ஆத்மா வுக்கு தீட்டு கிடையாது... ஆனால் உடம்புக்கு... ப்ரம்மச்சரியத்தில் இருந்து சந்நியாசம்... ஆனால் சந்யாசத்தில் இருந்து கிருஹஸ்தாச்ரமம்?!
வீட்டில் ஹோமம் வளர்கிறோம்... பூரணாகுதியில், காசு போட்டு, பின் மறுநாள் அந்த காசை தேடிப்பிடித்து பிரசாதம் என்று பூஜையில் வைக்கிறோம்... சிறு குழந்தைகள் யாராவது அந்த காசை எடுத்து மிட்டாய் வாங்க கொண்டு சென்றால்... கடைக்காரன் செல்லாது என்று திருப்பி கொடுத்து விடுகிறான்... காரணம் காசின் தன்மை மாறி விடுகிறது...
விஷயம் தெரிந்தவர்க்கு அது பிரசாதம்... மற்றவர்களுக்கு செல்லாக்காசு... அந்த காசுக்கு மாட்ச்சிமை உண்டா கிடையாதா?!
பொதுவாக பார்த்தால் அதன் தன்மை மதிப்பு கூடினாலும், புற பார்வைக்கு உள்ள உருவம் க்ஷீணம் அடைந்து விட்டது...
இப்படியாக, ஹோமத்தில் இட்ட காசுகளை எல்லாம் திரட்டி அரசு அதிகாரியிடம் கொடுத்தால்... அந்த மொத்த காடுகளையும் மீண்டும் புதிய நாணயங்களாக வெளியிட ஏற்பாடுகள் செய்வார்...
தங்கத்தில் ஒரு குடம்... ஆனால் கீழே விழுந்து நசுங்கி விட்டது... தங்கத்தின் மதிப்பு குறையவில்லை... ஆனால் உருவத்தில்?!
ஆதி சங்கரருக்கு சரசவாணி கேள்விகளுக்கு பதிலளிக்க இப்போது வேறு ஒரு உடல் தேவை...
அவர் எண்ணம் போல அமருகன் என்ற அரசன் காட்டுக்குள் வழிதவறி வந்து இறந்துவிட...சங்கரர் அந்த உடலை பயன்படுத்திக்கொள்ள தீர்மானித்தார்...
சீடர்களிடம் மாற்று ஏற்பாடுகளை சொல்லி... உரிய நேரத்தில் தனக்கு நினைவூட்ட சொல்லி அதுவரை தன் உடலை தைலமிட்டு பாதுகாக்கவும் கூறிவிட்டு ... பரகாய பிரவேசம் என்ற கூடு விட்டு கூடு பாயும் உத்தியால் அமருகன் உடலுக்குள் சங்கரர் ஆன்மா?!
அமருகனை தேடி அவன் பரிவாரங்கள் அவ்விடம் வர... அமருகன் உடலுக்குள் சங்கரர்...
யாரையும் சங்கரருக்கு அடையாளம் தெரியவில்லை... ஆனால் மன்னர் தனித்து விடப்பட்டதால் குழப்பத்தில் இருப்பதாக கருதி மன்னரை அரண்மனைக்கு கூட்டிச் செல்ல..
அங்கும் எல்லோருக்கும் மன்னர் முகத்தில் ஒரு புது பொலிவு தெரிகிறது...
திருமூலர் ஜாதி இடையன்... ஆனால் அவரோ சிவ யோகி... இடையன் உடலுக்குள் புகுந்ததால் ஜாதி... தீட்டு...
இங்கு web இல் சிலர் அமருகன் உருவத்தில் 100 மனைவியரோடு சதா கால காம வேட்டையில் இருந்ததாக கிறுக்கி உள்ளார்கள்...
ஆனால் நடந்தது?
No comments:
Post a Comment