Wednesday, April 29, 2020

பத்தினி

பத்தினி ....

பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதேசங்களை வழங்கினார்.
அப்போது ஸ்ரீ கிருஷ்ணனும் உடனிருந்தார். சில உபதேசங்களை முன்பே பகிர்ந்துள்ளேன். இது ஒரு பக்கம்!

இன்னுமொரு புறம்...

ஸ்ரீ கிருஷ்ணனுடன் வந்த சத்யபாமா, திரெளபதியுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தாள்.

திரெளபதியிடம் சத்யபாமா கேட்டாள்...
(ஒரு கிருஷ்ணனை, ருக்மிணியுடன் போட்டி போட்டு தக்க வைத்துக் கொள்ளவே படாத பாடு படும் சத்யபாமாவுக்கு - 5 கணவர்களை சமாளிக்கும் திரெளபதியின் சாதனை மிக மிகப் பெரியது)

கணவரிடம் மனைவி எப்படி நடந்து கொள்ள வேண்டும்?! சத்யபாமா கேள்வி!

திரெளபதி சொன்ன பதில்கள் இந்த காலத்தில் 90% பெண்களுக்கான உபதேசம் என்றே கொள்ளலாம்.

மஹாபாரதம் - வன பர்வம் - அத் 5.

1. கணவனை வசீகரிக்க ஒரு பெண் தகாத வழிகளில் முயற்சித்தால், பாம்பிடம் நடுங்குவது போல அவளிடம் கணவன் நடுங்குவான்.

2. சில பெண்கள் நடந்து கொள்ளும் விதத்தினால் கணவனின் அமைதி கெடும். அதன் காரணமாக கணவனுக்கு தீராத வயிற்று வலி உண்டாகும் (naturally - husband avoid food on account of anger -  acidity - ulcer - drinks / outside food)
இதனால் காலப் போக்கில் ஆண்மையை கூட இழந்துவிடுவார்கள் கணவன்மார்கள்.

3. என்னைப் பொறுத்தவரையில் நான் பாண்டவர்களின் மனம் அறிந்து நடந்து கொள்கிறேன்.

4. சோம்பலின்றி இருக்கிறேன்.

5. அடிக்கடி வாயிலில் போய் நிற்பதில்லை.

6. அளவுக்கு மீறி நான் பேசுவதுமில்லை.

7. எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். (கானக / நாடிழந்த கவலைகள் வேறு - உள் மன தாம்பத்ய மகிழ்ச்சி வேறு)

8. கோபப்படுவதில்லை.

9. என் மாமியாரை நான் மிகவும் மதிக்கிறேன்.

10. பாண்டவர்கள் விழிப்பதற்கு முன் நான் விழிக்கிறேன் - அவர்கள் உறங்கியபின்னே நான் உறங்குவேன் (பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி)

11. ஒரு பெண் தன்னை அலங்கரித்துக் கொள்வது கணவனுக்காகவே இருக்க வேண்டும்.

12. மனைவியிடம் கணவன் கூறும் தகவல் ரகசியமில்லை என்றாலும் கூட அதைப் பற்றி மனைவி மற்றவர்களுடன் பேசக்கூடாது.

13. கணவனுடைய நண்பர்களிடத்திலும்/ கணவனிடம் அன்பு செலுத்துபவர்களிடத்திலும் மனைவியானவள் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்களை நன்றாக உபசரிக்க வேண்டும்.

14. கணவனை யார் யார் பகைக்கிறார்களோ, அவர்களை மனைவி ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது.

15. ஒரு பெண் கணவன் மூலமாகவே குழந்தை பெறுகிறாள் எனும்போது, கணவன் தெய்வத்துக்கு சமமானவன்.

16. சத்தியத்தில் பற்றுள்ளவளாக, பாவத்தை விலக்கியவளாக, கணவனுக்கு ப்ரியமில்லாத காரியத்தை செய்யாதவளாக எந்த மனைவி  இருக்கிறாளோ, அவளுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சிக்குக் குறைவு இருக்காது.

