Wednesday, April 29, 2020

பத்தினி

பத்தினி ....

பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதேசங்களை வழங்கினார்.
அப்போது ஸ்ரீ கிருஷ்ணனும் உடனிருந்தார். சில உபதேசங்களை முன்பே பகிர்ந்துள்ளேன். இது ஒரு பக்கம்!

இன்னுமொரு புறம்...

ஸ்ரீ கிருஷ்ணனுடன் வந்த சத்யபாமா, திரெளபதியுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தாள்.

திரெளபதியிடம் சத்யபாமா கேட்டாள்...
(ஒரு கிருஷ்ணனை, ருக்மிணியுடன் போட்டி போட்டு தக்க வைத்துக் கொள்ளவே படாத பாடு படும் சத்யபாமாவுக்கு - 5 கணவர்களை சமாளிக்கும் திரெளபதியின் சாதனை மிக மிகப் பெரியது)

கணவரிடம் மனைவி எப்படி நடந்து கொள்ள வேண்டும்?! சத்யபாமா கேள்வி!

திரெளபதி சொன்ன பதில்கள் இந்த காலத்தில் 90% பெண்களுக்கான உபதேசம் என்றே கொள்ளலாம்.

மஹாபாரதம் - வன பர்வம் - அத் 5.

1. கணவனை வசீகரிக்க ஒரு பெண் தகாத வழிகளில் முயற்சித்தால், பாம்பிடம் நடுங்குவது போல அவளிடம் கணவன் நடுங்குவான்.

2. சில பெண்கள் நடந்து கொள்ளும் விதத்தினால் கணவனின் அமைதி கெடும். அதன் காரணமாக கணவனுக்கு தீராத வயிற்று வலி உண்டாகும் (naturally - husband avoid food on account of anger -  acidity - ulcer - drinks / outside food)
இதனால் காலப் போக்கில் ஆண்மையை கூட இழந்துவிடுவார்கள் கணவன்மார்கள்.

3. என்னைப் பொறுத்தவரையில் நான் பாண்டவர்களின் மனம் அறிந்து நடந்து கொள்கிறேன்.

4. சோம்பலின்றி இருக்கிறேன்.

5. அடிக்கடி வாயிலில் போய் நிற்பதில்லை.

6. அளவுக்கு மீறி நான் பேசுவதுமில்லை.

7. எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். (கானக / நாடிழந்த கவலைகள் வேறு - உள் மன தாம்பத்ய மகிழ்ச்சி வேறு)

8. கோபப்படுவதில்லை.

9. என் மாமியாரை நான் மிகவும் மதிக்கிறேன்.

10. பாண்டவர்கள் விழிப்பதற்கு முன் நான் விழிக்கிறேன் - அவர்கள் உறங்கியபின்னே நான் உறங்குவேன் (பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி)

11. ஒரு பெண் தன்னை அலங்கரித்துக் கொள்வது கணவனுக்காகவே இருக்க வேண்டும்.

12. மனைவியிடம் கணவன் கூறும் தகவல் ரகசியமில்லை என்றாலும் கூட அதைப் பற்றி மனைவி மற்றவர்களுடன் பேசக்கூடாது.

13. கணவனுடைய நண்பர்களிடத்திலும்/ கணவனிடம் அன்பு செலுத்துபவர்களிடத்திலும் மனைவியானவள் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்களை நன்றாக உபசரிக்க வேண்டும்.

14. கணவனை யார் யார் பகைக்கிறார்களோ, அவர்களை மனைவி ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது.

15. ஒரு பெண் கணவன் மூலமாகவே குழந்தை பெறுகிறாள் எனும்போது, கணவன் தெய்வத்துக்கு சமமானவன்.

16. சத்தியத்தில் பற்றுள்ளவளாக, பாவத்தை விலக்கியவளாக, கணவனுக்கு ப்ரியமில்லாத காரியத்தை செய்யாதவளாக எந்த மனைவி  இருக்கிறாளோ, அவளுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சிக்குக் குறைவு இருக்காது.

...

இனி, என் கருத்து... 

அநேகமாக சுதந்திரத்துக்குப் பின் - அந்த கால கட்ட  தலைமுறை முடிந்தபின் - இன்றைய பெண்களுக்கு, திரெளபதி சொன்ன எதுவும் பொருந்தாது... ஆயிரம் அல்லது லட்சத்தில் இருக்கும் ஓரிருவரால் மட்டுமே, இன்றும் ஹிந்து தர்மம் ஜீவிக்கிறது.

உபதேசம் 15... பாரத மண்ணின்/ பெண்ணின் மகிமை இந்த கருத்து... காரணம், பாண்டவர்களும் கணவனுக்கு பிறந்தவர்கள் அல்ல - திரெளபதியும் துருபுதன் மகளாக ஹோமத் தீயில் உதித்தவள்.

ஆனாலும், திரெளபதி பிறந்த மண்ணின் தர்மத்தை பேசியிருக்கிறாள்.

இந்த் தொகுப்பை என் மனைவியிடம், பல நாட்கள் முன்பே படித்துக் காட்டிவிட்டே பதிவிடுகிறேன் - உபன்யாசத்திலும் நாங்கள் கேட்டோம்.

நண்பர்களும் அவரவர் இல்லங்களில் இருந்தே துவங்குவோம்.

copy paste முறையில் அவரவர் பதிவாக பகிர்வோம்... tag, thanks வேண்டாம்...

பதிவை பார்த்து ஒரு பெண் குறைந்த பட்சம் சில அம்சங்களையாவது கடைபிடிக்க முயற்சித்தால் அதுவே பாரத தர்மத்தின் வெற்றிக்கு வேர் விழுதாகும்! 

சந்தியாவந்தனம்

#ஸந்தியாவந்தனம்

ரொம்ப நாள் கழித்து, மீண்டும் எழுதுகிறேன், இந்த தலைப்பில்...

ஐடி க்கள் மாறினாலும் ஆள் ஒன்றுதானே...

நமக்குத்தான் ஆரம்பம் முதலே - வக்கீல் ரத்தின குமார் இருக்காரே follow up க்கு.

ஸூர்ய நாராயண வந்தனம்...

ஸந்தியாவந்தனத்தின் 22ஆம் பகுதி...

நம: ஸவித்ரே ஜகதேக சக்ஷுஷே என்று துவங்கும்...

முழுசா சொல்லல...

ஏன் தெரியுமா...

அப்போதுதான் எடுத்துப் பார்க்க ஆர்வம் வரும்...

இதுல ஒரு வரி...

சங்க சக்ர கதா பாணே
த்வாராகா நிலயாச்யுத
கோவிந்த புண்டரிகாக்ஷ
ரக்ஷமாம் சரணாகதம்...

இது யார் சொன்னா?! ...

#திரெளபதி

துகிலுரியப்பட்ட நிலையில்...
க்ருஷ்ணை - திரெளபதியின் இன்னொரு பெயர் ... துருபுதன் நடத்திய யாகத்தில், 

வேள்வித்தீயிலிருந்து வந்தவள்...

ஆகவே கருப்பு நிறமாக இருந்தாள்...

அதனால, க்ருஷ்ணை...

க்ருஷ்ணனும் கருப்புதானே...

ஓடோடி வந்தான் உதவ...

இன்று கலியுகம்....

இதைத்தான் அமெரிக்கா, ஆப்பிரிக்காவில் நிறவெறி என முத்திரை குத்திட்டோம்!!

இந்தியாவில்... ஜாதி வெறி!! 

சிரஞ்சீவி யை வாழ்த்த முடியுமா?!



வீட்டில் திருமணம்/ ஹோமம் நடந்தால் என்ன வாழ்த்தொலி?!

ரோஜமோ ரோஜமானஸ்ய்....

சதமானம் பவதி...

ஹனுமன்... வான் வழி கடலைத் தாண்டும் போது சுரசை என்ற நிழலைப் பிடித்து உண்ணும் அரக்கியை வெல்கிறான்....

(வாயில் புகுந்து காது வழி வெளியேற்றம்)

அப்போது, ஹனுமனை துதித்து...

#யஸ்யத்வேதாநிசத்வாரி
வானரேந்த்ரயதா தவ!!

த்ருதிதிருஷ்டி மதிர்தாட்ச்யம்
ஸ்வகர்மஸீ நஸீததி....

சுந்தர காண்டம் 1-216

வானரனே,

உங்களைப்போல், வீரம், வலிமை, புத்தி, விசாரணை உடையவன் விசாரம் அடைவதில்லை என்பது உண்மை!! 

ராமரும் கிருஷ்ணரும்

இராமரும்
கிருஷ்ணரும்!

இராமாவதாரத்தில்,

தசரதனுக்கு - கோசலை மகனாக மூத்தவனாக விஷ்ணு....

தசரதனுக்கு- சுமித்திரை மகனாக ஆதிசேஷன் அம்சமாக லக்ஷ்மணன். (தொண்டனாக)

கிருஷ்ணாவதாரத்தில்,

to pay back...

வசுதேவருக்கு தேவகி வயிற்றிலிருந்து நவீனகால egg transplantation போல ரோகிணி கர்பமாற்றம் செய்யப்பட்டு மூத்தவனாக ஆதிசேஷன் அம்சமாக பலராமர்.

வசுதேவர் தேவகிக்கு - கிருஷ்ணன்.

ஆதிசேஷன் லட்சுமணனாக இராமாவதாரத்தில் செய்த சேவைக்கு பிரதிபலனாய் கிருஷ்ணாவதாரத்தில் பலராமனுக்கு தம்பியாக கிருஷ்ணன் - to pay back!!

சூரசேனர் என்ற யாதவ அரசனுக்கு மூன்று குழந்தைகள்.

1. பிரிதா என்கிற குந்தி (பஞ்சபாண்டவர்களின் தாய்), குந்தி போஜன் என்ற ராஜாவுக்கு தத்து கொடுக்கப்பட்டாள் - நட்பின் அடிப்படையில்.

2. வசுதேவர், கிருஷ்ணரின் தந்தை.

