Saturday, June 23, 2018

வர்ணாசிரமம் 11

வர்ணாசிரமம் 11
முதல்வன் திரைப்படம் - அர்ஜூன் நடித்து சங்கர் இயக்கியது. இதில் முதல்வராக நடிகர் ரகுவரன்.
சங்கர், 3 நடிகர்களை டயலாக் பேச வைத்தாராம். ரகுவரன் - நாசர் - ராதாரவி. இதை திரைமறைவில் இருந்து எழுத்தாளர் சுஜாதா பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு - ரகுவரனிடமே யதார்த்த உணர்வு இருக்கிறது என்று பரிந்துரைத்தாராம்.
3 மணிநேர திரைப்பட கேரக்டர் தேர்வுக்கே இத்தனை பரிட்சைகள். கணக்கே இல்லாது கல்பகோடி ஆண்டுகள் கடந்த ஹிந்து தர்மத்தில் இலாகா ஒதுக்கீடு இருக்காதா?
அருளுவது பிரம்மன் - காப்பது விஷ்ணு - அழிப்பது சிவன்.
பிரம்மன் வாளெடுத்து சண்டை போடாத பிராமணர்.
மற்ற இருவரும் சூழலுக்குத் தகுந்தாற் போல ஷத்ரிய வைசிய சூத்திரராக.
விஷ்ணு துஷ்டர்களை அழித்தார் அது அவர் டிபார்ட்மெண்ட். சிவன் தேவர்கள் தவறு செய்யும் போது அவர்களையே தண்டித்தார். திருக்கருப்பறியலூர் தட்சன் /திருகண்டியூர் பிரம்மன் /திருக் கடையூர் எமன்/ திருகொற்கை மன்மதன். இது தவிர அந்தகாசுரன் - திரிபுரங்கள் கஜமுகாசுரன். யாரையோ விட்டுவிட்டேன். சரி.
வேளைக்குத் தகுந்தாற் போல உணவு - காலத்துக்கு தகுந்தாற் போல - எதிரியின் தன்மைக்குத் தகுந்தாற் போல சிவ / விஷ்ணு.
வர்ணாசிரம தர்மப்படி தேவர்கள் பிரம்மா இந்திரன் எமன் தட்சன் பிராமணர்கள் தானே! அவர்களை சுடுகாட்டுவாசியான சிவன் தண்டிக்கவில்லையா!
ஏகலைவன் விரலை குருதட்சனையாக கேட்டது பிராம்மண சதி. முப்பாட்டன் ராவணனை கொன்றது ஷத்ரிய ராமன்தானே. இதுக்கெல்லாம் பொங்கின கருணாநிதி /சாமான் பிராம்மண தேவர்களை சூத்திர சிவன் தண்டித்த வர்ணாசிரம அநீதிக்காக ஏன் பொங்கப்படாது? கேஸ் தீர்ந்துபோச்சா?
ரிஷி மகள் ராமனுக்கு/தட்ச தேவன் மகள் சிவனுக்கு/ வள்ளிக்குறத்தி முருகனுக்கு வாழ்கை துணைவியாக அமைத்தது ஸநாதனம்.
12ல் #எவர்கிங்_ஏகாம்பரம் 

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...