புரிதல் முக்கியம்! பலமுறை சொல்லியாச்சு, ஜாதி என்பது குணத்தால்!!! குலம் என்பது அவரவர்கள் மனோ நிலையால்... வேடுவ வால்மீகி - ரிஷி! வேசி மகன் குணத்தால் பிராம்மணன் ஆகுதல்... கொங்கண மகரிஷிக்கு ஒரு புலால் வியாபாரி குருவாக இருந்து உபதேசித்த கதை...
ஆனாலும், குறுக்கே ஏதோ ஒரு பகுதியை மட்டும் படித்து விட்டு, அவர்கள் செய்தால் தப்பு கிடையாதா என்று!!!
மனோ-வாக்கு-காய சுத்தி தான் ஒருவனின் வர்ணத்தை நிர்ணையிக்கிறது என்று...
கீதை - அத்தியாயம் 17 ஸ்லோகம் 14
தேவர்கள், ப்ரம்மணர்கள், குரு, அறிவின் மிக்கோர் இவர்களுடைய பூஜையும், சுத்தமும், நேர்மையும், ப்ரம்மச்சர்யமும், அஹிம்சையும், சரீர சம்பந்தமான தவம்!
காயம்!
ஸ்லோகம் 15
கடுமை இல்லாததும், உண்மையானதும், பிரியமானதும், நன்மையை கருத்துவதுமான வார்த்தை எதுவோ, அதுவும் தமக்குரிய வேதம் ஓதும் பழக்கமும் வாக்கால் செய்யும் தவம்.
வாக்கு.
ஸ்லோகம் 16
மனதின் தெளிவு, அன்புடைமை, மௌனம், தன்னடக்கம், பரிசுத்தமான நோக்கம் என்ற இவை மனதால் செய்யும் தவம்.
வாக்கு.
இஸ்லாமியனாக பிறந்த ஒருவன் உடல் சுத்தம் பேணி, கிரித்தவனாக மதம் மாறி வாக்கு சுத்தத்தை கடை பிடித்து பின்னர் பௌத்த துறவியை போல மனதால் செய்யும் மேற்படி தவத்தை கடைபிடித்தால் அவனும் பிராம்மணன்....
ஜாதியை நிர்ணயிப்பது பிறப்பு அல்ல, குணம்!
சம்புகன் பூர்வ ஜென்மத்தில் ரிஷி குமாரன், காம இச்சை கொண்டு உடலால் மனதால் கெட்டு மனதால் கர்ம சண்டாளனாகி சலுகை (ஸ்ரீ ராம அணுகிரஹத்தால் சலுகை, wild card entry, cake walk, walk over பெற்ற கதையை நாம் படித்துக் கொண்டு இருக்கிறோம்) பெற்றான்.
இந்த சலுகை எப்படிப்பட்டது தெரியுமா?!
சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் மற்றும் சேரமான் பெருமாள் நாயனார் முறையே வெள்ளை யானை மற்றும் குதிரை ஏறி திருக்கயிலாயம் செல்ல புறப்பட்டனர்... தங்களோடு அவ்வை பாட்டியையும் அழைத்துச் செல்ல அவர்கள் விரும்பிய நிலையில், அவ்வையார் தன் நித்ய கர்மானுஷ்டான கணபதி பூஜை செய்து கொண்டு இருந்தார்.
சுந்தரர், சேரமான் தூததர்கள் பூஜையை விரைந்து முடித்து புறப்பட கோர, அவ்வை மறுத்து விட... அந்த கர்மம் தவறாத நிலையால் பூஜை முறையாக முடிந்த உடன் ஸ்ரீ கணபதி தன் தும்பிக்கை கொண்டு அவ்வை யை தூக்கி சுந்தரர், சேரமான் பெருமான் ஆகியோரின் ஐராவத, குதிரை சவாரி யை விட வேகமாக முன் கூட்டியே கைலாயத்துக்கு கொண்டு சேர்த்ததும் சைவ உண்மை!
கர்மம் தவறாதீர்கள் என்பதே புரிதல். கடை பிடிக்க வேண்டிய தத்துவம்.
ஒரு, சிறு தன்னிலை விளக்கம். ஒரு தொடர் பதிவு எழுதும் போது முதல் பதிவு மட்டுமே என்னால் எழுதப்படுகிறது. பின் எழுதும் ஒவ்வொரு பகுதியும், தொடரை படிப்பவரின் புரிதல், எதிர் கேள்விகள், சம்வாதம் (குதர்க்கம்/ விதண்டாவாதம் அல்ல) அதாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம்/ அறிவு சார் கேள்விகள்.
இன்றைய நாறிப்போன மன்னிக்கவும், நாகரீக உலகின் திரைப்பட தயாரிப்பில் எப்படி, மூலக் கதை, வசனம், திரைக்கதை உருவாக்கப் படுகிறதோ அது போல...
சம்புகன் வதம் தொடர் எழுத துவங்கிய போது, நான் ராம நவமி பதிவாக இரண்டு பதிவுகளாகவே துவக்கினேன்....
காலத்தின் சூழல் இந்த பதிவை அரசியல், சமூக, மஹா பாரதம், பெரிய புராணம் என்று பயணிக்க வைத்த நெடும் தொடராக மாற்றி விட்டது...!
சம்புகன் வதம் ஸ்ரீ ராமன் கொடுத்த சலுகை என்று சொன்னேன்... இது குறித்து இன்னும் கொஞ்சம் சமூக, சாஸ்திர புரிதல்/ விளக்கங்களை அடுத்த பகுதி 6 இல் பேசுவோம்.
No comments:
Post a Comment