3. தேவபாகா ஸ்ரீ உத்தவரின் தாய்.

குந்தியின் மைந்தன் அர்ஜுனனுக்கு போர்க்களத்தில் பகவத் கீதையையும்,
தேவபாகா மைந்தன் உத்தவருக்கு உத்தவ கீதையும் ஸ்ரீ கிருஷ்ணனால் உபதேசிக்கப்பட்டது.

வசுதேவர் - தேவகி தம்பதியருக்கு ஏழாவது கர்பம் உண்டானது.

அந்த சமயத்தில் விஷ்ணு யோகமாயை துர்கையை அழைத்து, தேவகி கர்பத்தில் உள்ள ஆதிசேஷன் அம்சமாக வளரும் கருவை எடுத்து கோகுலத்தில் வசித்து வரும் வசுதேவரன் மற்றொரு மனைவியான ரோகிணி கர்பத்தில் சேர்த்து விடவும், துர்கையை நந்தகோபர் மனைவி யசோதை வயிற்றில் மகளாக பிறக்க என்று பணித்தார்.

விஷ்ணுவே, தேவகியின் 8வது பிள்ளையாக கிருஷ்ணனாக பிறக்கப் போவதாகச் சொன்னார்.

குருவின் மஹாத்மியம்

#குரு

சீடனுக்கு குரு ஒருவரின் வழிகாட்டல்  அவசியமா?!

இப்படி ஒரு கேள்வி எழுந்தது.

குரு சீடனிடம், உடனே ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வா என்றார்.

சீடனிடம் இரும்பு துண்டம் ஒன்றை கொடுத்த அதை தண்ணீரில் போடச் சொன்னார் குரு.

இரும்பு துண்டு வாளித் தண்ணீரில் மூழ்கிவிட்டது.

உடனே குரு ஒரு மரப் பலகையை சீடனிடம் கொடுத்து - அதை வாளித் தண்ணீரில் போடு என்றார்.

மரப்பலகை மிதந்தது - அந்த மரப் பலகை மீது இப்போது அந்த இரும்புத் துண்டை வை என்று சொன்னார் குரு.

இப்போது குரு சொன்னார் ...

வாளித் தண்ணீர் பிறவிக் கடல்...

அதை கடக்க விரும்புபவன் இரும்புத் துண்டு...

மரப்பலகை இரும்புத் துண்டை தாங்குவது போல, நல்ல குருவின் அருளும் வழிகாட்டலும் பிறவிக் கடல் கடக்க உதவும்!!

இதுதான் குருவின் மஹாத்மியம்!! 

வாமனர்

வாமனருக்கு சூரிய பகவானே காயத்ரி மந்திரத்தை உபதேசித்தார்.

ப்ருஹஸ்பதி பூணூல் கொடுத்தார்.

காச்யபர் முஞ்சிக் கயிற்றை இரக்ஷை போல இடுப்பில் கட்டினார்.

பூமி தேவி ஆயுளை நீட்டிக்கும் மான் தோல் போர்த்தினார்.

ஓளஷதிகளின் பதியான ஸோமன் பலாச தண்டத்தை அளித்தார்.

தாய் அதிதி கெளபீன வஸ்திரம் கொடுத்தாள்.

வின்னுலக தேவதை குடையை

பிரம்மா கமண்டலத்தை

ஸப்தரிஷிகள் தர்ப்பையை

சரஸ்வதி ஜபமாலையை

குபேரன் பிக்ஷா பாத்திரத்தை கொடுக்க

உமாதேவி பிக்ஷையிட...

பிரம்ம தேஜஸ் எனும் ஒளிப் பிழம்பாய் ஜொலித்தார் வாமனர்...

#ஓங்கிஉலகளந்தஉத்தமன்_பேர்பாடி... 

பாதுகை வழிபாட்டு பலன்



போகாந் அநந்ய மநஸாம் மணகபாதுகே த்வம்

புஷாணாஸி ஹந்த பஜதாம் அநுஷங்கஸிந்தாத்

தேநைவ நூநம் அபவத் பரதஸ்ய ஸாதோ:

அப்ரார்த்திதம் தத் இஹ ராஜ்யம் அவர்ஜநீயம்.

இரத்தின கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! உன்னை விட்டு வேறு எங்கும் தங்கள் மனதைத் திருப்பாமல், உன்னை மட்டுமே தியானிப்பவர்களுக்கு நீ என்ன செய்வாய்?!

உன்னை வழிபடுபவன் கேட்காமலேயே பலப்பல நன்மைகளை செய்கிறாய். இது மிகவும் வியப்பானது.

எப்படித் தெரியுமா?!

உத்தமமான பரதனுக்கு அவன் கேட்காமலேயே, உலகைக் காபாற்றும் ராஜாங்க பொறுப்பு வந்து சேர்ந்தது.

உட்பொருள்:-

தாய் கைகேயி கேட்டபடியே பரதனுக்கு ராஜ்யம் வந்திருந்தால், மக்களாலும் - சரித்திரத்தாலும் பரதனுக்கு பேராசை/ சூழ்ச்சிக்காரன் என்ற பட்டமே கிடைத்திருக்கும்.

ஆனால், பரதாழ்வாரின் வினயம், பக்தி, அவனுக்கு ராமன், கெளசல்யை, சீதாமாதா, மற்றும் மக்கள் என கோடானுகோடி மக்களின் இதய சிம்மாசனம் - கூடவே ராஜ்ய பரிபாலன பொறுப்பு - எல்லாவற்றுக்கும் மேலாக வைகுண்ட வாசலின் திறவுகோல்.!

ராம ராம.

புண்யகால மரணம்...

புண்யகால மரணம்...

மாதங்களில் நான் மார்கழி... கிருஷ்ணன் சொன்னது... ஆமாம்... தேவர்களுக்கான நாளின் பிரம்ம முகூர்த்த நேரம்.

மனிதர்களாகிய நமக்கு ஒரு வருஷம் என்பது தேவர்களுக்கு ஒருநாள்.

தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி... தேவர்களுக்கு பகல் பொழுது. உத்தராயண புண்யகாலம். சூரியன் வடக்கு ரேகை பயணம்...

ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி தேவர்களுக்கு இரவு. தக்ஷிணாயன புண்யகாலம். சூரியன் தெற்கு பாகையில் பயணம்....

மரணம்/ கர்மாக்கள் தேவர்கள் விழிப்போடு இருக்கும் நிலையில் நிகழ்வது.

அவர்களை (தேவர்களை) அகாலத்தில் எழுப்பி விட அவசியமில்லாததால் உத்ராயண புண்யகால மரணம் விசேஷம்.

நாம் ஆண்டுக்கு ஒரு முறை திதி கொடுப்பது - தேவர் உலகலத்தில் இருக்கும் பித்ருக்களுக்கு நித்ய போஜனம் செய்விப்பதாகும்.

மாஹாளய பக்ஷம் என்பது பித்ருக்கள்/ இஷ்டமித்ர பந்து பித்ருக்கள்,-

(தேவர்களின் 1 நாள் 60 நாழிகைகள்... மனிதர்களின் 360 நாட்கள் × 60 நாழிகைகள் multiplied by மஹாளய பக்ஷ 15 நாட்கள் × 60 நாழிகைகள்... 60÷21600 (15×60) = 2.5 நாழிகைகள்)

அதாவது 24+24+12 நிமிஷங்கள் 1 (தேவர்கள் கணக்குப் படி) மணி நேரம் தங்கி நமது உபசாரத்தை ஏற்றுக் கொள்ளுதல்.

சரி, இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

பகவத் கீதை அத் 8 அக்ஷர ப்ரஹ்ம யோகம் ஸ்லோகம் 24

அக்னிர் ஜ்யோதிரஹ: சுக்ல: ஷண்மாஸா உத்தராயணம்|
தத்ர ப்ரயாதா கச்சந்தி ப்ரஹ்ம ப்ரஹ்மவிதோ ஜனா||

எந்த வழியில் ஒளிமயமான அக்னி அபிமான தேவதையாக இருக்கிறாரோ, பகலின் அபிமான தேவதை இருக்கிறாரோ, சுக்லபக்ஷ அபிமான தேவதை இருக்கிறாரோ, உத்ராயணத்தின் 6 மாதங்களின் அபிமான தேவதை இருக்கிறார்களோ, அந்த மார்க்கத்தில் இறந்த பிறகு செல்கின்ற

#பிரம்மத்தைஅறிந்தயோகிகளான

ஜனங்கள் மேலே கூறப்பட்ட தேவதைகளால் வரிசையாக அழைத்துச் செல்லப்பட்டு பிரம்மத்தை - அவ்யக்தம் (தோன்றாநிலை) அக்ஷரம் (அழிவில்லாதது) - அடைகிறார்கள்.

ஸ்லோகம் 25

தூமோ ராத்ரிஸ் ததா க்ருஷ்ண: ஷண்மாஸா தக்ஷிணாயனம்|
தத்ர சாந்த்ரமஸம் ஜ்யோதிர் யோகீ ப்ராப்ய நிவர்த்ததே||

எந்த மார்க்கத்தில் புகைக்குரிய தேவதை இருக்கிறாரோ, ராத்திரிக்குரிய தேவதை இருக்கிறாரோ, அப்படியே கிருஷ்ணபக்ஷத்திற்குரிய தேவதை இருக்கிறாரோ, தக்ஷிணாயனத்தின் 6 மாதங்களுக்குரிய தேவதைகள் இருக்கிறார்களோ, அந்த மார்க்கத்தில்

#பற்றுடன்கர்மங்களைச்செய்கின்ற
#யோகிகள்

இறந்தபின் மேற்கூறப்பட்ட தேவதைகளால் வரிசையாக அழைத்துச் செல்லப்பட்டுச் சந்திரனுடைய ஒளியை அடைந்து சுவர்க்கத்தில் தன் நற்செயல்களினா பயன்களை அனுபவித்து விட்டுத் திரும்பி வருகிறார்.

(மீண்டும் சொல்கிறேன்...

