நீட்டிக்கொண்டே போவது நோக்கமல்ல! வாதங்களை சரியாக முன் வைக்க வேண்டும்.
முதல் பதிவை படித்த உடன், வயதில் மூத்த நண்பர் ஒருவர் வலியுறுத்தினார்... அதனால் தான் இத்தனை தடம் மாறி /படலம் தாண்டி பதிவுகள்...
இனி, சம்புகன் வதம் தொடரில்,
உமாபதி சிவம் - சாம்பான் சம்பவம் குறித்து - கால தேச வர்த்தமானம் குறித்து - யுக தர்மம் குறித்து கொஞ்சம் பேசிவிடுவோம்.
சைவத்தில் மெய்கண்ட சாஸ்திரங்கள் மொத்தம் 18. அதில் 2 வது சிவஞான சித்தியார். இதை இயற்றியவர்... உமா பதி சிவாசாரியார்...
தீக்ஷிதர் வம்சத்தில் தில்லையில் கொற்றவன் குடியில் பிறந்த இவர் (சிவாச்சாரியார்?/ தீக்ஷிதர்?)
அதாவது சில 100 ஆண்டுகள் முன்பு கூட ஆதி சைவர்/ தில்லை வாழ் அந்தணர்கள் என்ற பேதம் இல்லை போல தெரிகிறது.... ஆனால் இன்று ஆதி சைவர்/ வழக்கமான அந்தணர் மரபின் ஊடே கருத்து வேறுபாடுகள் உருவாகி விட்டது.
ப்ரம்மண சைவர்களுக்கும் / வைணவர்களுக்கும் இன்று கருத்து வேறுபாடுகள் இருக்கு....
ஆனால், சந்தியா வந்தனத்தில்?! குல ப்ரவரம் கோத்திரத்தில்?!
ஸ்ரீ Raman Govindarajan வைணவர்... நான் பெயரிலேயே ஸம்கரன்... ஆனால் எங்கள் இருவரின் கோத்திரமும் கௌண்டின்யம்!!!
ஆக, எங்களுக்குள் சந்தியா வந்தனம், காயத்ரி ஜெபத்தில், வேத மந்திரத்தில், குல மூத்தோர் ரிஷி (கோத்திரத்தில்) வித்யாசம் இல்லை... பின் இன்றைய வித்யாசம், உயர்வு-தாழ்வு எங்கே இருந்து வந்தது?!
பேதங்கள் இடையில் ஏற்படுத்தப்பட்டது, புகுத்தப்பட்டது...
சாத்தான் மீது கல் எறிவதாக இஸ்லாமிய சடங்கை கூட சாக்கிய நாயனார் கதையாக இந்து தர்மம் என்றோ சொல்லி விட்டது...
இங்கே வாசு அங்கே ஏசு, இங்கே பசு, அங்கே ஆடு, தொழில் என்னவோ மேய்ச்சல்... ஆனால் சொல்லப்பட்ட காலம் வேறு வேறு...
விஷயம் ஒன்று... அணுகுதலில் மாற்றம் மட்டுமே மிச்சம்...
சம்புகன் சூத்திரன், அவனை ராமன் கொன்று விட்டான்.... குற்றச்சாட்டு!
உமாபதி சிவத்துக்கு நித்திய வேள்விக்கு சமித்துகள் (ஓம குச்சி) அளித்து வந்த சாம்பானுக்கு உமாபதி சிவம் முக்தி அளிக்கிறார்... பின்னால் சாம்பான் மனைவியை தூண்டி விட்டு உமாபதி சிவத்தின் அருமை தெரியாமல் புகார் பஞ்சாயத்துக்கு செல்ல...
உமாபதி சிவம் தனது வலிமையால் தானே கைலாச பதவி அடைந்து இருக்கலாம், அல்லது தனது சீடர்களில் ஒருவருக்கு முக்தி கொடுத்து இருக்கலாம்...
உமாபதி சிவம், தனது ஆத்ம வழிபாட்டு மூர்த்தியின் அபிஷேக தீர்த்தம் விழும் இடத்தில் இருந்த கோமுகிக்கு கீழே இருந்த கள்ளிச் செடிக்கு முக்தி கொடுத்ததும் உண்மை...
நீதி/ தர்ம/ உயர்ந்தோர் முடிவுகளில் ஞாயம்/ தர்மம்/ நேர்மை / சத்தியம் மட்டுமே இருந்தது...
சமூக தர்மம் குறித்து/ யுக / வர்ண தர்மம் குறித்து இன்னும் கொஞ்சம் விரிவாக பேச வேண்டி உள்ளது... அப்போதுதான் இந்த வாதம் நண்பர் கேட்டது போல அதனுடைய logical end வரை சென்று அடையும்... ஆகவே பகுதி 7 இல் பேசலாம்.
No comments:
Post a Comment