Friday, June 22, 2018

வர்ணாசிரமம் -4

வர்ணாசிரமம் -4
ராமன் - ஷத்ரியன்
கண்ணன் - வைசியன்
சிவன் - வெட்டியான் - சூத்திரன்.
இவர்களை அந்தணர்கள் வணங்கவில்லையா?! இவர்களை வேதங்கள் ஏற்றித்தொழவில்லையா?
அதர்வண வேதமே சூத்திர வேதம் என்பதற்கான ஆதார நூல் இருக்கிறது. ஆனால் அதர்வண வேதத்தில் சொல்லப்பட்டு இருக்கக் கூடிய உலகாயத சடங்குகளை நடத்திக் கொடுப்பவனும் வைதீகனே!
Adoptability தான் அவசியம் - ஜாதி என்பது பிறப்பால் அல்ல - ஜாதி என்பது பிண்டத்தில் இல்லை - ஜாதி என்பது செய்யும் தொழிலில் / மனத் தூய்மையில் / தன்னை உணர்ந்து பரமாக உயர்த்திக் கொள்வதில் இருக்கிறது.
வால்மீகி வேடன் - வியாசன் மீனவ பெண் வயிற்றில் பிறந்தவர் - திருமூலர் நந்தியின் அம்சமாக இருந்து பசுக்களை வீடு சேர்க்க இடையன் உடலில் புகுந்ததால் அவரின் உள்ளே இருக்கும் ப்ரம்மம் அழுக்கு பட்டுவிட்டதா?
பசு பிராம்மண மிருகம் - தண்ணீர் ப்ரம்மம் - துளசி - வேம்பு பிராம்மண விருக்க்ஷங்கள். காரணம் அவற்றின் தூய்மை.
தாகத்தால் வாடிய மகரிஷி புலையனிடமிருந்து தண்ணீர் பெற்று அருந்தி விலகியதும் ஹிந்து தர்மத்தின் பதிவு. தண்ணீர் எப்படி இருக்கும் பாத்திரத்துக்காக தன்னை மாற்றிக் கொள்கிறதோ அது போல மனிதன் தனது மன வாக்கு காய சித்திகளால் தன் நிலைக்கு ஏற்ப தன்னை உயர்த்திக் கொள்ளுதல் வேண்டும்.
கொங்கண மகரிஷி வாழ்வில் அவர் வேத நெறிகளை ஒரு கசாப்புக் கடைக்காரனிடமே உபதேசம் பெறுகிறார்.
ஆக வர்ணம் ஜாதி ப்ராம்மணத்துவம் என்பது பிறப்பால் இல்லை - குணத்தால்.
எளிமையாக புரிய, விஸ்வாமித்ர மஹரிஷி - வேதமாதா காயத்ரிக்கு சந்தஸ வடிவம் தந்த மஹான், தனது ஷத்ரியகுணத்தால் எத்தனை முறை சறுக்கி விழுந்தார்.
வேதம் ஓதுவது ப்ராமணன் தொழில். அது ப்ராம்மண ஷத்ரிய வைசிய அதர்வண வேதமா என்பது ir-relavant.
5ல் தொடரலாம். #எவர்கிங்_ஏகாம்பரம்

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...