முக்கிய வரிகள் - உத்ராயணம்/ பிரம்மத்தையறிந்த யோகிகளான ஜனங்கள் / பிரம்மத்தை அடைகிறார்கள் (End). ஆனால், தக்ஷிணாயனம் / பற்றுடன் கர்மங்களை செய்கின்ற யோகி, சுவர்க்கத்தில் தன் நற்செயல்களின் பயன்களை அனுபவித்துவிட்டு திரும்பி வருகிறார் (re-birth).

உத்ராயண/ தக்ஷிணாயன மரண கால பலா பலன்கள் என்ன, (யோகிகளுக்கு - may not be for ordinary common authmans) என்பது இப்போது புரிகிறதா?!

திருநீறு அணியும்போது

நெற்றியில் திருநீறு அணியும் போது

பிரம்மச்சாரிகள் - நமசிவாய என 5 முறை சொல்லி அணிய வேண்டும்.

நம என்ற பணிவுடன் துவக்குதல் மேன்மை தரும்.

இல்லறத்தில் இருப்போர் : - உமாமகேஸ்வரா/ சதாசிவா / அர்த்தநாரீஸ்வரா என 5 முறை சொல்ல வேண்டும். இதனால் தம்பதியர் அந்நியோண்யம் அதிகமாகும்.

வானப்ரஸ்திகள் - சிவாயநம என 5 முறை சொல்லி நீரு பூசுதல் இறைவனை எளிதில் நெருங்க வைக்கும்.

துறவிகள் :-

சிவோகம், சிவ சிவ சிவ, நடராஜா, திருச்சிற்றம்பலம் மகாதேவா சம்போ மார்க்கபந்து எனச்சொல்லி,  5 முறை விபூதி அணிய வேண்டுமாம்.

கழுத்தில் விபூதியை 5 முறை நிருநீலகண்டம் எனச் சொல்லி அணிய வேண்டும்.

(விபூதி ஒற்றை கீற்றாக இடும் இன்றைய நவீன கால மனிதர்களுக்கும் இதுவே பொருந்தும்)

அப்பர் -2

அரியானை
அந்தணர்தம் சிந்தை யானை
அருமறையின் அகத்தானை
அணுவை
யார்க்கும் தெரியாத தத்துவனைத்
தேனைப்
பாலைத்
திகழொளியைத்
தேவர்கள்தங் கோனை
மற்றைக் கரியானை
நான்முகனைக்
கனலைக்
காற்றைக்
கனைகடலைக்
குலவரையைக்
கலந்து நின்ற பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

#அப்பர்

எவ்வளவு தகுதி உடையவரும் தம் முயற்சியால் அணுகுதற்கு அரியவன் ,

அந்தணர்களின் உள்ளத்தில் உள்ளவன் .

மாற்றுதற்கு அரிய வேதத்தின் உட்பொருளாகியவன் ,

நுண்ணியன் ,

யாரும் தம் முயற்சியால் உணரப்படாத மெய்ப்பொருள் ஆகியவன் .

தேனும் பாலும் போன்று இனியவன் .

நிலைபெற்ற ஒளிவடிவினன் ,

தேவர்களுக்குத் தலைவன் ,

திருமாலையும் பிரமனையும் ,

தீயையும் , காற்றையும் , ஒலிக்கின்ற கடலையும் மேம்பட்ட மலைகளையும் உடனாய் இருந்து செயற்படுப்பவன் ஆகிய மேம்பட்டவன் .

புலிக்கால் முனிவனுக்கு உறைவிடமாகிய தில்லையை உகந்து எழுந்தருளும் அப்பெருமானுடைய மெய்ப் புகழைப்பற்றி உரையாடாத நாள்கள் எல்லாம் பயன் அற்ற நாள்களாம் .

அப்பர்-1

எளிமை, கனிவு, தாழ்வு, வேண்டல், இப்படி எத்தனையோ அடையாள வார்த்தைகளுக்கும் ஒரே சொல்லாய் இருப்பவர்

#அப்பர்

குனித்த புருவமும்,
கொவ்வைச் செவ்வாயில்
குமிண் சிரிப்பும்,

பனித்த சடையும்,
பவளம் போல் மேனியில்
பால் வெண் நீறும்,

இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்

மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!

இதற்கு மேலும் பொருள் சொல்லித்தான் புரிய வேண்டுமா?!

கர்ம காரியங்கள்

காஞ்சி மஹா பெரியவர் குறித்த ஒரு நித்ய பாராயண ஸ்துதி உண்டு... அபார கருணா ஸிந்தும் ஞானதம் சாந்த ரூபிணம்... என்று துவங்கும்....

அதில் ஒரு வரி...

#அநாதப்ரேதஸமஸ்காராத்
#அஸ்வமேதபலம்லபேத்.

கர்ம காரியங்கள் செய்ய வாரிசுகள் இல்லாதவர்களுக்கு, ஸமஸ்கார கர்மத்தை தானே முன் வந்து ஒருவர் செய்தால் அது அஸ்வமேத யாகம் செய்த பலனைத் தரும்.

விவரம் தெரிந்து, அதன் பின் 1985 வரை, மயிலாடுதுறையில் எங்கள் வீதியில் நிகழ்ந்த மரணங்களில் - வாகனத் தயாரிப்பு, சுமத்தல் (அப்பொழுதெல்லாம் van வழக்கமில்லை) என எங்கள் குடும்ப பங்களிப்பு நிச்சயம் இருக்கும்.

முக்கியமாக, அங்கு தரப்படும் தானம் / காசு வாங்க மாட்டோம். சுமந்த புண்ணியத்தை இழக்க மாட்டோம்.

வீட்டுக்கு வந்து புணர் ஸ்நானம் செய்து புதுப் பூணல் அணிந்து - மாலை சிவாலயம் சென்று தரிசித்து, பசுவுக்குப் புல் கொடுத்துவிட்டு வருவோம்.

இதை நாங்கள் செய்ய முக்கிய காரணம் பரமாச்சாரியாள் அருளுரை -

சவங்களை (குறிப்பாக கதியில்லாத /அநாதை ப்ரேதங்களை ) சுமந்து எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு அஸ்வ மேத யாகத்துக்கு சமம்.

கயா ஸ்ரார்தத்தில் வீட்டில் வளர்த்த இஷ்ட பிராணிகள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என யார் யாருக்கோ பிண்டம் ஏன் போடுகிறோம்?!

சாஸ்திரத்துக்கும்/ தர்மத்துக்கும் நிறைய வித்யாசம் உள்ளது.

நாம் செய்யும் கர்மத்தால் போனவர்களுக்கு கதி மோட்சமில்லை! ஆனால் நமது திருப்திக்கு/ சாஸ்திரம் விதித்தபடி கார்யங்கள் நாம் செய்தே ஆக வேண்டும்.

பிதுர் கடன் என்றுதான் நாம் குறிக்கிறோம் - அது அடைக்க முடியாத கடன்.

ஒருவரோடு சேர்ந்து 3 அடிகள் நடந்தால் அவர்களின் மரணத்தில் நாம் ஆஜராக வேண்டும்...

அவர் கையால் ஒரு குவளை நீர் குடித்தால் மறுநாள் சஞ்சயனத்திலும் நாம் இருக்க வேண்டும்.

ஒரு வேளை உணவு உண்டிருந்தால் தசம திதிக்கு ஆஜராக வேண்டும்.

பந்து/ தீட்டு இருந்தால் அவரவர் குல வழக்கப்படி சவரத் தர்ப்பணம்/ சபிண்டி/ சோதகும்பம்/ஆப்தீகம் ஆகியவற்றில் நம் பங்களிப்பு கட்டாயம்!

ஏதோ சொல்ல வேண்டும் என்று தோன்றியது - சொன்னேன் - யாரையும் குறிப்பிட்டு அல்ல! 

யுத்த தர்மம்

#யுத்த_தர்மம்

(பதிவு இன்றைய நமது தேவை குறித்தது)

யுகங்கள்/ காலங்கள் தோறும் தர்மம் அனுஷ்டிக்கப்பட்டே (கடைபிடித்தல்) வந்துள்ளது.

யுத்த தர்மம் என்பது - சமமான வீரர்களுடன் போரிடுதல்.

ரத/ கஜ/துரக / பதாதி அதாவது தேர், யானை, குதிரை, காலாட்படை.

இரு அணியில் உள்ளவர்களும்  குறிப்பட்ட அந்தந்த எதிரியிடமே போர் செய்ய வேண்டும்.

கையில் வாள் அல்லது ஈட்டி யுடன் தனித்து சண்டையிடும் ஒருவனை ரதம் அல்லது யானை மீது ஆரோகணித்து இருக்கும் ஒருவன் தாக்கக் கூடாது.

ஆயுதம் இல்லாதவனை தாக்கக் கூடாது.
சரணடைந்தவன்/ காயம்பட்டவன் உடலுபாதை உள்ளவனை தாக்கக் கூடாது.

மகாபாரதத்தில் பீஷ்மர் - சிகண்டியுடன் (பேடி யாக கருதி - சமன் அல்ல) மோத மறுத்தே உயிர்விட்டார்.

இது சுய கட்டுப்பாடு!!

அபிமன்யு ஆயுதம் இழந்த நிலையில் பலரால் சூழப்பட்டு வீழ்த்தப்பட்டான்.
துரோணர் தருமன் சொன்ன பொய்யால் ஆயுதமின்றி யோகத்தில் அமர த்ருட்டத்யும்னனால் கொல்லப்பட்டார்.

இதெல்லாம் அதர்மமான செயல்கள் - என்பதும் அங்கேயே பதிவு செய்யப்பட்டுள்ளது.

கதாயுத போரில் வல்லவர்களான பீமன்/ துரியோதனனே போரில் நேரடியாக மோதினர். இது தர்மம்.

அஸ்திரம்/சஸ்திரம்

அஸ்திரம் என்பது மந்திரப்பூர்வமாக பிரயோகித்து தூரத்திலிருந்த படி சம பலமுள்ளவர்களிடம் மோதுவது ...

