், செங்கோல் ஏந்தி நானே உயர்ந்தவன் என்று பிரகடன படுத்திக் கொண்டு 3 முறை சொல்ல வேண்டும்... உடனே குருவிடத்தில் வந்து பணிந்து நிற்க வேண்டும்... உடனே குரு தன் கையில் இருக்கும் தண்டம் கொண்டு, மன்னன் தலையில் தட்டி தர்மம் தான் உயர்ந்தது என்று அரசனுக்கு உணர்த்துவார்...
பொன்னால் ஆன செங்கோல்... மூங்கில் அல்லது மரத்தால் ஆன தண்டம்... எது உயர்ந்தது?!
பொன்னை உருக்கினால் தன்மை மாறாது... ஆனால், மூங்கில் தன்னை ப்ரம்மத்தில் கரைத்துக் கொன்டுவிடும்...
தன்னை இழப்பதே துறவு, ப்ரம்மத்தில் கரைவது...
இது மரபு... அரசனை விட குருவின் தர்மம் உயர்ந்தது... ஆசனம் உயரத்தில் இருக்கலாம், சூக்ஷமம் ராஜ குருவிடத்தில்...
இல்லறத்தில் 1000 கணக்கான நியதிகள் உண்டு... ராஜ்ய, குடும்ப, நீதி பரிபாலனம்... யக்ஞ தர்ம சம்ரக்ஷணம் என்று... இந்த அனுபவங்களை பெறவே சங்கரர், அமருகன் உடலுக்குள் புகுந்தார்... மற்ற படி காமம் அனுபவிக்க என்ற கண்ணாடியை இந்த இடத்தோடு அறவே நீக்கி விடுவோம்...
சரி, அமருகன் சவத்தை பயன் படுத்தி, ஒரு பெண்ணை நம்ப வைத்து, மக்களை ஏமாற்றலாமா?! ஞாயமா? தர்மமா?!
இடையனை இழந்து பரிதவித்த பசுக்களை வீடு சேர்க்க சிவ யோகி மூலன் உருவத்தை எடுத்த நிலையில் ஒரு சூக்ஷமம் இருக்கு... பதி என்றால் தலைவன், பசு என்றால் உயிர்... பசு பதி, உயிர்களுக்கு எல்லாம் தலைவன்...
மூலன் உடல் ஒரு கருவி... சிவ யோகி (ஆன்மா) பதி - பரமாத்மா.... பசுக்கூட்டம் உயிர்கள் - ஜீவாத்மா...
அமருகன் சவம்... அதை சங்கரர் ஏற்றது சில காரிய காரணம் கருதி... அதில் குடும்ப, ராஜ, மக்கள் நலன் உண்டு... இது பற்றி விரிவாக பேசலாம் அடுத்த பகுதியில்...
No comments:
Post a Comment