Wednesday, March 13, 2019

தர்மம் தொலைந்துபோன இடம்

நம் தேசத்தில் தர்மம் தொலைந்து போன முதல் இடம் எது தெரியுமா?
வெளிநாட்டு பாணியில் நமது பாரதத்தின் குடும்பப் பெண்கள் - அழகு சாதனைப் பொருட்கள் துணையோடு தங்களை இளமையாக காட்டிக் கொள்ள துவங்கிய இடத்தில் தான் நம் தேசத்தில் தர்மம் தொலைந்து போன முதலிடம். புராணத்தில் ஒரு கதை உண்டு.
சிரஞ்ஜீவி ஆஞ்சநேயன் ஒரு முறை துவாரகைக்கு வந்த போது - கிருஷ்ணன் ஹனுமனுக்கு ராமனாக காட்சி அளிக்க முன் வந்து சத்யபாமாவிடம் சொல்ல - சத்யபாமா மிகுந்த ப்ரயத்தனப்பட்டு தன்னை சீதையாக அலங்கரித்துக் கொண்டு ராமனாக காட்சி தந்த கிருஷ்ணன் அருகில் பாமா சீதை வேடத்தில் அமர.
ஹனுமன் அதிர்ச்சி அடைந்து - சத்யபாமா பேயை போல இருப்பதாக சொல்ல,
உடனே கிருஷ்ணன் ருக்மினிக்கு தகவல் சொல்ல,
ருக்மினி கையில் ஒரு துளசி தளத்தோடு அப்படியே வந்து ராமன் உருவில் இருந்த கிருஷ்ணன் அருகில் அமர சீதையாக அனுமன் கண்களுக்கு தெரிந்தாளாம்.
ஆக, பக்தியும் எளிமையுமே பிரதானம்... ஆனால் இன்றைக்கு என்ன நடக்கிறது?
வயதான காலத்தில் பொழுது போக்கு என்ற பெயரில் சமையல் கலை அழகுசாதனக் கலை கற்கிறேன் என்ற பெயரில் நம் குடும்பத்து பெண்கள் ஆடம்பரத்துக்காக வயதுக்கு ஒவ்வாத உணவு சமைத்து அதை குடும்பத்தாரிடம் சாப்பிட வற்புறுத்தி.
வயதுக்கு ஒவ்வாத வகையில் தன்னை அலங்கரித்துக் கொண்டு தொலைக்காட்சி முன்னாலும் - கண்ணாடி முன்பும் நேரத்தை வீணடித்து.
ஜிமிக்கி மாட்டல் என்பது சிறுவயது பெண்கள் அணியும் நகை - இன்று பாட்டிகள் கூட
மேட்சிங் உடை என்ற பெயரில், மார்டன் என, சுடிதார் லெக்கின்ஸ் ஜீன்ஸ் பாவாடை தாவனி சாரி என மோகம் கொண்டு .
பெண்களே! கணவன் கண்களுக்கு மட்டும் அழகாய் தெரிய வேண்டிய நீங்கள் அழகு சாதனங்களைக் கொண்டு உங்கள் வயதை குறைத்துக் கொண்டு உங்களை யாருக்காக அலங்கரித்துக் கொண்டு அலைகிறீர்கள்?
பிற ஆண்கள் கண்களுக்கு நீங்கள் அழகாக தெரிய வேண்டும் என நீங்கள் நினைப்பது போலவே பிற மகளிரும் நினைப்பதாலேயே உங்கள் வீட்டு ஆடவரை கவர அவர்களும் உடை உடுத்துகிறார்கள்?!
உங்களை பிற ஆடவர் ரசித்தாலும் உங்கள் கற்பு நெறி தவறாது என்று உங்களை நம்ப வேண்டும்.
ஆனால், உங்கள் கணவர் உங்களைப் போலவே அலங்கரித்துக் கொண்ட வேறு ஒரு பெண்னால் கவரப்பட்டால்!
பெண்னுரிமை குய்யோ முறையோ....

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...