பிரம்மாஸ்திரம் (அர்ஜுனனுக்கு துரோணரால் அருளப்பட்டது - ஒத்த பலமுடையவரிடத்து மட்டும் ப்ரயோகிக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு).

நாகாஸ்திரம்... (காண்டவ வனத்தை அழித்த அர்ஜுனனை அழிக்க பாம்பரசன் ஒருவனின் கோபமே வடிவாய் உருவானது - கர்ணன் கையில்)

பாசுபதாஸ்திரம் - சிவபெருமானால் அர்ஜுனனுக்கு அருளப்பட்டது!

 - கர்ணனின் கவச குண்டலங்களை அபகரித்துக் கொண்டு ஆனால் அதே நேரம் - (சூரிய பகவான் அறிவுரையின் பேரில்) - கர்ணன் இந்திரனிடமிருந்து பெற்றது சக்தி ஆயுதம். (இந்த சக்தி ஆயுதம் அருளப்படும்போதே நிபந்தனை - ஒத்த பலமுடையவரிடத்தில் மட்டுமே ப்ரயோகிக்க வேண்டும்)

வில் போர் - அர்ஜுனன் - கர்ணன் சமபலவான்கள் மோதினர் -

அர்ஜுனன் வெற்றி கண்ணனால்/ பெரியோர் ஆசியால்/  தர்மத்தின் பக்கத்திலிருந்ததால்!

 - கர்ணன் தோல்வி சல்லியனால்/ சாபத்தால் / அதர்மத்தின் ஆக்ரமிப்பால்.

சக்ராயுதம்/ இன்றைய ஏவுகணைகள் கூட அஸ்திரம்தான். ப்ரயோகிக்கப் படுவது.

சஸ்திரம் என்பது கையில் பிடித்து நேரடிப் போரில் ஈடுபட ஏதுவான ஆயுதங்கள்...

கதாயுத / வாள் சண்டை (சிலம்பு- மான்கொம்பு கூட). அநேகமாக இன்று இது விளையாட்டில் (ஒலிம்பிக்கில்+ல் மட்டுமே).

ஆயுதமின்றி நேரடி யுத்தம் - உடல் பலத்தை நம்பி - மல்யுத்தம். (குத்துச் சண்டைக்கு கையுறை/ முகக்கவசம் உள்ளதால் அது சண்டை வகைதான்)

இன்று, எல்லா யுத்த தர்மம் என்பதும் அநேகமாக அதர்மமே.

பீரங்கிகள் நிலைகளை பாதுகாக்க சுவற்றில் பதிக்கப்பட்டது -  விமானம் (அஸ்திரம்)  - எதிரிகளை அழிக்க ஏவப்பட்டது - கப்பல் - முகாம்களாக - நீர் வழி கடக்க - யுத்த சாதன mass இடமாற்றம் செய்ய. Infantry (பதாதி) சண்டை செய்ய, முதலுதவி, உணவு தயாரிக்க, குற்றேவல் செய்ய.

இவை அணைத்தயுமே நாம் இன்று  யுத்த சாதனமாக மாற்றிவிட்டோம்.

பீரங்கிகள் சக்கரம் பொருத்தி/ விமானங்கள் நேரடியாக ஊடுருவி / ஏவுதளம் கொண்ட கப்பல்கள் எல்லாமே கூண்டோடு / பதாதிகளை/ ஆயுதமில்லா மக்களை/ இராணுவ பாசறைகளை அழிக்கவே இன்று பயன் படுத்தப்படுகிறது.

நேரடி வீரர்கள் பதாதிகள் இன்று அநேகமாக குற்றேவல் செய்ய மட்டுமே!!

பாசறை / முகாம் / உணவுக் கூடம் / மருத்துவமனை ஆகியவற்றுக்குரிய இடம் - அன்று தாக்கப்படாது - இன்று முதல் இலக்கு!

யுத்தம் கால வரையறை என்பது காலை சூரியோதயத்திலிருந்து, மாலை அஸ்தமனம் வரை மட்டுமே! இன்று 24×365!!

இந்த இடத்தில் இராமாயண குறிப்பு ஒன்று மிகவும் அவசியம்!!

கைலாய மலையை தூக்க முயன்ற இராவணன் சிவ பெருமானால் தண்டிக்கப்பட - இராவணன் தனது நரம்புகளை எலும்புகளில் கட்டி - அதை வீணையாக்கி சாம கானம் இசைக்க - சிவபெருமான் மகிழ்ந்து தனது வாளை இராவணனுக்கு பரிசாகத் தருகிறார்.

மகாபாரதத்தில் சிவனிடமிருந்து பாசுபதாஸ்திரம் பெற்ற அர்ஜுனன் வெற்றி - ஆனால் முந்தைய இராமாவதாரத்தில் சிவனின் வாளை பெற்ற இராவணன் தோல்வி.

காரணம், இராமன்/ இராவணன் இடையே நடந்தது,  இருவருமே தேர்ச்சி பெற்ற அஸ்திரப் போர்.

சஸ்திர போராக இருந்தால் (சிவனுடைய வாளால்) வெற்றி இராவணனுடையதாகக் கூட இருந்திருக்கலாம் -

ஆனால் சீதா அபகரணமே இங்கு யுத்தத்தில் தர்மத்தின் பக்கத்தை தீர்மானித்தது!

இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் நமது இன்றைய தேவை என்று சொல்லிவிட்டு பழைய புராணங்களை பேசிக் கொண்டு இருக்கிறேனா!!

இல்லை... இதோ விஷயத்துக்குள் வருகிறேன்.

கலியுகத்தின் தர்மம் அதர்மமே!
இது இன்றைய போர்களத்தில் நிதர்சன உன்மை.

இறைவனை அடையும் வழி பக்தி உணர்வால் மட்டுமே!! 

சரியை/ கிரியை / யோகத்தால் அடையப்படும் ஞானமெல்லாம் முந்தைய துவாபர, த்ரேதா, க்ருத யுகச்களுக்கானது.

பக்தி உணர்வு மூலம் கடவுளைப் பெறுவது கலியுக தர்மம்.

இன்று -  bio weapon (சார்ஸ்- கொரோனா) யுத்த காலத்தில் -  ஆயுதமில்லாதவரிடத்தே ப்ரயோகிக்கப்பட்ட அதர்ம யுத்த காலத்தில் -

லவ் ஜிகாத் (துலுக்கன்) உறவாடிக் கெடுக்கும் (கிறிஸ்தவன்) காலத்தில்,

*#இஸ்லாம்_கிருஸ்துவர்களிடம்
-இருப்பது முறையே -
#மதவுணர்வு_கிறிஸ்துபக்தி

ஆனால் இந்துக்களாகிய நம்மிடம் இருப்பது -
#பொறுப்புணர்வு_தர்மஉணர்வு என்ற யுத்த தர்மத்துக்கு ஒவ்வாத / காலத்துக்கு ஒவ்வாத #முட்டாள்தனம் மட்டுமே!

துலுக்கனும்/ கிறிஸ்தவனும் தங்கள் தங்கள் மதவுணர்வை தங்கள் ஆயுதங்களாக ஏந்திக் கொண்டு,

- தர்ம உணர்வு என்ற பெயரில் (கலியுக முட்டாள்தனத்தால் பீடிக்கப்பட்டு - secular வாதிகள் / நடுநிலைவாதிகள் - புழுத்தபகுத்தறிவு - என்ற  இறை மறுப்பாளர்களுக்கு பயந்து)  நிராயுதபாணிகளாக நிற்கும் ஹிந்துக்களை அழிக்கின்றனர் -
#துலுக்கனும்_கிறித்தவனும்

யுத்த தர்மத்தில் சூழ்ச்சி தவறல்ல - என்று பரமாத்மா உபதேசித்ததை ஹிந்துக்கள் நாம் கடைபிடிக்கவில்லை.

ஆனால்,

சோத்துக்கு/ சுகத்துக்கு மார்க்கம் மாறிய துலுக்கனும்/கிறிஸ்தவனும் க்ருஷ்ணனை உபதேசித்ததை கடைபிடிக்கிறான்!

ஹிந்துக்களே, நாம் கிருஷ்ணன் அங்கீகரித்த சூழ்ச்சியை கடைபிடித்தே ஆகவேண்டும் என்று நான் சொல்லவில்லை.

சம பலத்தோடு யுத்தம் என்ற #அடிப்படையுத்ததர்மத்தை கடைபிடிக்க வேண்டுமே atleast!

துலுக்கனின் மதவுணர்வு உந்துதல்,
கிறித்தவனின் சூழ்ச்சி உந்துதல், என்ற இந்த கலியுக யுத்த தர்மத்தில், ஹிந்துக்களாகிய நாமும்

மதவுணர்வு / மகாபாரத க்ருஷ்ண உணர்வு என்கிற கட்டாயம்,  #சமபல_போர் என்கிற #அடிப்படை_யுத்த_தர்மத்தை கடைபிடித்தே ஆகவேண்டும் என்பது,

#காலத்தின்_கட்டாயம்

ஆத்மாவின் நிலைத்தன்மை

ஆத்மாவின் நிலைத்தன்மை

ஸாங்க்ய யோகம் அத் 2 ஸ் 20

ந ஜாயதே ம்ரியதே வா கதாசிநா -
நாயம் பூத்வா பவிதா வா ந பூய:
அஜோ நித்ய: ஸாஸ்ஸதோsயம் புராணோ
ந ஹந்யதே ஹந்யமாநே ஸரீரே

ஆத்மா என்றும் பிறவான், இறவான்
பிறந்தபின் வாழ்ந்து மடியாதவன்
பிறவாநித்தியன் என்றும் உள்ளோன்
தொல்லோன் உடலொடு முடியாதான்

இந்த ஆத்மா ஒருபோதும் பிறப்பதும் இல்லை; அன்றி இறப்பதும் இல்லை. அவ்வாறே முன் உண்டாகிப் பிறகு ஏறாபடக் கூடியது என்பதும் இல்லை. ஏனெனில், இந்த ஆத்மா பிறப்பற்றவன்; நித்தியமானவன். உடல் கொல்லப்படும் போதும் இந்த ஆத்மா கொல்லப் படுவதில்லை.

