பிரம்மச்சரியம் அக்கினி... ஈசன் அன்பே சிவமாக இருக்கும் Mr. cool... அன்னை இயக்கம்... இயக்கம், உஷ்ணம்... நடராஜ பெருமானின் இடது கையில் நெருப்பு... ஈசன் அம்சமான ஆதிசங்கரர் சந்யாசியும் கூட... கழுத்தில் இருக்கும் மாலை சீக்கிரம் வாடிவிடுமே... கழுத்துமாலை என்பது ஏதாவது சூழ்ச்சியா?!
சீர்காழி உப்பனாறு அருகே கதிர் காமம் சுவாமி சமாதி உள்ளது... அங்கே ஒரு முருகன் விக்கிரகம் உள்ளது...அந்த பகுதியில் உள்ள பக்தர்கள், தங்கள் வீட்டு திருமண சடங்குக்கான மாலைகளை முதல் நாளே வாங்கி அந்த முருகனுக்கு அணிவித்து பின் திருமணத்துக்காக வாங்கிக்கொண்டு செல்வார்கள்...
மாலை வாடாமல் fresh ஆக இருக்கும்!! இது எப்படி சாத்தியம்?! காரணம், அந்த முருகன் சிலை ஜல பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது... முருகனுக்கு கீழே சதா குளிர்ச்சியான நீர் ஊரும் ஊற்று... அதன் மீது உள்ள முருகன் எப்போதும் குளிர்ச்சியாக இருப்பார் (இன்று நிலைமை வேறு... நிலத்தடி நீர் வற்றிவிட்டது).
மேலும், ஒருவன் வாதில் தோல்வி அடைந்தால் நிதானம் இழந்து, பரபரப்பாகி, உடல் உஷ்ணம் கூடி, மாலை வாடும்... எப்போதும் Mr. Cool ஆக இருக்கும் சங்கரருக்கு என்ன கவலை?
மண்டன மிஸ்ரர் வாதில் தோற்க மாலை வாட துவங்கியது...
சமையல் வேலைகளை முடித்த உபய பாரதி ஒரே வார்த்தையில் வெற்றியை அறிவித்தாள்...
கணவரை போஜனம் செய்யவும், சங்கரரை பிக்ஷைக்கு அழைப்பதும் வழக்கம்...
இருவரும் பிக்ஷைக்கு வரலாம், என்று அழைக்கிறார் அன்னை சரஸ்வதி.
அன்னையின் அடி மனதில் 1000 குழப்பங்கள்... இனி இவரும் சந்நியாசி... நான் மட்டும், இங்கே எப்படி தனியே வாழ முடியும்... சத்ய லோகத்துக்கு போய் விடலாமா?!
வேறு வழியே இல்லை, மண்டன மிஸ்ரர் ஐ காப்பாற்ற, தன் இல்லற தர்மத்தை காப்பாற்ற... உபயபாரதி சங்கரரிடம்... மனைவி என்பவள் கணவனின் பாதி, ஆகவே நீங்கள் என்னையும் வாதில் வென்றால் தான், வெற்றி உமது... என்று புது நிபந்தனை விதிக்க...
சங்கரர் ஒப்புக்கொள்ள... இம்முறை கேள்விகள் சந்யாஸ தர்மத்தில் அறியாத காமத்துப் பால் குறித்த/ கிருஹஸ்த தர்ம/ ஆச்சார பரிபாலனம் குறித்த கேள்வியாக வெளிவர...
இல்லறத்தில் அனுபவம் பெற சங்கரர் 30 நாட்கள் அவகாசம் கோர...
இங்கே ஒரு நெடிய புற வழி பயணம்...
உபயவாணி யின் கேள்விக்கு பதில் சொல்ல... ஆதி சங்கரர் இல்லற தர்மம் நாடியது சரியா?!
படித்தவன் பாட்டை கெடுத்தான்... எழுதியவன் ஏட்டை கெடுத்தான்... ஆதி சங்கரர் காமம் தேடிப்போய் வந்த கதை... நல்ல குடும்பத்து பெண்மணி sex சம்பந்த பட்ட கேள்விகளை மாற்றானிடம் கேட்பாளா...
சொரியாரிஸ்ட்கள் இப்டியேயெல்லாம் எழுதி வைத்து, தினமும் காசு கொடுத்து பல நபர்கள் அதை web இல் தேட வைத்து...
