Monday, May 13, 2019

மமதேஹி கராவலம்பம் -3

விசுவாமித்திரர் ... காயத்ரி என்ற ஒரு திரைப்படம்... அதில் ஒரு குத்துப் பாட்டு உண்டு... கேட்டேளே அங்கே, அத பார்த்தேளா இங்கே என்று...

அதில் ஒரு வசனம் ஊடாலே வரும்... துர்வாச முனிவருக்கு இன்னும் கோபம் தீரலையோ என்று!!!

சமீபத்தில் அந்த பாடலை கேட்ட போது என் மனதில் அவர் துர்வாசரா?! தூர் வாசரா என்று ஒரு சந்தேகம் எழுந்தது... துஷ்டாரை கண்டால் தூர விலகு என்று சொல்லி இருக்கே...

ஆம், துர்வாசரை கண்டால் எல்லோரும் அவரின் பெயர் பெற்ற கோபத்துக்கு அஞ்சி தூரமாக விலகி விடுவார்கள்... அப்படிப்பட்ட மகானுபாவர் ஒரு முறை சத்ய லோகம் செல்கிறார்...

மெத்தப் படித்தவன் மொத்த முட்டாள் என்று ஒரு சொல்லாடல் உண்டு... இப்படிப்பட்டவர்கள் முன் கூட்டியே தகவல் சொல்வது, கதவை தட்டிவிட்டு உள்ளே செல்வது என்ற நாகரீகம் எல்லாம் கிடையாது.... உரிமை என்ற பெயரில் சகட்டுமேனிக்கு உள்ளே புகுவார்கள்!...

க்ருகஸ்தர்களுக்கு தெரியும் அந்த அவஸ்தை... வீட்டு வாசலில் வந்து நின்று கொண்டு, இந்த பக்கம் ஒரு வேலையாக வந்தேன்... அப்படியே உன்னை பார்த்து விட்டு போகலாம் என்று...

வீட்டில் வீட்டுக்கு உடையவன் மனைவி இருக்கிறாளா? அல்லது அவள் வேலைக்காரியா? வேறு யாராவதா?! நாம் உடன் சிலரை அழைத்து வந்துள்ளோம்... அவர்களை உபசரிக்க காபி டிகாக்ஷன் இருக்குமா? ஏதாவது உணவு ஆக்கிப் போட மளிகை இருக்குமா? அவர்கள் சூழ்நிலை என்ன?! எதுவும் யோசிக்க மாட்டார்கள்...

இப்படித்தான்.... சத்யலோகத்துக்குள் நுழைந்தார் துர்வாசர்... அப்போது, பிரம்மனும், சரஸ்வதியும் ஏகாந்தத்தில் இருக்க... துர்வாசரை கவனித்து தக்க மரியாதை செய்ய முடியவில்லை...

நல்லவனுக்கு அழகு சொல்லிக்காமல் போவது... இக்கட்டான அப்படிப்பட்ட நேரத்தில் நாகரீகமாக கிளம்பி விடவேண்டும்...

நமது patent அறிவாளிகள்... தங்கள் வரவை இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் கூட பதிவு செய்ய நினைப்பார்கள்... துர்வாசர், அந்த ரகம்.

கோபம் கொப்பளிக்க... என்னை மதிக்காத நீங்கள்... பூமியில் மானிடராக பிறந்து அவதிப்படக் கடவது😢

வந்த வேலை முடிந்தது... புறப்பட்டார்... பிரமன், சரஸ்வதி ஓடோடி வந்து துர்வாசரை சமாதானம் செய்ய- சாப விமோசனம் கேட்க... துர்வாசர் சொன்னார்.... விரைவில் பரமேஸ்வரன் பூமியில் ஆதி சங்கரராக அவதரித்து தர்மத்தை சமரக்ஷிப்பார்... அப்போது நீங்கள் மகிஷ்மதி க்ஷேத்திரத்தில் மண்டன மிஸ்ரர், சரசவாணி தம்பதிகளாக பிறந்து, சங்கரரிடம் வாதம் செய்து மீண்டும் சத்யலோகம் அடையலாம் என்று சொல்லிவிட்டு துர்வாசர் புறப்பட்டார்...

அந்த தம்பதிகள் தான் இப்போது இங்கே...

சரி, அதென்ன மகிஷ்மதி நகர்...?!

சொன்னாலும் புரியாத சுயமாகவும் தெரியாத - மெத்த படித்த மொத்த முட்டாள்கள் என்று சொன்னேன்... ஆம், துர்வாசர்... வாயில் வந்த நகர் மகிஷ்மதி... மகிஷ் - மகிஷம்- மகிஷாசுரமர்தினி - எருமை ... மதி... புத்தி....
(கடைசி para சொந்தக் கற்பனை)

பகுதி 4 இல் தொடரலாம்...

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...