எனவே, நண்பர்களே, இந்த கொரோனா - கொலை - மரணம் என்பது நைந்து போன / பழசாகிப் போன, இத்தனை நாள்கள் நாம் அனுபவித்துவிட்ட நமது மேலாடைக்குத்தானே தவிர நமது ஆத்மாவுக்கே கிடையாது.

உடல் ப்ரத்யாங்கம் - ஆத்மாவிலிருந்து வேறானது - பிரித்து தூர எறிந்து விடலாம்.

உணர்வு : உபாங்கம் - ஆத்மாவின் ஒரு அங்கம் - இன்னொரு ஜன்மாவை நாம் எடுக்கும் போது இந்த ஜன்மத்தில் இந்த ஆத்மாவின் அங்கமாக இருந்த ஆசை பாசம் கோபம் காமம் லோபம் என்கிற ஆத்மாவுடன் ஒட்டி இருந்த உப அங்கங்களை வெட்டி எறிந்து விட்டு, புதிய ஜென்மா எடுப்போம்.

ஆத்மா என்பது ஸாங்கம், எப்போதும் இருக்கும் - நிலையானது - நேற்று இருந்தது - இப்போது உள்ளது - நாளையும் இருக்கும் -  ஆத்மாவுக்கு உடல் என்ற ப்ரத்தியாங்கமோ, அல்லது உணர்வு என்ற உபாங்கமோ நிலையானது அல்ல.

நேற்று இருந்த உடலும் உணர்வும் (ப்ரத்யாங்கமும் - உபாங்கமும்) இன்று ஆத்மாவுடன் இருக்காது - இன்று ஆத்மாவோடு உள்ள உடலும் உணர்வும் நாளை இருக்காது.

பானையின் விஞ்ஞானம்

இப்போது 90% வழக்கொழிந்தே விட்டது!

simple science...

சுடப்பட்ட மண் பானையின் கண்ணுக்குத் தெரியாத சிறு/நுண்ணிய துளைகள் மூலமாக பானையின் வெளிப் பரப்பில் நீர் படலம் ஏற்படும்.

அந்த நீர் ஆவியாக பானையின் உள்ளே இருக்கும் நீரின் வெப்பத்தை ஈர்த்துக் கொள்ளும் - பானை நீர் குளிர்ச்சியாகும்.

ஹிந்துக்களில் குறிப்பாக பிராமணர்கள் சைவ/ வைணவ/ மத்வர் கள் 3 வேளை சந்தியா வந்தனம் செய்யும் காலங்களில் அவரவர் சமயச் சின்னங்களை நீர்கலந்து விபூதி திருமண் கோபிச் சந்தனம் அணிவர்.

இந்த மூன்றுமே உடலின் உட்பகுதியிலிருக்கு அதிகப்படியான நீர் கோர்வை உறிஞ்சிவிடும் - உடல் வெப்பநிலையை சீராக வைத்திருக்கும். இதனால்  உடலின் உள்ளே உள்ள கிருமிகள் (வைரஸ்) வெப்பத்தால் அழியும்.

இறைவன் 98.6 டிகிரி உடல் வெப்பத்தை அருளி நம்மை design செய்துள்ளதே ஒரு விஞ்ஞானமே!

இது, ஏதோ பிராம்மண ஜாதி வெறி / பெருமை பேசும் பதிவல்ல.

நால்வகை வர்ணத்தாரும் 3 காலத்திலும் அவரவர் அநுஷ்டானங்களை - அவரவர்குரிய சமயச் சின்னம் அணிந்து சிவ பூஜை/ தொழில்/ தேவார திருவாசம்  ஓதுதல் / பிரபந்த பாராயணம் செய்தல் / மத நூல்கள் படிப்பது என அனைவருக்கும் இது பொருந்தும்!

கீதைதியானஸ்லோகம்


பீஷ்மத்ரோணதடா ஜயத்ரதஜலா காந்தார நீலோத்பலா

சல்யக்ராஹவதீ க்ருபேண வஹனீ கர்ணேன வேலாகுலா

அச்வத்தாமவிகர்ண கோரமகரா துர்யோ தனாவர்தினீ

ஸோத்தீர்ணா, கலு பாண்டவை ரணநதீ கைவர்தக: கேசவ:

பொருள் :-

(மஹா)பாரத (குருக்ஷேத்ர) போராம்
ரணநதி தனிலே

பீஷ்மர், துரோணர் இருகரையாம் (tank bund)

நதியின் நீரோ ஜயத்ரதனாம் (கெளரவ சகோதரி துச்சலை கணவன் - அபிமன்யு வதம் செய்யப்பட்ட நாளில் - சிவ பெருமான் வரத்தால் ஒரே ஒரு நாள் பாண்டவர்களை போரில் கட்டியவன் - முன்னேறாமல் தடுத்தவன்)

காந்தார மன்னன் நீலோத்பலம்

சல்லிய வீரன் கொடிய சுறா

கிருபன் அந்நதிப் பிரவாகம் (வேகம்)

அஸ்வத்தாமனுமா விகர்ணனும் துயர்தரும் மகர மீன்களாம் (மகரம் என்பது முதலை - மீன் என்பது முதலையை போல கொடூர குணம் கொண்ட கூரிய பற்கள் கொண்ட மீன்)

துரியோதனனோ நீர்சுழலாம்

கர்ணனோ நதியின் பேரலையாம்;

இத்துணை இடுக்கண் நிறை நதியைப்

போர்க்களமாம் குருக்ஷேத்திரத்தில்

பாண்டவர் தாண்டியே கரைசேரத்

தெப்பமாம் கேசவா! வாழியவே!!

இந்த உலக வாழ்கை என்பது சம்சார கடல் - ஆனால் கடல் ஆழம் / அமைதியாக இருக்கும் - மாறாக ஒரு நதியோ, அதன் நீரோட்டத்தால் முதலைகள், சுறா, மகரங்கள் என ஆபத்துக்கள் நிறைந்தது - நதியின் வேகம், சுழல், பிரவாகம், உயர்ந்து நிற்க்கும் கரைகள் காரணமாக மனிதனால் நீந்திக் கடப்பது என்பது இயலாத காரியம்.

எனவே பாண்டவர்கள், இந்த குருக்ஷேத்ர போர் என்ற நதியை கிருஷ்ணன் எனும் தெப்பத்தின் உதவியோடு கடக்கின்றனர்.

உடலை விட்டுப் பிரியும் உயிர் (ஆத்மாவானது) சொர்க்க பாதையில் ஓராண்டு பயணிக்கும் - வழியில் அந்த ஆத்மாவானது நரகக் காட்சி/ சித்ரவதைகளை கண்டுகொண்டே கடக்குமாம் (கருட புராணம்).

ஊடே, இரண்டு நதிகள்... விரஜா/ வைதவி.

ஒன்று புண்யதீர்த்தம்/ இன்னொன்றும் ரத்தப் பெருக்கு மனிதச் சதை வெள்ளம் ஓடும் நதி.

இதில், ஆத்மா விரஜா நதியை கடக்க - ஒரு பசுவின் வாலை பிடித்தபடி கடக்குமாம் - காரணம் பசுக்களை தீயவை/ அசுத்தங்கள் அண்டாது (மேய்ப்பவன் கண்ணன் ஆயிற்றே).

விபரமறிந்த ப்ராமணர்கள் தசமநாள் காரியங்களில் கோதானம் செய்யும்போது அதன் வால்வரை தொட்டு உருவிவிட்ட பின்னரே தானமாக கொடுப்பர் - இதையெல்லாம் வைதீகர்களும் இப்போது நிச்சயமாக செய்ய வேண்டிய முறையாக கட்டாயப் படுத்துவதுமில்லை!!

#மேல்_குறிப்பு_1

ஸ்ரீ ரங்கத்தில் பெருமாள் சொர்க்க வாசல் புகும் முன்பாக ஒரு மண்டபத்தில் எழுந்தருளுவார் - அங்கே அவருக்கு விஷேஷ பூஜைகள் உண்டு - அந்த மண்டபத்தின் கீழே விரஜா/ வைதவி நதிகள் ஓடுவதாக ஐதீகம்.

விவரமறிந்த வைணவர்கள்/ நபர்கள் மேற்படி இந்த மண்டபத்தை மிதித்து/ குறுக்கே கடப்பது இன்றளவும் கிடையாது - மாறாக அங்கே விழுந்து வணங்கி நமஸ்கரித்துச் செல்வர்.

இந்த விரஜா நதி மண்டப சேவைக்குப் பின்னரே நம்பெருமாள் சொர்க்க வாசலுக்குள் ப்ரவேசிப்பார்!!

#மேல்_குறிப்பு_2

சபரி மலையிலும் அழுதா நதியில், ஐய்யப்பனால் வீழ்த்தப்பட்ட  மஹிஷியின் இரத்தமும் சதையும் ஓடுகிறது -

ஐய்யப்பன் - மஹிஷி போரை காண வந்த சிவன் தன் ரிஷபத்தை கட்டிய இடமே காளை கட்டி.

போரை காண வந்ததாலேயே, இங்கே சிவனின் பாணம் வெறும் பாண குறியீடாக இல்லாது - நிலக்கலில் தலையுடன் காணப்படுகிறது (முக வடிவில்).

இந்த அழுதா நதியில் பக்தர்களாகிய நாம் கல்லெடுத்து - (எலும்புச்சாம்பல் - சஞ்சயனம்) அதை கல்லிடும் குன்றிலிட்டு மஹிஷிக்கு மோஷத்துக்கு வழி வகுகுக்கிறோம்.

