வர்ணாசிரமம் 14
கணக்குப் பாடத்தில் formula என்று சொல்வதை தமிழில் என்ன சொல்லுவாங்க?
*சூத்திரம்*
பட்டம் பறக்க ஊடால ஒரு வில் அம்பு அமைப்பாங்களே அதுவும் சூத்திரம்.
சூத்திரம் என்பது அடிப்படை ஆதாரம்டா!
மனித குல வாழ்வுக்கு - உலகின் நித்திய இயக்கத்துக்கு அடிப்படை ஆதாரமாக இருப்பதாலேயே அவர்களுக்கு சூத்திரர் என்று பெயர்.
இத்தனை கெளரவமான ஒரு புகழ் ஒலிக்கும் பெயரை உச்சரித்தாலே குற்றம் / தண்டனை என்று சட்டமியற்றி சமநீதி பெருச்சாளிகள் அசிங்கப்படுத்தியது யாரை?
கண்ணனை துதிக்கும் பாடல் ஒன்றில் கபடநாடக சூத்ரதாரி என்று பாடுவாங்க.
மற்ற சாதிக்கு எல்லாம் அவன் தொழிலால் பெயர் - பிரம்மத்தை ஹணம் செய்பவன் - ஷட்திரியன் போர் செய்பவன் வைசியன் வியாபாரி. ஆனால் சூத்திரன் தெய்வீகப் பெயர் - அடிப்படை இயக்கத்தின் சூக்க்ஷமப் பெயர். சமூக நீதி என்ற பெயரில் அசிங்கப்பட்டு அடையாளத்தை தொலைத்து விட்டோமே!
இப்படி சமூக இயக்கத்துக்கு அடிப்படையாக இருந்து இயற்கையோடு இணைந்து உழைத்து சமூகத்துக்கு தொண்டாற்றிய மக்களை கை தூக்கிவிடுவதாகக் கூறி/ டிரக்டர் - யூரியா - மின் மோட்டார் என விவசாயப் புரட்சியின் பெயரால் ஓய்வளித்தோம்!
இடுப்பு வளையாததால் இரவில் உறக்கமின்றி அவன் உணவு உற்பத்தியை மறந்து உயிர் உற்பத்தியில் இறங்கினான். மின் மோட்டர் வரவால் ஆறு ஏரி குளங்களை பாதுகாக்க மறந்து நிலத்தடி நீரை நம்பி - பசும் சாணத்தை மறந்து யூரியா நம்பி விஷம் திண்ணத்துவங்கி.
ஆறுகள் நீர் நிலைகள் பராமரிப்பின்றி ஆக்ரமிக்கப்பட்டது காரணம் ஜனத்தொகைப் பெருக்கம் - வசிப்பிடம் கட்ட மணற்க்கொள்ளை. நிலத்தடி நீரும் விழ - அமுதம் விளைவிக்க சாணம் கொடுத்த மாடுகள் வெட்டட்பட! சீ சீ எத்தனை பட்டாலும் புரியாத பதர்களடா...
job security பற்றி 15ல் பேசுவோம். #எவர்கிங்_ஏகாம்பரம்
No comments:
Post a Comment