...

இனி, என் கருத்து... 

அநேகமாக சுதந்திரத்துக்குப் பின் - அந்த கால கட்ட  தலைமுறை முடிந்தபின் - இன்றைய பெண்களுக்கு, திரெளபதி சொன்ன எதுவும் பொருந்தாது... ஆயிரம் அல்லது லட்சத்தில் இருக்கும் ஓரிருவரால் மட்டுமே, இன்றும் ஹிந்து தர்மம் ஜீவிக்கிறது.

உபதேசம் 15... பாரத மண்ணின்/ பெண்ணின் மகிமை இந்த கருத்து... காரணம், பாண்டவர்களும் கணவனுக்கு பிறந்தவர்கள் அல்ல - திரெளபதியும் துருபுதன் மகளாக ஹோமத் தீயில் உதித்தவள்.

ஆனாலும், திரெளபதி பிறந்த மண்ணின் தர்மத்தை பேசியிருக்கிறாள்.

இந்த் தொகுப்பை என் மனைவியிடம், பல நாட்கள் முன்பே படித்துக் காட்டிவிட்டே பதிவிடுகிறேன் - உபன்யாசத்திலும் நாங்கள் கேட்டோம்.

நண்பர்களும் அவரவர் இல்லங்களில் இருந்தே துவங்குவோம்.

copy paste முறையில் அவரவர் பதிவாக பகிர்வோம்... tag, thanks வேண்டாம்...

பதிவை பார்த்து ஒரு பெண் குறைந்த பட்சம் சில அம்சங்களையாவது கடைபிடிக்க முயற்சித்தால் அதுவே பாரத தர்மத்தின் வெற்றிக்கு வேர் விழுதாகும்! 

சந்தியாவந்தனம்

#ஸந்தியாவந்தனம்

ரொம்ப நாள் கழித்து, மீண்டும் எழுதுகிறேன், இந்த தலைப்பில்...

ஐடி க்கள் மாறினாலும் ஆள் ஒன்றுதானே...

நமக்குத்தான் ஆரம்பம் முதலே - வக்கீல் ரத்தின குமார் இருக்காரே follow up க்கு.

ஸூர்ய நாராயண வந்தனம்...

ஸந்தியாவந்தனத்தின் 22ஆம் பகுதி...

நம: ஸவித்ரே ஜகதேக சக்ஷுஷே என்று துவங்கும்...

முழுசா சொல்லல...

ஏன் தெரியுமா...

அப்போதுதான் எடுத்துப் பார்க்க ஆர்வம் வரும்...

இதுல ஒரு வரி...

சங்க சக்ர கதா பாணே
த்வாராகா நிலயாச்யுத
கோவிந்த புண்டரிகாக்ஷ
ரக்ஷமாம் சரணாகதம்...

இது யார் சொன்னா?! ...

#திரெளபதி

துகிலுரியப்பட்ட நிலையில்...
க்ருஷ்ணை - திரெளபதியின் இன்னொரு பெயர் ... துருபுதன் நடத்திய யாகத்தில், 

வேள்வித்தீயிலிருந்து வந்தவள்...

ஆகவே கருப்பு நிறமாக இருந்தாள்...

அதனால, க்ருஷ்ணை...

க்ருஷ்ணனும் கருப்புதானே...

ஓடோடி வந்தான் உதவ...

இன்று கலியுகம்....

இதைத்தான் அமெரிக்கா, ஆப்பிரிக்காவில் நிறவெறி என முத்திரை குத்திட்டோம்!!

இந்தியாவில்... ஜாதி வெறி!! 

சிரஞ்சீவி யை வாழ்த்த முடியுமா?!



வீட்டில் திருமணம்/ ஹோமம் நடந்தால் என்ன வாழ்த்தொலி?!

ரோஜமோ ரோஜமானஸ்ய்....

சதமானம் பவதி...

