வர்ணாசிரமம் - 23
ராஜா ஒருவர் வேட்டையாட போகையில் காட்டுவாசி ஒருவன் தனது நீண்ட தலைமுடி தடாக நீரில் புரளுவதை கூட உணராமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனை கண்டார்.
சலிப்பற்ற கடும் உழைப்பே அவனது இந்த நிலையிலான உறக்கத்துக் காரணம் என்று எண்ணி பரிசுகளும் அரசு விருந்து மற்றும் வேலை கொடுத்தார்.
கைநிறைய சம்பளம் ராஜபோக வாழ்க்கை குடி பெண்கள் சூது. இப்படி சில காலம் போக - மந்திரி இதை சீர் செய்து அரசனுக்கு உணர்த்த எண்ணி ஒரு நாள் அந்த காட்டு மனிதனாக இருந்து அரசு ஊழியனான அவன் வீட்டு வாசலில் சில பச்சை வாழை மட்டைகளை பரப்பி அதன் மீது வெறும் காலோடு கடந்து வரச் செய்து அரசன் முன் நிறுத்தினார்.
இது போல அடுத்தடுத்த நாட்கள் நடக்க மூன்றாம் நாள் அவனுக்கு கடுமையான ஜன்னி. வாழை மட்டை EFFECT. தடாகத் தண்ணீரில் தலைமுடி கிடக்க உறங்கியவன் இன்று சில தப்படிகள் வாழை மட்டை மீது நடக்க ஜன்னி ஜூரம்.
சலுகை / முன்னுரிமை / இடஒதுக்கீடு என இன்று இதைத்தான் நமது அரசுகள் செய்கிறது.
வர்ணாசிரம தர்மத்தை வெட்டி வீழ்த்தி விட்டோம். சுக வாழ்வு வாழ்ந்து விட்ட கடும் உழைப்பாளிகள் தங்கள் உழைப்பை மறந்து உரிமையை மட்டும் கோரி - இனி அதை விட்டுக் கொடுக்கவும் போவதில்லை.
வர்ணாசிரம தர்மம் தெரியாது அதை விட்டொழித்த இந்த தேசம் இனி உருப்படாது. நாடும் மக்களும் நாசமாகவே போகட்டும்.
-முடிந்தது- #எவர்கிங்_ஏகாம்பரம்