Monday, May 13, 2019

மமதேஹி கராவலம்பம் -11


தர்மத்தை ரக்ஷிக்க சில நேரங்களில் விதி மீறல் கள் சகஜம் என்று சொல்ல வந்தேன்...
அமருகன் தேகத்தில் பரகாய பிரவேசம் மூலம் புகுந்த சங்கரர், கிருகஸ்த தர்மங்களை பற்றிய அனுபவம்/ உணர்வுகளை பெற அதே நேரம் தன் உடல் தூய்மையை பாதுகாக்கவும் இப்படிப்பட்ட ஒரு சூழல் உருவாக்கப்பட்டது...
Split personality அந்நியன் நமக்கு ஓகே... கூடு விட்டு கூடு பாயும் சின்ன வாத்தியார், போகன் நமக்கு ஒகே... இனம்புரியாத ஒரு நோய் ஒருவரை ஒருவர் கடித்து பரப்பும் மிருதன் நமக்கு ஓகே...
ஆனால், நம்மை விட கோடி மடங்கு உயர்ந்த நம் முன்னோர்கள் நிகழ்த்திய அற்புதங்களை மட்டும் ஆளாளுக்கு கேள்வி கேட்போம்...
அமருகன் உடலுக்குள் இருந்த சங்கரர் இல்லறத்தில் (இரவு வாழ்க்கையில்) நெருங்கிப் போகவே இல்லை...
மன்னன் முகத்தில் இருந்த புதிய பொலிவு, முடிவெடுப்பதில் உள்ள அறிவு முதிர்ச்சி, நிதானம், வார்த்தை பிரயோகம், தெளிவு எல்லாம், நெருங்கிப் பழகிய பட்ட மகரிஷிக்கு, மந்திரிக்கு வித்யாசமாக தெரிந்தது...
அரசியும், மந்திரியும் யோசித்தனர்/ கலந்து ஆலோசித்தனர்..
கர்மா யாரையும் விடாது... சங்கரருக்கு அது பொருந்தும்... 30 நாள் trial... offer... அதற்குள் அமருகன் இல்லாமைக்கு உரிய ஏற்பாடுகள்... ஆனாலும் குறித்த காலத்துக்குள் நினைவூட்டல் வந்து சேர வேண்டும்...
ராணி, மந்திரி ஒரு முடிவுக்கு வந்தார்கள்... ஓரளவு யூகித்து... அரசன் உடலுக்குள் இருப்பது வேறு யாரோ மகான் என்பதை வெகு சீக்கிரம் உணர்ந்து, சங்கரரை அமருகனுக்கு உள்ளேயே நிலை நிறுத்திக்கொள்ள, ஞானியின் உடலை தேடிப்பிடித்து எரித்துவிட நடவடிக்கைகள் ஒரு பக்கம் ஜரூர்...
சங்கரர் கவனம் தர்மத்தின் புரிதலில் focussed.
இங்கே, ஒரு குட்டிக் கதை...
ரிஷி ஒருவர் ஒரு தவறை செய்து விட்டார்... அதற்கு விதிக்கப்பட்ட சாபம், பன்றியாக பிறக்கவேண்டும் என்று...
தன் தபோ வலிமையால், பன்றியாக இந்த இடத்தில் பிறப்பேன்... என்பதை அறிந்து அதை சீடர்களுக்கு சொல்லி... குறிப்பிட்ட காலத்தில் பன்றியாக பிறக்கும் தன்னை கொன்றுவிடவேண்டும் என சீடர்களிடம் சொல்லி விட்டு புதிய உடலை அடைந்தார்...
உரிய காலத்தில் சீடர்கள் பன்றியை தேடி கொன்றுவிட முடிவு செய்த போது பன்றி பேசியது...
சீடர்களே, என்னை கொல்லாதீர்கள்...இந்த வாழ்விலும்/ அனுபவத்திலும் புதிய சுகம் இருக்கிறது என்று சொல்லி... வராகமாகவே தன் வாழ்க்கையை தொடர்ந்தார்...
திருவண்ணாமலை கிளி கோபுர கதையை பார்த்துவிட்டு பின்னர் சங்கரர் பற்றி பேசுவோம்...
Image may contain: 1 personImage may contain: sky

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...