ஹனுமன்... வான் வழி கடலைத் தாண்டும் போது சுரசை என்ற நிழலைப் பிடித்து உண்ணும் அரக்கியை வெல்கிறான்....

(வாயில் புகுந்து காது வழி வெளியேற்றம்)

அப்போது, ஹனுமனை துதித்து...

#யஸ்யத்வேதாநிசத்வாரி
வானரேந்த்ரயதா தவ!!

த்ருதிதிருஷ்டி மதிர்தாட்ச்யம்
ஸ்வகர்மஸீ நஸீததி....

சுந்தர காண்டம் 1-216

வானரனே,

உங்களைப்போல், வீரம், வலிமை, புத்தி, விசாரணை உடையவன் விசாரம் அடைவதில்லை என்பது உண்மை!! 

ராமரும் கிருஷ்ணரும்

இராமரும்
கிருஷ்ணரும்!

இராமாவதாரத்தில்,

தசரதனுக்கு - கோசலை மகனாக மூத்தவனாக விஷ்ணு....

தசரதனுக்கு- சுமித்திரை மகனாக ஆதிசேஷன் அம்சமாக லக்ஷ்மணன். (தொண்டனாக)

கிருஷ்ணாவதாரத்தில்,

to pay back...

வசுதேவருக்கு தேவகி வயிற்றிலிருந்து நவீனகால egg transplantation போல ரோகிணி கர்பமாற்றம் செய்யப்பட்டு மூத்தவனாக ஆதிசேஷன் அம்சமாக பலராமர்.

வசுதேவர் தேவகிக்கு - கிருஷ்ணன்.

ஆதிசேஷன் லட்சுமணனாக இராமாவதாரத்தில் செய்த சேவைக்கு பிரதிபலனாய் கிருஷ்ணாவதாரத்தில் பலராமனுக்கு தம்பியாக கிருஷ்ணன் - to pay back!!

சூரசேனர் என்ற யாதவ அரசனுக்கு மூன்று குழந்தைகள்.

1. பிரிதா என்கிற குந்தி (பஞ்சபாண்டவர்களின் தாய்), குந்தி போஜன் என்ற ராஜாவுக்கு தத்து கொடுக்கப்பட்டாள் - நட்பின் அடிப்படையில்.

2. வசுதேவர், கிருஷ்ணரின் தந்தை.

3. தேவபாகா ஸ்ரீ உத்தவரின் தாய்.

குந்தியின் மைந்தன் அர்ஜுனனுக்கு போர்க்களத்தில் பகவத் கீதையையும்,
தேவபாகா மைந்தன் உத்தவருக்கு உத்தவ கீதையும் ஸ்ரீ கிருஷ்ணனால் உபதேசிக்கப்பட்டது.

வசுதேவர் - தேவகி தம்பதியருக்கு ஏழாவது கர்பம் உண்டானது.

அந்த சமயத்தில் விஷ்ணு யோகமாயை துர்கையை அழைத்து, தேவகி கர்பத்தில் உள்ள ஆதிசேஷன் அம்சமாக வளரும் கருவை எடுத்து கோகுலத்தில் வசித்து வரும் வசுதேவரன் மற்றொரு மனைவியான ரோகிணி கர்பத்தில் சேர்த்து விடவும், துர்கையை நந்தகோபர் மனைவி யசோதை வயிற்றில் மகளாக பிறக்க என்று பணித்தார்.

விஷ்ணுவே, தேவகியின் 8வது பிள்ளையாக கிருஷ்ணனாக பிறக்கப் போவதாகச் சொன்னார்.

குருவின் மஹாத்மியம்

#குரு

சீடனுக்கு குரு ஒருவரின் வழிகாட்டல்  அவசியமா?!

இப்படி ஒரு கேள்வி எழுந்தது.

குரு சீடனிடம், உடனே ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வா என்றார்.

சீடனிடம் இரும்பு துண்டம் ஒன்றை கொடுத்த அதை தண்ணீரில் போடச் சொன்னார் குரு.