இன்றைய நவ நாகரீக பெண்கள் Dr. மாத்ருபூதத்திடம் கோடானு கோடி மக்கள் பார்க்க இரவில் தொலைக்காட்சியில் கேள்வி கேட்டால், அது பெண்ணுரிமை, முன்னேற்றம்... தன் கணவரை காப்பாற்றிக்கொள்ள, ஒரு திரைக்குப் பின்னே ஒரு கடத்தில் (குடம்) ஆவாகனம் ஆகி, நிச்சல ஏகாக்ர சிந்தை மூலம், தன் கணவனின் மனதில் கேள்விகளை உருவாக்கும் அன்னை உபய பாரதி எந்த நிலையிலும் கண்ணியம் தவறவில்லை... இதுதான் உண்மை.
நாம் விவாதத்துக்குள் போகலாம்...
இல்லற தர்மம் கடினமானது... இதை சொல்ல CBI ஆபீசர் வரணும்... அவனவன் லோல் படுவதை பார்த்து ஆளாளுக்கு கதை எழுதி டிவி பூரா இன்று சீரியல்கள் தானே!!!
சந்நியாசி ஒருவர், நவாப் சமஸ்தானத்துக்கு விவாதிக்க சென்றார்... நவாபின் மகள், சந்யாசியிடம் கேள்வி கேட்டாள்.... இல்லறம் கடினமானது என்று சொல்கிறீர்கள்... நீங்களோ சந்நியாசி, உங்களுக்கு எப்படி அந்த அனுபவம்?!
சந்நியாசி, விடை சொல்ல 2 நாட்கள் அவகாசம் கேட்டார்... பின் எல்லாம் பிரம்மம்... இறைவன் அனைத்திலும் இருக்கிறார் என்று விவாதம் நடந்தது...
விவாதம், முடியும் நேரத்தில் சந்நியாசி நவாப் மகளிடம், தனக்கு ஒரு செப்பு (தாமிர) பாத்திரம் வேண்டும் என்று கேட்டார்... இளவரசி உடனே அதை கொண்டுவந்து கொடுக்க கட்டளை இட்டாள்... பாத்திரத்தை கையில் வாங்காமல், சந்நியாசி, அதை கொண்டு வந்த ஏவலாளிடம், இந்த பாத்திரத்தை ஊருக்கு வெளியே இருக்கும் மல குழியில் போட்டு விட்டு வா என்றார்...
வேறு ஏதேதோ தலைப்புகளில் விவாதம் இரண்டு நாட்கள் கடந்து போக... சபைக்கு வந்த சந்நியாசி, நவாப் மகளிடம் ஒரு கோரிக்கை வைத்தார்...
இரண்டு நாட்கள் முன்பு ஊருக்கு வெளியில் மல குழியில் வீசப்பட்ட அதே தாமிர பாத்திரம் மீண்டும் சபைக்கு வர வேண்டும் என்று!!
பணியாளர்கள், மல குழிக்குள் இருந்து பாத்திரத்தை தேடிக் கொண்டு வந்தார்கள்... பாத்திரம் பொன் போல மின்னியது...
சந்நியாசி சொன்னார்... இது நாம் வீசிய பாத்திரம் அல்லவே.. அது களிம்பு படிந்து வித்யாசமாக இருந்ததே... இது பார்க்க பள பள என்று மின்னுகிறதே என்று கேள்வி எழுப்ப... நவாப் மகள் கலகல என்று சிரித்தாள்...
நீர் ஒரு ஞானியா?! மலம் புளிப்புத் தன்மை உடையது... அதனால் அக்குழியில் வீசப்பட்ட பாத்திரம் மினுமினுக்கிறது...
சந்நியாசி பொறுமையாக கேட்டார்... இளவரசி, மலம் புளிப்பு தன்மை உடையது என்பதை நீங்கள் எப்போது/எப்படி சுவைத்து உணர்ந்தீர்களோ அது போன்றதே நானும் இல்லறம் கடினமானது என்று சொன்னது... இளவரசி வாய் அடைக்க, இப்போது நவாப் கோபம் கொழுந்து விட்டு எரிந்தது!
அனுபவம் 6 இல் பேசுவோம்...