Sunday, March 24, 2019

சம்புகன் வதம்-3

சம்புகன் தனது பூர்வ/ முந்தைய பிறவியில் ஒரு ரிஷி குமாரன்...
இளமை/ பருவ விதி வசத்தால், பவித்ரமான அவன், தன் சித்தி வயதுடைய பெண்னிடம் ஒரு அசாதாரணமான சூழலில் காமத்தை அனுபவித்து விட... இதனை அறிந்த சான்றோர்கள், அந்த ரிஷி குமாரனை கர்ம சண்டாளனாக பிறக்கும்படி சபித்தார்கள்... (கர்ம சண்டாளன் என்பது, அவரவர் குல வழக்கப்படியான கர்மாக்களை விட்டு/ அல்லது மீறி செயல் படுவது...
ரிஷி குமாரனாகிய அவன், தனக்கு கொடுக்கப்பட்ட சாபத்தின் படி, சம்புகன் என்ற தாழ் சாதி இளைஞனாக பிறக்கிறான்...
ஜென்ம வாசனை காரணமாக, தவத்தினை மேற்கொண்டு - அதே நேரம் சாபத்தின் காரணமாக தன்னை தவம் செய்வதற்கு தகுதி உரிய ஒரு மனிதனாக உயர்த்திக் கொள்ளாமல், தனக்கு விதிக்கப்பட்ட கர்மாவை மீறும் சண்டாளனாக தவத்தில் ஈடுபட...
ஸ்ரீ ராமபிரானால் தண்டிக்கப்படுகிறான்...
ஆனால், இங்கும் கூட சம்புகன் வதத்தில் ஸ்ரீ ராமன் செய்தது உயிரிடத்தே/ ரிஷிக்குமாரனிடம் உள்ள அன்பின் காரணமாகவே...
சம்புகன் மீது ராமனின் அன்பு என்ன என்பது குறித்த... சம்புகன் விஷயத்தில் உரிமை மீறல் எதுவும் இல்லை.... வதம் ஒரு சலுகையே என்பது குறித்து பதிவு 4 இல் பேசலாம்! 

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...