Sunday, March 17, 2019

வதந்தி/அவதூறு-1

சத்தியமா
ஆன்மீக_கதை
.... ஒன்றை அரசியலோடு முடிச்சு போட்டு...
அந்த அழகிய கிராமத்தின் ஆற்றோர மரத்தடியில் ஒரு இளம் துறவி வந்து தங்கி இருந்தார்.
வயது 26 இருக்கலாம்...
கட்டுடல், பொன் நிறம், முகத்தில் தெய்வீக அழகு, பார்பவரை சுண்டி இழுக்கும் வசீகரம், நளினமான அறிவார்ந்த பேச்சு....
ஆனால், நிஜத்தில் ஒரு நல்ல துறவி.
வலிய வந்து பேசமாட்டார். யாராவது அருகில் சென்று ஏதாவது உணவு, பேச்சு கொடுத்தால் இரண்டொரு வார்த்தை பேசுவார். பெரும்பாலும் மௌனம்/ தியானம்.
தவ வலிமை கூடக் கூட மக்களும் (ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள்) தினமும் வந்து நமஸ்கரித்து விட்டு சென்று விடுவார்கள்.
துறவிக்கும், அந்த ஆற்றங்கரை, சுகாதாரமான சூழல், மக்கள் பண்பு எல்லாமே மிகவும் பிடித்துப் போக, அங்கேயே தங்கிவிட்டார்.
6/8 மாதங்கள் போக ஊரில் சில பெண்களுக்கு பிரசவம் ஆனது, பிறந்த குழந்தை துறவியின் முகச்சாயலில்.
ஊர் பெரிய மனிதனுக்கு, பஞ்சாயத்தார் எல்லோருக்கும் பயங்கர அதிர்ச்சி...
பாமரர்கள், சந்தேகம் பொறி தட்ட, துறவி குறித்து அவதூறு பேசினார்கள்... ஒரு கட்டத்தில் ஊரில் உள்ள ஆண்கள் எல்லோரும், தங்கள் மனைவிகளை காப்பாற்றிக்கொள்ளவதாக எண்ணி, துறவியை தாக்க முற்பட்டு, ஊரை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டனர்.
துறவி, அழகாக அமைதியாக புன்சிரிப்பு சிரித்து விட்டு சொன்னார்...
எனக்கு தீக்ஷை தந்த குரு ஒரு சில உபதேசங்கள் சொன்னார், அதில் முக்கியமாக, எந்த ஊரிலும் 3 இரவுக்கு மேல் தங்குவது கூடாது என்பதும் ஒன்று!
இந்த அமைதியான சூழலில் குருவின் உபதேசத்தை மறந்த பாவி ஆனேன். இப்போது அனுபவித்தே ஆகவேண்டும்.
இனியும், இந்த ஊரில் தங்குவதாக இல்லை. ஆனால், நான் சென்ற பிறகும், உங்கள் வருத்தத்துக்கு காரணமான பிறப்புக்கள் மீது உங்கள் வெறுப்பு வாழ்க்கை முழுவதும் தொடரும். அது உங்கள் குடும்ப அமைதியை கெடுத்துவிடும். எனவே இன்னும் ஒரே ஒரு வருடகாலம் காலம் கழித்து ஒரே ஒரு முறை இந்த ஊருக்கு வந்து செல்ல அனுமதி கொடுங்கள் என்று கேட்க....
பஞ்சாயத்தார் அனுமதி கொடுத்தார்கள். ஆனால், எங்கள் பிராண சங்கட சந்தேகம் எப்படி தீரும் இளைஞனே என்று கேட்டார்கள்.... (சில நாட்கள் முன்பு துறவி, இப்போது அவதூருக்குப் பின் இளைஞனே!!! நன்றாக கவனியுங்கள் - இதுதான் உலகம்)
நம் துறவி சொன்னார், எனக்கு சர்வ லக்ஷணம் பொருந்திய உயிர் உருவமாக தோன்றும் ஒரு நிஜமான காளையை போன்ற உருவ அளவுள்ள பிரதிமை ஒன்று வேண்டும் என்று கேட்க....
ஆசாரிகள் வந்து 3 மணி நேரத்தில், தத் ரூபமாக காளை உருவம் ஒன்றை தயாரித்து கொடுத்தனர்..
தொடரும்....2

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...