வர்ணாசிரமம் -3
நான் யஜூர் வேதி - என் ஷட்டகர் சாம வேதி - உங்கள் கூற்றுப்படி நான் ஷத்ரியன் - என் ஷட்டகர் வைசியரா?
முதலிரண்டு பதிவுகளுக்குப் பின் நண்பர் ரங்கமணி எழுப்பிய விணா.
இதற்கு முன் பல இடங்களில் நாமே சொல்லியதுண்டு. கீதையிலே இருந்தும் ஸ்லோக ஆதாரத்தோடு பல விளக்கங்கள் சொல்லியிருக்கிறோம்.
வர்ணம் என்பது ஜாதி - ஜாதி செய்யும் தொழிலால் வருவது - ஜாதி அணுஷ்டிக்கும் தர்மத்தால் வருவது - ஜாதி மனிதனுக்கு / மரத்துக்கு / மிருகங்களுக்கு / உடல் உறுப்புகளுக்கு உண்டு.
மனம் வாக்கு காயம் எல்லாவற்றையும் சுத்தப் படுத்தி அவரவர்குரிய வேத நூலைப் முறையாக ஓதி வந்தால் - ஸாத்வீக ஆகாரம் - இதமான வார்த்தைகள் - உடல் சுத்தம் பேணி பக்தியோடு குராணை படிக்கும் இஸ்லாமியனும் பிராம்மணனே.
படிக்கும் நூலில் என்ன இருக்கிறதோ அதே சிந்தை - அதிலே உபதேசிக்கப்பட்டதே மனதில்.
இஸ்லாமிய கிறித்தவர்களின் மறைநூல் காமத்தை / வன்மத்தையே போதிப்பதாக அமைவதால் அவர்களால் தங்கள் நிலையை உயர்த்திக் கொள்ளவே முடியாது.
உடனிருந்தே கொல்லும் வியாதியாக பெளத்தம் - வைதீக அனுஷ்டானங்களை கண்டித்து உருவானது - இல்லற தர்மம் துறந்து - பள்ளி எனப்படும் மடாலயங்களில் தங்கி - அசோகன் ஷத்ரியனுக்குரிய தர்மத்தை விட்டு அஹிம்சை என்றும் - அக்னிப் புரோகிதம் கூடாது என்றும் விலகினவர்கள் கதி இன்று என்ன?
ஈ, ஈசல், கரப்பு, பல்லி, பாம்பு, தேள் என்று கூட இறங்கிவிட்டனர். இவர்களிடம் ஆகார நியமமே இல்லை அதனால் உடல் தூய்மையும் இருக்கப் போவதில் முடிவு மனத்தூய்மையும் ஏற்படப்போவதில்லை - விளைவு புத்த பிக்குகளே கையில் ஆயுதமேந்தியதற்கும் போரட்டம் இங்குதானே நடக்கிறது.
ப்ரம்மத்துக்கு ஜாதி ஏது தொழில் ஏது? ஆனால் புரிதலுக்காக கடவுளைக்கூட பகுத்து வைத்திருக்கிறோம்....
4ல் பேசலாம். #எவர்கிங்_ஏகாம்பரம்
No comments:
Post a Comment