Sunday, March 17, 2019

வதந்தி/அவதூறு-2

துறவியின் வேண்டுகோள் படி தயாரான அந்த காளை யின் பிரதிமை ஊரின் முக்கிய இடத்தில் வைக்கப்பட்டது.
ஊரில் உள்ள பசுக்கள் யாவும் அந்த காளையை சுற்றி சுற்றி வந்தன. சில மாதங்கள் கழித்து அந்த ஊரில் கன்று ஈன்ற பசுக்கள் எல்லாம் அந்த பொம்மை காளை யின் உருவத்தை போலவே கன்றுகள் ஈன்றன.!
குழந்தை கர்ப்பத்தில் இருக்கும்போது நல்ல விஷயங்களை படித்து பேசி பார்த்து பழக வேண்டும். பிரகலாதன் தன் தாயின் வயிற்றில் இருந்தபோது அவனுக்கு நாரதர் நாராயணன் பெருமைகளை சொல்லி வைத்தார்...
சுபத்ரா வயிற்றில் அபிமன்யு இருந்தபோதே அர்ஜுனனின் போர் பராக்ரமங்கள் கேட்டு வளர்ந்தான்...
அது போல வேறு வேறு காளை களோடு ஜோடி சேர்ந்த பசுக்கள் தங்கள் மன ஓட்டம் காரணமாக பிரதிமை காளை சாயலில் கன்றுகள் போட்டன.
குறித்த நாளில் இளம் துறவி ஊருக்குள் வந்தார். பஞ்சாயத்தார் முன்னிலையில் அமர்ந்து ஊரில் இருந்த பசு கன்றுகள் அனைத்தையும் பார்வையிட்டார்...
பஞ்சாயத்தார் எல்லோரும் குழம்பி நிற்க, உயிரற்ற காளை யின் சாயலில் வீடுதோறும் பசும் கன்றுகள் எப்படி என்று கேட்டார்...
மக்கள், துறவி மீது அபாண்டமான குற்றம் சுமத்தி விட்டோம் என்பதை புரிந்து கொண்டு மன்னிப்பு கோரி அவர் மீண்டும் இங்கேயே தங்க வேண்டும் என்று கோர, துறவி மறுத்து விட்டார்.
இந்த நிலையில் பஞ்சாயத்தார் செய்த தவறுக்கு ஏதாவது பிராயச்சித்தம் உண்டா என்று கேட்க,
துறவி ஒரு மூட்டை பஞ்சு எடுத்து வரச்சொல்லி, கட்டை அவிழ்த்து பஞ்சை பரக்கவிட சொன்னார்...
பஞ்சாயத்தார் அவ்வண்ணமே செய்து, மிக சுலபமான பிராயச்சித்தம் என்று எண்ண... துறவி புறப்பட தயாரானார்...
மக்களே, இப்போது பறக்க விட்ட பஞ்சுகளை மீண்டும் சேகரித்து எடை /பஞ்சு மாறாமல் மீண்டும் அதே மூட்டையில் கட்டுங்கள் என்றார்.!
*#முடியுமா?*
இந்த உலகத்தில் அவதூறு பரப்புதல் வதந்தி பேசுதலுக்கே மிகவும் கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும். தூக்கில் கூட போடலாம் என சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்.
அவதூறு பேசி, கடைசியில் வழக்கு மன்றம் சென்று நிபந்தனை யற்ற மன்னிப்பு கோரி கடிதம் கொடுத்து தப்பி விடுகிறார்கள்.
பஞ்சாபில் மக்கள் போதைக்கு அடிமை, அதை சப்பிளை செய்தவர் இன்னார் என்றெல்லாம் சொல்லி அங்கே ஆட்சி மாற்றமும் நடந்து விட்டது... இப்போது கெஜ்ரிவால் மன்னிப்பு கடிதம் தருகிறான்...
சட்டங்கள் திருந்தாதவரை இந்த நாடு உருப்படவே உருப்படாது.
No photo description available.

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...