Friday, June 22, 2018

வர்ணாசிரமம் -8

வர்ணாசிரமம் -8
முடியல.... குருநாதர் ராமன் கோவிந்தராஜன் சுட்டிக்காட்டுகிறார் - தர்மத்தின்பால் நின்று ப்ரம்மச்சர்யமிருந்து பொருளீட்டி கிரகஸ்தனாகி விழுதுகளை விட்டுவிட்டு வானப்பிரஸ்தியாக கடவுளை தேடியலைந்து ஞானம் பெற்று சந்யாசம் எனும் 4 வாழ்வியல் நிலைகளை விட்டு விட்டதை சுட்டிக் காட்டினார்.
மற்றும் ஒரு நண்பர், ஹிந்து தர்மத்தில் உயிர் தான் பிரதானம் வர்ணம் பிறப்பு என்ற discremination கிடையாது.
மச்ச கூர்ம வராகத்தில் மனித கலப்பே கிடையாது அவர்களையே நாம் கடவுளாக வழிபடுகிறோமே என்றார்.
மீனவ பெண்ணின் மகன் வழிப் பேரன் கிளித் தலை சுகப்ப்ரம்மத்தை - மாண்டூக்ய / கேன/ தைத்ரீய உபநிஷதம் சொல்லிக் கொடுத்த தவளை எருமை குருவி என எழுதி முடியாது.
மனிதனுக்கும் மிருகத்துக்கும் பறவைக்குமிடையில் கூட பேதம் காணப்படாத ஹிந்து தர்மத்தில் மனிதனுக்குள் மனிதன் ஜாதி வித்யாச த்வேஷம் வந்தே இருக்க முடியாதே!
வித்யாசம் எல்லாம் குணத்தின் பொருட்டே. எப்படி கன்று பன்றி புலி ஆடு ஒன்றிணைய முடியாதோ அது போலவே!
வர்ணாசிரமம் ஜாதீய வக்கிரத் திணிப்பு என்று கூப்பாடு போடுபவன் வீட்டில் கடுகு சீரகத்துக்கு மட்டும் ஏன் தனித்தனிப் டப்பி? எல்லாமே உணவுதானே? பாலையும் மோரையும் ஒரே பாத்திரத்திலா கொட்டி வைக்கிறான்? அவன் வீட்டில் வேலைக்காரனிடம் கல்லா சாவியை கொடுத்துவிட்டுப் போவானா?
கேட்டால் தராதரம் பக்குவநிலை உறவு பேதம் என்பான்? அது போலவே 4 வர்ண பேதம்.
விக்கீபீடியா பிரமாணம் அல்ல இருப்பினும் good for beginners - pls refer for further infos on vedas - subdivisions - history etc.
நாம் 9ஆம் படி ஏறி மேலே போகலாம்!
#எவர்கிங்_ஏகாம்பரம் 

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...