பம்பையின் இக்கரை சாலகாயம் - இது ஸ்தூல காயம் என்பதின் மலையாள மருவு - நாம் பூவுலக அசுத்த மேனியோடு சென்று பம்பா எனும் புண்ணிய நதியில் நீராடி பின் ஜோதிசொரூபமான ஐய்யப்பனோடு நமது ஸ்தூல காயத்தை (உடலை) விட்டுவிட்டு நமது ஆத்மஜோதி (கடைந்தெடுத்த வெண்ணெயில் காய்ச்சிய நெய்யுருவில்) பரமாத்மாவுடன் கலக்கிறது.

வேலைக்காரி

பல வருஷங்கள் முன்பு, ஒரு குடும்பத்தால்  ₹20 அல்லது 30 சம்பளம் கொடுக்க வசதி இருந்தவரை வீடுகளில் வேலைக்காரி உண்டு.

பாத்திரம் துலக்க, வீடு பெருக்கி மொழுக, என, தினமும் இரு வேளையும் வரவேண்டும் - காப்பி conditional... அதுவும் நாலாம் டிக்காக்ஷனில்....

துணி தோய்க்க/ மாட்டுத் தொழுவம் கவனிக்க கூடுதல் சம்பளம்.

பல ப்ராமணர்கள் ... வெளியில் பயம் ஜாஸ்தி ... எனவே வீடு தேடி வரும் எஜமானர்களுக்கான என்டெர்டெயின்மென்ட்... வேலைக்காரிதான்.   எஜமானியம்மாள் கண் கொந்திப் பாம்பாக கவனித்துக் கொண்டே இருப்பாள்...

இப்போது சீரியல் - அப்பொழுதெல்லாம் அல்லு அசல் வீடுகளின் சண்டை சச்சரவுகள் - வேலைக்காரி மூலமே வெளியில் தெரியும்... ஊர் வம்புகளின் ஊற்று... வேலைக்காரி.

விஞ்ஞானம் வளர வளர/ பெண்கள் வேலைக்குச் செல்லச் செல்ல  வேலைக்காரிகளின் demand/ conditions / எஜமானர் கள்ளத் தொடர்ப்பு / சம்பளம் / வேலையில் சுகாதாரக் குறைவு / ஆள் பற்றாக்குறை என பல சிக்கல்கள் உருவாக இன்று குடும்ப பெண்களின் தலையில் வீட்டு வேலை.

சரி நாம் பேச வந்த விஷயம் வழக்கம் போல இன்றய கொரோனாதான்!!

வேலைக்காரி பாத்திரம் சுத்தமாக துலக்கி வைக்க வேண்டும் - பால் மோர் சாத சாம்பார் கறை இருந்தால் அடுத்த சில நாட்கள் ஓயாமல் திட்டு விழும்...

அடுப்புக் கரி/ சாம்பல்/ தேங்காய் நார் தான் - (விம் பார் - ப்ரெஷ்) அன்று.

துலக்கி வைத்து விட்டு போன பாத்திர குவியலின் மேல் முதலில் பொதுவாக தண்ணீர் தெளிப்பார்கள்.

பின் ஒவ்வொரு பாத்திரமாக எடுத்து வீட்டினரே, புதுத் தண்ணீரில் முக்கி எடுத்து அலம்பி அதன் பின்னரே சமையல் அறைக்குள் பாத்திரம் போகும்...

என்னதான் அலம்பி,  உள்ளே உபயோகத்துக்கு எடுத்து வந்தாலும் - பாத்திரத்தின்  மேல் பல்லி/ கரப்பு / பாச்சை ஊர்ந்து போகும் வாய்ப்பு உள்ளதால் - பாத்திரமோ / கரண்டியோ பயன்பாட்டிற்கு முன் மீண்டும் ஒரு முறை கழுவப்படும்.

அதே போல ஒரு முறை உபயோகப் படுத்தப்பட்ட கரண்டி - காலை முதல் இரவு வரை பண்டத்தின் மீது தட்டு போட்டு அதன் மேலேயே வைத்திருந்து மறுவேளை உபயோகிக்கக் கூடாது - காரணம்,

#காற்றில்பரவும்கிருமி_தொற்று

இப்போதெல்லாம், வீட்டு எஜமானியின் வேலை பளு கருதி, பாத்திரம் துலக்க விம் பார்/ லிக்விட் போட்டு ஒரு சும்மா உழப்பு.... பார் / லிக்விட் பிசுபிசுப்பு கூட விலகாது - தண்ணீர் சிக்கனமும் / பற்றாக்குறையும் கூட இதற்கு காரணம் சொல்லப்படும்.

காய்ந்த சோற்றுப் பருக்கை/ பால் தீய்ந்த  கரை / தயிர் கரை / பாத்திர விளிம்பில் சாம்பார் மோர் கரை/ தோசை கல்லில் பொருக்கு தட்டி/ சாதக் கரண்டியில் கஞ்சி பிசுபிசுப்பு படிமானம் எல்லாம் ... இன்று தவிர்க்கவே முடியாத ஒன்று...

சரியாக துலக்காத பாத்திரத்தில் புதுப்பால் காய்ச்சும் போது பால் திரிந்துவிடும் - பால்காரன் பழைய பால் கொடுத்துவிட்டான் என மறுநாள் அவனோடு சண்டை / புகார்...

தேவைக்கு ஏற்ப பால் காய்ச்சினால் எரி பொருள் சிக்கனம் - ஆனால் சோம்பேறித்தனம் - மொத்த பாலையும் காய்ச்சி / பின் மீண்டும் மீண்டும் அதையே மாலைவரை சூடு படுத்தி... சுவை குறைந்து / பாத்திரம் கரை பிடித்து-

பாத்திரம் காய்ச்சிய பாத்திரத்திலேயே தயிர் தோய்ப்பது போல ஒரு உலக முட்டாள்தனம் கிடையவே கிடையாது ...

#வீட்டுக்குவீடுவாசப்படி!

பிடிக்கிறதோ/ பிடிக்கலையோ நாம் சாப்பிட்டே ஆக வேண்டும் - புலம்பல் / கூப்பாடு மகிமை அப்படி.

காலையில் சாம்பாருக்கு எடுத்த கரண்டிதான் இரவு வரை.

சாம்பார்/ இரசத்துக்கு ஒரே கரண்டிதான்!

அன்ன வெட்டிதான் கறி கரண்டியும்.

அநேகமாக, இந்த ஊரடங்கில் - கணவனின் / மனைவியின் phone / whats நட்புகள் - உரையாடல்கள் overheard - பாத்திர துலக்கல் சுகாதாரமின்மை - முழு நேர நடை உடை பாவனை பற்றிய பரஸ்பர தெளிவு / புரிதல் ...

இனி வரும் சகஜ நிலையில்,

ஆயிரக் கணக்கில் விவாகரத்து வழக்குகள் பதிவாகலாம் - இல்லை பரஸ்பர பிரிவு (on some understanding / adjustment to avoid delay and court expenses) என நிறைய சிக்கல்கள் வரலாம்!

எனக்கு ஒரு friend, philosopher, guide இருந்தார் ...

உன் வீடோ, பிறர் வீடோ, விடுதியோ - சாப்பிடப் போனால் சமையல் கட்டை பார்க்காதே - மீறி சமையலறையை பார்த்துவிட்டால் அங்கு சுத்தம் சுத்தம் சுகாதாரம் பார்க்காதே என்பார்.

தண்ணீர் மட்டும் போதும் என்று கிளம்பி விடு/ வெளியில் வந்து ரெண்டு வாழைப்பழங்களை சாப்பிட்டுக்கோ என்பார்.

இப்போதெல்லாம், பல வீடுகளில் தண்ணீர் கூட பாட்டிலில் (pet) தான்... jar இன் மூடி threadல் உள்ள நீர்/ பாசி கரை/அதன் வீச்சம் ...

சந்தியாவந்தனம்-2

#பலா_அதிபலா
#ஸந்தியாவந்தனம்

இந்த பதிவின் முதல் பகுதியை படித்துப் பார்த்த பின்னரே, கீழே உள்ள மந்திரத்தின் பெருமையை புரிந்து கொள்ள முடியும்!!

#பலா_அதிபலா மந்திரத்தை ஜெபிக்கும் முறை - ஸந்தியாவந்தன பாஷ்யம் - ஸ்ரீ ராமகிருஷ்ண மட - சென்னை வெளியீடு - அண்ணா சுப்ரமண்யய்யர் கைவண்ணத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

பகுதி 16 காயத்ரி உபஸ்தானம்.

பலாதிபலா மந்த்ரம் (முறைப்படியான தொடர் உபாசனை/ ஜெபத்தால் மட்டுமே சித்தி பெறமுடியும்) - ஒரு முறை ஜெபித்தேன் - பசி குறையவில்லை, தாகம் தீரவில்லை என்பது மடமை!

#மந்த்ர_பாராயணம்

பலாதி - பலயோர் விராட் புருஷ ரிஷி:
காயத்ரீச் சந்த:|
காயத்ரீ தேவதா||
அகாரோ-கார - மகாரா பீஜாத்யா:|
க்ஷுதாதி-நிரஸனே விநியோக:
க்லா- மித்யாதி ஷடங்க-ந்யாஸ:

#த்யானம்

அம்ருத-கர-தலார்த்ரெள ஸர்வ- ஸஞ்ஜீவனாட்யாவக - ஹரண - ஸு தக்ஷெள வேதஸாரே மயூகே| ப்ரணவ-மய - விகாரெள பாஸ் கராகார - தேஹெள ஸதத - மனுபவேzஹம் தெள பலாதி பலாந்தெள||

#மூல_மந்த்ரம்

ஓம் ஹ்ரீம் பலே மஹாதேவி,
ஹரீம் மஹா பலே,
க்லீம் சதுர்வித - புருஷார்த்த ஸித்திப்ரதே, தத்ஸவிதுர் - வரதாத்மிகே, ஹ்ரீம் வரேண்யம் பர்கோ தேவஸ்ய வரதாத்மிகே,

அதிபலே, ஸர்வதயாமூர்த்தே, பலே, ஸர்வ க்ஷுத்ப்ரமோபநாசினி, தீமஹி தியோயோநோ ஜாதே ப்ரசுர்ய: யா ப்ரசோதயாதாத்மிகே, ப்ரணவ சிரஸ்காத்மிகே, ஹும் பட் ஸ்வாஹா||

ஏவம் வித்வான் க்ருதக்ருத்யோ பவதி ஸாவித்ர்யா ஏவ ஸலோகதாம் ஜயதீத் - யுபநிஷத்||

- ஸாவித்ர்யூபநிஷத்,
ல், அடங்கியது...

