ஞானி தன் மகளை அவமானப் படுத்தி விட்டதாகவே எண்ணிய நவாப்... ஞானியை பழி வாங்க எண்ணினான்... உணவுக்காக எல்லோரும் சாப்பிட அமர்ந்தனர்...
நவாப் மற்றும் ஞானிக்கு தனித்தனி உயர மேடைகள்... நவாப் தனது ஊழியர்களுக்கு கண்ணை காட்டினான்... பரிச்சாரகர்கள் ஞானியின் முன்பு இருந்த தட்டில், மலத்தை பரிமாறினார்கள்... எல்லோருக்கும் அதிர்ச்சி... நவாப் பார்வையில் கேலி ... ஞானி எப்போதும் Mr. Cool....
நவாப் சொன்னான்... உங்கள் தர்மத்தில் எல்லாம் பிரம்மம் தானே... அதனால் தான் இப்படி.. என்று சொல்லி முடிக்கும் முன்பாக... ஞானி தன்னை ஒரு பன்றியாக மாற்றிக்கொண்டு பரிமாறப்பட்டதை தின்று தீர்த்தார்...
நவாப், ஞானியின் முன் மண்டியிட்டு கண்ணீர் சிந்தினான்...
நல்ல ஞானிகள் எப்போதும் நிதானம் தவறுவதில்லை... கணவனை காப்பாற்றிக் கொள்ளத்தான் என்றாலும், சரசவாணி தன்னை ஒரு கடத்தில் ஆவாகனம் செய்து கொண்டு, திரையின் மறைவில்... கணவனின் ஏகாக்ர சிந்தையில் ஒன்றி இல்லறம் பற்றிய கேள்விகளை சங்கரரிடம் கேட்க, அவர் கால அவகாசம் கேட்கிறார்...
இயற்கையின் நியதியை யாராலும் வெல்ல, bye pass செய்ய முடியாது... பிரம்மச்சரியம், கிருஹஸ்தாச்ரமம், வான ப்ரஸ்தம், சந்நியாசம்... முதல் படியில் இருந்து நேரடியாக 4 வது படிக்கு ஏறினால், சரச வாணியிடம் வாய்தா கேட்டே ஆகணும்...
வைணவத்தில் சந்நியாசம் என்பது முதல் மூன்று நிலைகளை குறையர வாழ்ந்த பின்னரே...
இந்த காலத்தில் சினிமா வில் கதாநாயகன் கன்னத்தில் ஒரு மச்சம்... அல்லது மாறு கை பழக்கம், என ஒரு சிறு வித்யாசம்... ஆனால் இரு வேடம் என்று நம் மனம் ஒப்புக்கொள்கிறது...
ஆதி சங்கரர் கடவுளின் அம்சம்... அதே உடலில் இருந்து கொண்டு சந்யாசத்தை ஏற்றதால் வேறு ஜென்மம் பெறுகிறார்...
இங்கே உடலுக்கு தோஷம் இல்லை... ஆனால், இல்லறதுக்கு?!
No comments:
Post a Comment