முதல் பகுதியில் தமிழும் சம்ஸ்க்ருதமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது என்பதை கராவலம்பம் என்ற ஆதி சங்கரர் உபயோகித்த ஒரே ஒரு பதத்தில் உள்ள இரு வேறு தமிழ் சொற்கள் கரம், வலது ஆகியவற்றை சுட்டிக் காட்டி இருந்தேன்.
அதற்காக ஒரு லட்சுமி நரசிம்மர் படம் தேடியபோது பதிவிட்டு படம்...அதில் மனதில் பட்டது.... உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்...
யோக நரசிம்மர், மதுரை... மேலே ஸ்வர்ண கவசம்... ஸ்வாமியின் வலது கையில் ஆட்காட்டி விரலில், சுண்டு விரலில் விலை உயர்ந்த கற்கள் பாதிக்கப்பட்டு.... இடது கையில் கூட அதே விரல்கள்... ஆனால் கற்கள் நிறம், அமைப்பு... பச்சை, மாணிக்கம் போல, சதுரம், வட்டம் என...
ஜோதிடரிடம் சென்று லட்சம் கோடி என்று கொட்டிக் கொடுத்து நான் மட்டும் மஞ்சள் துண்டு, பவழ மோதிரம், சிகப்பு கயிறு, கருப்பு சட்டை அணிந்து கொண்டு, பகுத்தறிவு என்ற பெயரில் ஹிந்து தர்மத்துக்கு எதிராக ஏகடியம் பேசும் சிலருக்கு...
சுவாமி சிலையின்... மேலே அணிவிக்கப்பட்டு ஒரு கவசத்தில் கூட குறிப்பிட்ட விரல்களில் குறிப்பிட்ட ரத்தினங்கள் வெவ்வேறு உருவங்களில்... இதற்கும் ஒரு காரணம் உண்டு...
ஹிந்து தர்மம் என்பது நம் சிற்றறிவிற்கு புலப்படாத விஞ்ஞானம்...
இதை விளக்க ஒரே ஒரு சிறிய தர்மம் விஞ்ஞான விளக்கம் இங்கே...
மனிதன் கைகளில் 5 விரல்கள்... கட்டை விரல் பரமாத்மா, ஆட்காட்டி விரல் ஜீவாத்மா, நடுவிரல் தான் என்ற உயர்ந்து நிற்கும் ஆணவம், மோதிர விரல் கர்மம், சுண்டு விரல் கூடவே வரும் மாயை.
கட்டை விரல் இல்லாமல் மற்ற நான்கு விரல்களால் பயனில்லை... ஆட்காட்டி விரல் ஜீவாத்மா ஆணவம் கர்மம் மாயை என்ற மூன்று மலங்களை விட்டு விலகி, உடல் குனிந்து பணிந்து வணங்கி கட்டை விரலாகிய பரமாத்மாவுடன் இணைவது ஜீவ பிரம்ம ஐக்கிய நிலை... தட்சிணா மூர்த்தியின் சின்முத்திரை...
மோதிர விரல் கர்மா... என்று சொன்னேன்... அர்த்தனாரி ... ஆணாகி, பெண்ணாகி நின்றாய் போற்றி... வலது பாகம் சிவன்... இடது பாகம் அம்பிகை...
அதனால்தான் கிறித்தவ சர்ச் திருமணத்தில் கூட ஆணுக்கு வலது மோதிர விரலில், பெண்ணுக்கு இடது மோதிர விரலில் மோதிரம்...
கர்மத்துக்கு உரியவன் ஆண்... நல்லது செய்தால் பரிசு, தீமை செய்தால் பவித்ரம்... பர கர்மாக்கள் திருமணம் / பொரி போட மோதிரம்... இடுகாட்டு/ தர்ப்பனாதிகளுக்கு தர்ப்பை பவித்திரம்...
தாய் தகப்பனுக்கு கர்மா செய்யும் மாப்பிள்ளைக்கு மாமியார் போடும் மோதிரம் கூட சுபஸ்வீகாரம் அன்றுதான்...
பெண் பிரசவத்துக்கு நாடி இடதுகை மணிக்கட்டில்... காரணம் இதயத்துடன் நேரடி தொடர்ப்பு கொண்ட ரத்த நாடி மணிக்கட்டு வழியாக பெண்ணின் மோதிர விரலில் முடிகிறது...
இந்து தர்மத்தில் ஒரு மோதிரம் அணிவதில், நவரத்தினம் அணிவதில், நிறம், உருவத்தில், ஒரு கல் சிலையின் மேல் கவசத்தில் கூட இத்தனை விஞ்ஞானம் புதைந்து கிடக்கிறது...
நல்ல விஷயங்களை எங்காவது பதிந்து வைக்க வேண்டும் என்ற ஆவலில் நிறைய நீட்டி முழக்கிட்டேன் மன்னிக்கவும்....
மீண்டும் அதே படம்... குறியிட்டு.... சங்கரர் பின் மீண்டும், 3இல் பயணிப்போம்.
No comments:
Post a Comment