நல்ல குரு முகமாக உபதேசம் பெற வேண்டும் - அல்லது மேதா தக்ஷிணாமூர்த்தி, ஹயக்ரீவர், குல ஆசார்யார் சந்நிதியில் அமர்ந்து முறையாக பக்தியோடு உபாசித்தால் மட்டுமே பலனை அடைய முடியும்!

சந்தியாவந்தனம்-1

#பலா_அதிபலா
#சந்தியாவந்தனம்

தாடகை வதத்துக்காக விஸ்வாமித்திரர் இராமபிரானை அழைத்துச் செல்கிறார்.

அப்போது, இராமனுக்கு பல அஸ்திர/ தர்ம/ மந்திர உபதேசங்களையும் விஸ்வாமித்திரர் உபதேசிக்கிறார்.

வால்மீகி ராமாயணம்,
பாலகாண்டம்
ஸர்க்கம் 22ல்,

விஸ்வாமித்திரர் இராமருக்கு சொல்கிறார்.

குழந்தாய், அகத்தூய்மைக்காக ஆசமனம் செய்; கால தாமதம் செய்யாதே; பலா அதிபலா என்ற மந்திரங்களை, நீ ஏற்றுக் கொள். (இவைகளின் பலனை கேட்பாயாக).

களைப்பு, காய்ச்சல், உடல் தேய்வு முதலியன உண்டாகாது.

தூங்கிக் கொண்டிருக்கும்போதோ, கவனக்குறைவாக இருக்கும் போதோ கூட நிசாசரர்கள் உன்னைத் தாக்க முடியாது.

மண்ணுலகில் உனக்கு நிகரான தோள் வலிமை உடையவர் எவரும் இருக்க மாட்டார். 

மூவுலகிலும் உனக்கு ஈடானவர் யாரும் இருக்க முடியாது.

அழகிலோ, சாமார்த்தியத்திலோ, மெய் ஞானத்திலோ, அறிவைக் கொண்டு காரியத்தை நிச்சயிப்பதிலோ, பிறருடைய கேள்விக்குப் பதில் சொல்வதிலோ, உனக்குச் சமமானவர் இந்த உலகத்திலேயே எவரும் இருக்கமாட்டார்.

எல்லா மந்திரஞானத்திற்கும் தாய் போன்றவை #பலா_அதிபலா என்ற மந்திரங்கள். இந்த மந்திரத்தில் நீ சித்தி பெற்றுவிட்டால் உனக்கு நிகரானவர்களே இருக்கமாட்டார்கள்.
(ஸ்லோகங்கள் 12 முதல் 16 வரை)

மனிதருள் மாணிக்கமே இராமா, பயணம் சென்று கொண்டிருக்கும்போது, இந்த மந்திரங்களை ஜபித்தால், பசி தாகம் உனக்கு ஏற்படாது.

இந்த 2 மந்திரங்களில் நீ தேர்ச்சி பெற்றுவிட்டால் எல்லையில்லாத புகழ் உன்னிடம் வந்து சேரும்.

இந்த மந்திரங்கள் (பலா அதிபலா) இரண்டும் ப்ரம்மாவின் புத்திரிகள்.

காகுந்தனே, மிக உயர்ந்த பலன் உடைய இந்த மந்திரங்களை உபாசிக்க தகுதி உனக்கு உள்ளது, - சர்வ வல்லமையும் முன்பே உடைய அறம் தவறாதவனே, இந்த மந்திரங்களை (பலா_அதிபலா) தகுதியுள்ள நீ பெற்றுக் கொள்வதால் உனக்கு இன்னும் பெருமை அளிக்கும்.
(ஸ்லோகம் 17 முதல் 19வரை)

விஸ்வாமித்திரர் இராமனிடம் மேலும் சொல்கிறார் :-

பலா_அதிபலா என்னுடைய தவவலிமையால் பெறப்பட்டவை (அதனால் கூடுதல் சக்தி பெற்றிருக்கிறது) உனக்கு பலவிதத்தில் உதவியாக இருக்கப் போகின்றன.

இதைக் கேட்ட ராமன்,

மலர்ந்த முகத்தோடு, ஆசமனம் செய்து, தூய்மை பெற்று, மாசற்ற மாமுனி விஸ்வாமித்திரரிடமிருந்து பலா அதிபலா மந்திர உபதேசம் பெற்று,  மேலும் அதிக முகப் பொலிவு வசீகரத்துடன் திகழ்ந்தார்

(ஸ்லோகம் 20 முதல் 23 வரை)

இப்படிப்பட்ட மகிமை வாய்ந்த பலா அதிபலா மந்திரங்களை,  ஜபிக்கும் முறை / மந்திரம் தனி பதிவாக தொடரும்!!

சுகமான கற்பனை

குசேலன், பிடி அவலில் குபேரன் ஆனவன். ஆனால் மஹா ஞானி - அந்த செல்வம் அவனை ஒருபோதும் கட்டுப்படுத்தவில்லை.

குசேலனின் கிருஷ்ண பக்தியே அவனை  உயர்ந்த நிலையில் நிறுத்தி இருந்தது.

ஒரு நாள் கண்ணனை காண வந்தான் குசேலன் - வழக்கம் போல ஆடையில் கவனமின்மை!!

கண்ணனுக்குத் தெரியும் - இன்று ஒரு தத்துவத்தை விளக்கிச் சொல்ல வேண்டிய நாள் என்று...

என்னடா... குசேலா, என்னை விட பணக்காரன் நீ, இப்படி சாதாரண - சற்றே வெளுத்து சாயம் போன கிழிந்த ஆடையுடுத்தி வந்திருக்கிறாயே!!

இல்லை கண்ணா, உன்னை காண வேண்டும் என்று புறப்பட்டாலே என் மனது - பழைய துணிகளையே நாடுகிறது... பழசை மறக்கக் கூடாது - அப்படி மறந்து விட்டால் காலியான அந்த இடத்தில் (மனசில்) கர்வம் புகுந்து கொள்ளும் என்று குசேலன் விளக்கம் சொன்னான்.

சுவாரஸ்யமான பேச்சு... குசேலன் முகத்தில் மட்டும் ஏதோ கேள்வி ரேகைகள்...

என்னடா, ஏதோ குழப்பமாக இருக்கிறாய்?! - இது கண்ணன்.

ஏண்டா கண்ணா, நீயோ சின்னப்பையன் - நீ எதுக்குடா கோபிகைகளின் வஸ்திரங்களை அபகரணம் செய்தாய்? தேவையா உனக்கு இந்த அவப்பெயர் - குசேலன் செல்லக் கோபமாக சந்தேகம் எழுப்பினான்!!

குசேலா நீ கீதையை படித்தாயோ!!

இல்லடா, உன்னையே நான் புரிஞ்சுக்க முடியலை - இதில் கீதையை படிச்சு புரிஞ்சுக்க எனக்கு எங்கேடா நேரமிருக்கு! அறிவு இருக்கு!!

கிருஷ்ணன் சொன்னான் - இதெல்லாம் எங்கிருந்து எடுக்கப்பட்டதோ மீண்டும் அங்கேயே சென்றடைகிறது - முக்காலத்திலும் எதுவும் இல்லாமலுமில்லை!! - இது கூட கீதையின் ஒரு தத்துவம்தான்.

அன்று கோபிகைகளின் வஸ்திரங்களை அபகரித்தேன் - காரணம் அவர்கள் என்னைச் சரணடைந்த புறவுணர்வு இல்லாவர்கள் - தர்ம சாஸ்திரப்படி மேல்வஸ்திரமின்றி குளித்து ஜலதேவதையை அவமதிக்கக் கூடாது - புறவுணர்வை மறந்து - ஜல தேவதையை அவமதித்த கோபிகேகள் இருகைகளை உயர்த்தி அபயம் கேட்டனர். அதனால் எனது யோக மாயை மூலம் அவர்கள் வஸ்திரங்களை மீண்டும் அருளினேன். மேல் வஸ்திரமின்றி குளிக்கக் கூடாது என்ற தர்மத்தையும் புரிய வைத்தேன்!!

பின்னால், திரெளபதி என்ன செய்தாள்?!

கெளரவ சபையில் முடிந்தவரை போராடினாள் - கடைசியில், என்னையே சரண் புகுந்து - சங்குசக்ர கதாபாணே, துவாரகா நிலயாச்சுத! கோவிந்த புண்டரீகாக்ஷ சரணாகதம் ரக்ஷமாம் என இருகைகளை உயர்த்தி என்னிடம் சரணடைந்தாள்!!

நான் எனது அதே யோக மாயையால் - சிறு வயதில் அன்று கோபிகைகளிடம் அபகரித்த அதே வஸ்திரத்தை கெளரவ சபையில் திரெளபதிக்கு அருளினேன்!

இருக்கிற இடத்தில் எடுத்துதானை, இல்லாத இடத்தில் கொடுக்க வேண்டும்?! என்று கிருஷ்ணன் குசேலனுக்கு எதிர் கேள்வி எழுப்பினான்!!

-

இதில் தர்மம் - ஒரு ஆண் இன்னொரு ஆடவனின் வஸ்திரங்களை அணிவதை - சமூகம், அந்தஸ்து, கர்மகால சூழல் ஒப்புக் கொள்ளாது!! வீட்டில் சகோதரர்கள் சேர்ந்து ஸ்ரார்த்தம் செய்தால் கூட ஆண்களுக்கான அவரவர் வஸ்திரம் முதல் நாளே அனுப்பப்பட்டு மடி உலர்த்தப்படும்.

