Friday, June 22, 2018

வர்ணாசிரமம்-1

வர்ணாசிரமம் -1
இந்த பதிவை படிப்பவர்கள், பதிவாளர் ஒரு சாதி வெறியர் எனத் திட்டுவார்கள். அது பற்றி நமக்குக் கவலையில்லை. அவரவர்க்கு என ஒரு அபிப்பிராயம். அதுபோல இது எனது.
வர்ணசிரம தர்மம் என்பது கடவுளால் நமக்குத் தரப்பட்ட கொடை. கீதையில் கூட ஜாதிக் கலப்பு கூடாது - அது கேடாய் முடியும் என்று சொல்லப்பட்டுள்ளது.
4 ஜாதிகள் என பிராம்மண ஷத்ரிய வைசிய சூத்திரர்கள் வகுக்கப்பட்டுள்ளனர். இது நமது நான்கு வேதங்கள் போன்றது.
ருக் வேதம் என்பது அறிவுசார் தத்துவங்களை குறித்து பேசுகிறது - யஜூர் வேதம் என்பது தர்மத்தின்பால் நின்று மனித வாழ்கைக்கான வாழும் வழிமுறைகளை வகுக்கிறது - சாமவேதம் என்பது மனிதனுக்கு கனிவான தோத்திரங்களை - பேச்சை - கடவுளின் துதியாக சொல்லித்தருகிறது - அதர்வண வேதம் சாதாரண சரீர லெளகீக உலக வாழ்வினில் விஷய சுகங்களை பெறுவதற்கான உபதேவதைகளுக்கான வழிபாட்டுமுறை விதிகளை நமக்குத் தந்துள்ளது.
ருக் வேதம் என்பது அறிவுசார் தத்வார்த்தமான விஷயமாக பிராமணர்களுக்கானது.
யஜூர் வேதம் என்பது தர்மத்தின்படி வாழும் விதிமுறைகளை அறிவின் படி ஒரு ராணுவக் கட்டுப்பாட்டோடு உபதேசிக்கிறது - எனவே இதை ஷத்ரியர்களுக்கானதாக கொள்ளலாம். யஜூர் என அஸ்திர வித்தை குறித்தும் சொல்லப்பட்டுள்ளது.
சாமவேதம் ஒலியை / வாக்கை அடிப்படையாகக் கொண்டுள்ளது - இது முழுக்க முழுக்க தோத்திரம் - வைசியனுக்கு முக்கிய தேவை வாக்கு சாதுர்யம்தானே.
சாதாரண அடித்தட்டு மக்களுக்கு உலக வாழ்வும் அன்றாடப் பிரச்சனைகளும் அதற்கான லெளகீக தேவைகளையும் பெற்றுத் தரக்கூடியது அதர்வண வேதம்.
ஆக ருக் பிராம்மண யஜூர் ஷத்ரிய சாம வைசிய அதர்வண சூத்திர வேதங்களாக வரைப்படுத்தப்படலாம்.
4 வேதங்களில் உள்ள உள் சாகைகள் 4 வர்ணங்களில் உள்ள சாதிய உட்பிரிவுகள்
2ல் தொடரும்.
ஜாதிக் கலப்பு அதனால் ஏற்படும் இழப்பு ஜாதிப் பிரிவு உபஜாதி - வேதம் - ஜாதி- உடல் - சமத்தவ கோஷம் குறித்த எல்லா விஷயங்களுக்கான விளக்கங்களும் படிப்படியாக வரும்.
#எவர்கிங்_ஏகாம்பரம் 

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...