வர்ணாசிரமம் -2
வேதங்களும் 4 வர்ணங்களுக்கானது என முன் பதிவில் பார்த்தோம். முதல் பந்தில் சிக்ஸர் ஆக, அதர்வண வேதம் சூத்திர வேதம் என்பதற்கான ஆதார புத்தகம் தன்னிடம் உள்ளதாக நண்பர் சத்யநாராயண சர்மா தகவல் அனுப்பியுள்ளார்.
இனி, இங்கு சில விவாத விஷயங்களை பதிவிட்டு அதாவது ஒரு முகவுரை போல என்ன பேசப் போகிறோம் என்பதை சொல்லிவிடுவோம்.
சமத்துவம் - சாதிகள் இல்லை - வர்ணக் கலப்பு என்பதையெல்லாம் பேசி நமது தர்மத்தின் ஆணிவேரை அசைத்து விட்டுள்ளது வந்தேறிகளான கிறித்தவர்களும் / இஸ்லாமியர்களும் பின் உடனிருந்தே கொன்ற பெளத்தம் கூட இதில் விதி விலக்கல்ல.
வர்ணாசிரம தர்மத்தை கடைபிடிக்காவிட்டால் இழப்பு சமூகத்துக்குத்தான். சமுதாயம் என்ற சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியாதே. ஆக, வர்ணாசிரமத்தை ஏகடியம் பேசி இன்று ஹிந்து தர்மத்தை / தேசத்தை இஸ்லாம் கிறிஸ்தவர்களிடம் இழந்து கொண்டுள்ளோம்.
சாங்கம் உபாங்கம் பிரத்யாங்கம் - உடல் - சமத்துவம் - வேதம் - வர்ணாசிரமம் தத்துவம் குறித்து பேசப் போகிறோம்.
4 வர்ணத்தில் ஜாதிய உட்பிரிவுகள் எப்படி - உபஜாதிகள் ஏன் - இவற்றின் பகுப்பு எப்படி? என்பதையும் பேசுவோம்...
வேதத்தின் சாகைகள் - உபநிஷதங்கள் - கீதை இந்த சாதிய உட்/உப பிரிவுகளுக்கு எப்படி ஆதரமாக இருந்திருக்கும் என்பது பற்றியும் பேசுவோம்.
சைவ / வைணவ பேதம் கிடையாது - என்பதற்கு வேதத்தின் வழியிலான ஆதாரம் - ஆதி சங்கரரின் செளரம் - காணபத்யம் - கெளமாரம் - சாக்தம் - சைவ - வைணவ அடிப்படையிலான பகுப்பு பற்றியும் நாம் தெடரில் பேசலாம்.
சமத்துவம் என்று கண் மூடி பதிவை விமர்சிப்பதே நோக்கமாக வருபவர்களிடம் நாம் எழுப்ப வேண்டிய கேள்வி - ஒரே மனிதனின் உடலில் இருக்கும் இருதய/ சிறுநீரக வேலையை பரஸ்பரம் மாற்றிச் செய்ய வைக்க முடியுமா சமத்தவத்தால்?
3ல் #எவர்கிங்_ஏகாம்பரம்
No comments:
Post a Comment