இரும்பு துண்டு வாளித் தண்ணீரில் மூழ்கிவிட்டது.

உடனே குரு ஒரு மரப் பலகையை சீடனிடம் கொடுத்து - அதை வாளித் தண்ணீரில் போடு என்றார்.

மரப்பலகை மிதந்தது - அந்த மரப் பலகை மீது இப்போது அந்த இரும்புத் துண்டை வை என்று சொன்னார் குரு.

இப்போது குரு சொன்னார் ...

வாளித் தண்ணீர் பிறவிக் கடல்...

அதை கடக்க விரும்புபவன் இரும்புத் துண்டு...

மரப்பலகை இரும்புத் துண்டை தாங்குவது போல, நல்ல குருவின் அருளும் வழிகாட்டலும் பிறவிக் கடல் கடக்க உதவும்!!

இதுதான் குருவின் மஹாத்மியம்!! 

வாமனர்

வாமனருக்கு சூரிய பகவானே காயத்ரி மந்திரத்தை உபதேசித்தார்.

ப்ருஹஸ்பதி பூணூல் கொடுத்தார்.

காச்யபர் முஞ்சிக் கயிற்றை இரக்ஷை போல இடுப்பில் கட்டினார்.

பூமி தேவி ஆயுளை நீட்டிக்கும் மான் தோல் போர்த்தினார்.

ஓளஷதிகளின் பதியான ஸோமன் பலாச தண்டத்தை அளித்தார்.

தாய் அதிதி கெளபீன வஸ்திரம் கொடுத்தாள்.

வின்னுலக தேவதை குடையை

பிரம்மா கமண்டலத்தை

ஸப்தரிஷிகள் தர்ப்பையை

சரஸ்வதி ஜபமாலையை

குபேரன் பிக்ஷா பாத்திரத்தை கொடுக்க

உமாதேவி பிக்ஷையிட...

பிரம்ம தேஜஸ் எனும் ஒளிப் பிழம்பாய் ஜொலித்தார் வாமனர்...

#ஓங்கிஉலகளந்தஉத்தமன்_பேர்பாடி... 

பாதுகை வழிபாட்டு பலன்



போகாந் அநந்ய மநஸாம் மணகபாதுகே த்வம்

புஷாணாஸி ஹந்த பஜதாம் அநுஷங்கஸிந்தாத்

தேநைவ நூநம் அபவத் பரதஸ்ய ஸாதோ:

அப்ரார்த்திதம் தத் இஹ ராஜ்யம் அவர்ஜநீயம்.

இரத்தின கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! உன்னை விட்டு வேறு எங்கும் தங்கள் மனதைத் திருப்பாமல், உன்னை மட்டுமே தியானிப்பவர்களுக்கு நீ என்ன செய்வாய்?!

உன்னை வழிபடுபவன் கேட்காமலேயே பலப்பல நன்மைகளை செய்கிறாய். இது மிகவும் வியப்பானது.

எப்படித் தெரியுமா?!

உத்தமமான பரதனுக்கு அவன் கேட்காமலேயே, உலகைக் காபாற்றும் ராஜாங்க பொறுப்பு வந்து சேர்ந்தது.

உட்பொருள்:-

தாய் கைகேயி கேட்டபடியே பரதனுக்கு ராஜ்யம் வந்திருந்தால், மக்களாலும் - சரித்திரத்தாலும் பரதனுக்கு பேராசை/ சூழ்ச்சிக்காரன் என்ற பட்டமே கிடைத்திருக்கும்.

ஆனால், பரதாழ்வாரின் வினயம், பக்தி, அவனுக்கு ராமன், கெளசல்யை, சீதாமாதா, மற்றும் மக்கள் என கோடானுகோடி மக்களின் இதய சிம்மாசனம் - கூடவே ராஜ்ய பரிபாலன பொறுப்பு - எல்லாவற்றுக்கும் மேலாக வைகுண்ட வாசலின் திறவுகோல்.!

ராம ராம.

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...