வர்ணாசிரமம் 13
சிவனுக்கு ப்ரியமான சாம வேதத்தை வீணையில் வாசித்ததாலேயே முப்பாட்டன் ராவணனை ராமன் போட்டுட்டாருன்னு ஒரு போராட்டம் நடத்தலாமா?
சைவ /வைணவர்களில் திரிவேதிகளும் இருக்கிறார்கள். சைவ / வைணவ ர்களுக்கு தனித்தனி வேதங்கள் கிடையாது என்பதால் சிவ / விஷ்ணு பேதமும் கிடையாது.
நாடு சுதந்திரம் அடைந்தபின் பசுமை புரட்சி / வோளாண் புரட்சி வெண்மை புரட்சி (பால்) நீலப் புரட்சி (கடல் மீன்) என வித விதமாக யோசித்த கிறித்தவ அடிமைகள் பசுமை புரட்சி என தான்சானியாவில் இருந்து சீமை கருவேல மர விதைகளை வாங்கி விமானத்திலிருந்து தூவி தமிழ்நாடு முழுவதும் பீடை மரங்களை இன்று அழிக்கவே முடியாத அளவுக்கு வளர்த்துவிட்டானுங்க.
பால் உற்பத்தி என்ற பெயரில் ரத்தத்திலே நேரடியாக சர்க்கரை கலந்துவிடும் மேல்நாட்டு ஜெர்சி உள்ளிட்ட பசுக்களின் பால் மூலம் இரத்த சர்க்கரையை ஏற்றி மருந்து கம்பெனிகள் வியாபாரத்தை பெருக்கிக் கொண்டான்.
இந்து ஸநாதன தர்மத்தில் ஸ்ரார்த - விரத- நவராத்திரி - பண்டிகை நாட்களில் எருமைப் பால் / மோர் கூட உபயோகிக்க மாட்டார்கள். ஆனால் இன்று கோவில் அபிஷேகங்களுக்கே ஆவின் அமலா பால் பாக்கெட்டுக்களே. மாடுகளைத்தான் வெட்டி சாப்பிடுவோம். கார்பண்டை ஆக்சைடு உற்பத்தி செய்து அதீத நிலத்தடி நீர் உறிஞ்சும் பீடை மரமாம் சீமை கருவேல மரங்கள் புரோட்டா கடை விறகுகளாகும் வரை வளர்த்து காசு பார்த்திடுவோம்.
விவசாய புரட்சி என்ற பெயரில் பூச்சி மருந்துகளை இரத்தத்தில் ஏற்றி மலட்டுத் தன்மை பெற்று சந்ததியே இல்லாமல் நாமே அழிந்துவிடுவோம்.
திசை மாறுகிறோமோ?! பரவாயில்லை வர்ணாசிரம தர்மத்தில் உழவு/ உழைப்பாளி பற்றி / சூத்திரன் என்ற பெயர் காரணம் எல்லாம் பேசுவோம். அப்போதுதான் வர்ணாசிரமத்தில் உள்ள ஜனநாயகம் பற்றியும் பேசமுடியும்.
14ல் #எவர்கிங்_ஏகாம்பரம்
No comments:
Post a Comment