Monday, May 13, 2019

மமதேஹி கராவலம்பம் -8



இல்லற தர்மத்தில் சந்தேகம் என்றாலே... நம் நினைவில் தலை தூக்கி நிற்பது கலவி... அந்த அளவுக்கு திராவிட தீமை நம்மை ஆட்கொண்டுவிட்டது...

மருத்துவரிடம் மனோ தத்துவ ஆலோசனை கேட்கிறோம்... அவர் மன நோயாளியாக இருந்து குணம் அடைந்தவராக இருந்தால் மட்டுமே, அவருடைய ஆலோசனைகள் நமக்கு பலன் கொடுக்குமா?!

லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை/ ஆங்கியோ ப்ளாஸ்ட் சிகிச்சை .. உயிரில்லா ரப்பர் துண்டு... எந்த மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படித்து வந்தது?!

அண்டப்பகுதியின் உண்டை பிறக்கும் எழுதிய மாணிக்கவாசகர் பேறு கால அவஸ்தைகளை வரிசை படுத்துகிறார்... அவரே பட்ட அவஸ்தைகளா அது?!

விண்வெளிக்கு வீரர்கள் செல்லும் முன்பு விண்கோள் வடிவமைத்த ஆராய்ச்சியாளர்களுக்கு அவிடத்திய தேவை/ அனுபவம் ?!

ஒரு விஷயத்தில் தெளிவாக முடிவெடுக்க முதலில் நாம் நம்மை அந்த பிரச்சனையில் இருந்து தனிமை படுத்திக்கொண்டு யோசிக்க வேண்டும்...

மருந்துகள் கூட எலி/ முயல்கள் மீது பரிசோதிக்கப்படுகிறது... ஒரு யூனிட், நாய் கடிக்கான வேக்சின், 10 க்கு மேற்பட்ட குட்டி ஆடுகளை கொன்று தயாரிக்கப்படுகிறதாம்!

தர்மத்தை ரக்ஷிக்க சில ப்ராயச்சித்த / பரிகாரங்களோடு சில அதர்மங்கள் தவிர்க்க முடியாதுதான்...

ராமோ விக்ரவான் தர்மக: ஆனால் வாலி வதத்தில்?!

ஒரு சாலையில் 60 கிமீ க்கு மேல் வேகமாக கார் ஓட்டுவது குற்றம்... அவனை துரத்திப் பிடிக்க பின்னால் விரட்டும் போலீஸ் 70 கிமீ வேகத்திலாவது கார் ஓட்டினால் தான் நீதியை பரிபாலனம் செய்ய முடியும்...

ஆதி சங்கரருக்கு சில அனுபவங்கள் தேவை பட்டது... சரசவாணிக்கு பதில் கொடுக்க, யதார்த்த அனுபவம் தேடி ஒரு சவத்தை (அமருகன் பிரேதம்) பயன் படுத்திக்கொண்டார்...

மகா பாரத போரில் தர்மம் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக, த்ரேதாயுகம் முழுவதும், ஏற்பாடுகள் நடந்துகொண்டே இருந்தன... Ground making...

அம்பை - சிகண்டி, கர்ணனை கடித்த வண்டு, கவச குண்டல அபஹரணம், குருக்ஷேத்திரத்தில் கூட புண்ணிய தானம் கேட்ட ஸ்ரீ கிருஷ்ணன்... அம்பை - சிகண்டி தலைமுறைகள் இடைவெளியில் நடந்த முன்னேற்பாடுகள்!

இளைஞன் ஒருவன் சதா மது மாது சூது என்றே அலைந்தான்... தந்தைக்கு மனக்கவலை.. இளைஞனுக்கு அவர்கள் குல குருவின் மீது மட்டும் கொஞ்சமாக பக்தி இருந்தது...

தந்தை, இதை பயன்படுத்தி, மகனை திருத்த எண்ணினார்... குருவிடம் கலந்து ஆலோசிக்க... ஒரு உபாயம் கண்டனர்...

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...