ஆனால், பெண்களுக்கான மடி வஸ்திரம் - ஓர்புடிகளின் மாற்று மடி வஸ்திரங்களையே அணிந்து கொள்வது இன்றும் வழக்கமே!!

கற்பனைதான் - இன்று காலை இதமாக!!

பட்ட வில்வமரமும் - Air Pollutionம்


மனுஷாளுக்கு மட்டுமில்லே; மரங்களுக்கும் உண்டு Air Pollution. ஆசாரமில்லாமல், தீட்டுக் காலத்திலே மரங்களுக்குப் பக்கமா போனால், மரத்துக்குக் கெடுதல். வில்வமரம் அதனால்தான் பட்டுப் போயிருக்கு..-(தீர்வும் சொன்ன பெரியவா)

ஒரு சிவ பக்தர், நாள் தவறாமல் சிவ பூஜை செய்பவர். வீட்டுக் கொல்லையிலேயே வில்வமரம்.

பூச்சி அரிக்காத தளமாக சேகரித்து வைத்துக்கொண்டு ஆனந்தமாகப் பூஜை செய்வார்.

அந்த வில்வமரம் பட்டுப் போய்விட்டது.

லட்சம் ரூபாயை இழந்த சோகம், பக்தருக்கு.

வழக்கம்போல் பெரியவாள் தரிசனத்துக்கு வந்தபோது, துக்கம் தொண்டையை  அடைக்க,   வில்வமரம் பட்டுப்போய் விட்ட செய்தியைக் கூறினார்.

பெரியவாள், அவர் சொன்னதைச் செவியில் போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை. வேறு யார் யாருடனோ பேசிக் கொண்டும், ஆசீர்வதித்துக் கொண்டும் இருந்தார்கள்.

பின்னர், பக்தரைப் பார்த்து, " இப்போ Water Pollution, Air Pollutionனெல்லாம் சொல்றாளே, உனக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள்.

"ஆமாம்...குடிக்கும் தண்ணீர், சுவாசிக்கும் காற்று முதலியவற்றில் மாசு அதிகமாகிவிட்டதால், உடம்புக்குக்  கெடுதல் என்கிறார்கள்.

"நம்ம சாஸ்திரங்களில்கூட, Pollution பற்றிச் சொல்லியிருக்கு.

பக்தருக்குப் புரியவில்லை. பெரியவாள் எங்கே போய்க் கொண்டிருக்கிறார்கள்?.

பெரியவாள் சொல்கிறார்;

"Air Pollutionங்கிறது, மனுஷாளுக்கு மட்டுமில்லே, மரங்களுக்கும் உண்டு. ஆசாரமில்லாமல், தீட்டுக் காலத்திலே மரங்களுக்குப் பக்கமா போனால், மரத்துக்குக் கெடுதல்.  வில்வமரம்  அதனால்தான் பட்டுப் போயிருக்கு..."

பக்தர் ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.

"வில்வமரத்தின் வேர்ப்பகுதியிலே நிறையப் பசுஞ்சாணம் போட்டு, தினமும் தீர்த்தம் விடு. அதுதான் பிராயச்சித்தம்..."-பெரியவா.

சிவபக்தர் அவ்வாறே செய்தார். பதினைந்து நாள்களில், துளிர்கள் தெரியத் தொடங்கின. இரண்டு மாதங்கள் கழித்து தரிசனத்துக்கு வந்த பக்தர், அதே வில்வமரத்திலிருந்து வில்வம் பறித்து, பெரியவாளுக்கு வில்வமாலை சமர்ப்பித்தார். பசுஞ்சாணத்தில், உயிர்ச்சத்து - உயிர் தரும் சத்து - இருக்கிறது என்பதை, எந்த பாஷ்ய பாடத்தில் படித்துத் தெரிந்து கொண்டார்கள், பெரியவாள்!.

இது என்ன சப்ஜெக்ட்? பயாலஜியா?, பாஷ்யாலஜியா?. பசுபதியே அறிவார்!.

கர்த்தா

கர்த்தா என்ற தலைப்பில் பேச ஆரம்பித்தபோது, மனைவியில்லாதவனுக்கு கர்மம் செய்ய அதிகாரமில்லை என்று விவாதம் துவக்கினோம்.

பீஷ்மர் பித்ரு தர்ப்பணம் தந்தது - ஸ்மசானங்களில் பெண்கள் தொடர்பு இல்லை - தவ சிரேஷ்டர்களை கொண்டு - எஜமானஸ்ய சங்கல்பம் செய்து சம்பாவணை உள்ள யாகங்கள் என்றெல்லாம் விவாதம் தொடர்ந்தோம்.

சகரன் அஸ்வமேத யாகம், ராமன் அஸ்வமேத யாகம் குறித்துப் விவாதம் செய்து - இராமன் வண்ணான் சொல்லால் சீதையை பிரிந்து பின் அஸ்வமேத யாகத்துக்காக சீதையின் பிரதிமைக்கு பிராண பிரதிஷ்டை செய்து யாகம் என விவாதம் தொடர ...

இப்போ சில விஷயங்கள் புரிகிறது ... இதை ஆரோக்யமான / ஆராய்ச்சி பூர்வ விவாதமாக தொடருவோம்!!

இராமன் செய்த அஸ்வமேத யாகத்தில் சீதை - பிரதிமை பற்றிய குறிப்பு வால்மீகி இராமாயண அஸ்வமேத யாக குறிப்பில் இல்லை (1)

கர்ண பரம்பரை கதையில் சீதையின் மண்ணாலான பிரதிமைக்கு புதலா (puthala) என ப்ராண பிரதிஷ்டை செய்விக்கப்பட்டு ஹோமம் நடந்ததாக ஒரு கதையும் உள்ளது (2).

புனர்பூச நக்ஷத்திரத்தாருக்கு இரு தாரம் (ஆணோ/ பெண்ணோ) என்ற ஜோதிட நம்பிக்கை (குறிப்பாக சூரிய குலத்தில்) ஒன்றும்  உண்டு.

சூரியனுக்கு உஷே அவள் மகன் யமன்.

சூரியனின் வெம்மை தாங்காத உஷே, தனது நிழலில் உருவாக்கிய சாயா (நிழல்) தேவி சூரியனின் இரண்டாவது மனைவி -  மகன் கருப்பு நிற சனீஸ்வரன்.

இரு மனைவியர் என்பதை விட இதை ஓருயிர் ஈறுடல் என்று சொல்லலாம்.

உஷே வின் நிழல் அம்சமே சாயா...

அது போல பூமியில் நுகத்தடி (ஏர் கலப்பை - சீதா) யில் உருவான பூமா தேவி அம்சமான சீதா, மீண்டும் மண்ணாலான புதலா வாக அம்சம் ஒன்றே உருவம் இரண்டு...

ஒன்று மட்டும் புரிகிறது...

ஹிந்து மஹா சமுத்திரம் ஒரு வைர வைடூர்ய தங்கச் சுரங்கம்...

தோண்டத் தோண்ட பொக்கிஷங்கள் ....

சைவ வைணவ பேதம் இல்லை -2

#ஆதாரம்_2

ஹிந்து தர்மத்தில் - (குறிப்பாக தமிழகத்தில்) நல்லிணக்கமில்லை. இதற்கு முக்கிய காரணம் - சைவ வைணவ சண்டைதான்!

வடக்கே இத்தனை சண்டை -  பேதம் இல்லை.

வால்மீகி இராமாயணத்தில் - இராமேஸ்வரத்தில் - சீதை பிடித்த மண் சிவலிங்க பூஜை - ஹனுமன் கொண்டு வந்த காசி லிங்கம் பற்றிய குறிப்பு இல்லை...

பிராமணன் கடல் தாண்டினால் - ப்ராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும் - இல்லாவிட்டால் குல ஆச்சாரியார் பாத காணிக்கையை கூட ஏற்கக்கூடாது என்பது விதி...

அதற்காக வருடம் ஒரு முறை வெளிநாடு டூர் / ஒவ்வொருமுறையும்  ப்ராயச்சித்தம் செய்து கொண்டேன் என்றால் excessive consumption of anti biotic மாதிரி ...

அது என்ன பிரம்மணன் கடல் தாண்டக் கூடாது - அவன் என்ன உசத்தியா?!

காரணம், பிராம்மணன் என்பவன் குணத்தால் உருவானவன் / குலத்தால்/ பிறப்பால் அல்ல...

intellectual property எல்லை தாண்டக் கூடாது...

வெளிநாட்டு முதலீடு - assembly மட்டுமே இங்கு... முக்கிய மூலப்பொருள் அங்கிருந்து வரும் - அல்லது formula வெளிநாட்டினர்க்கு மட்டுமே தெரியும்...

இந்திய இராணுவ தளபதிகள் IAS / IPS மந்திரிகள் / முக்கிய அதிகாரிகள்/ விஞ்ஞானிகளும் வெளிநாடு செல்ல அரசு அனுமதி பெறவேண்டும்...

காரணம் அவர்களும் intellectuals - may not be  Brahmins...

இந்த அறிவாளிகளுக்கும் / இந்த மண்ணுக்கும் உள்ள தொடர்பு (earth connectivity) விட்டுப்போகக் கூடாது!!

எனவே இராமன் கடல் தாண்டி புஷ்பக விமானத்தில் இலங்கையிலிருந்து திரும்பிய போது சிவ பூஜை செய்தது சர்வ சத்தியம்...

காசியில் பல்லி ஒலி எழுப்பி / கருடன் வட்டமிட்டு ஹனுமனுக்கு லிங்கத்தை அடையாளம் காட்டியதால், இன்று வரை பைரவர் ஆணைப்படி, காசியில் பல்லி ஓசை கேட்காது... கருடன் காசி எல்லைக்குள் பறக்காது!!

ஆனால் வால்மீகியில் இந்த கதை இல்லை - ஆதாரமில்லை ...

வில்லுண்டி தீர்த்த கதையையும் - சீதை தாகம் தணிக்க ராமர் உருவாக்கிய கடலின் மேல் பரப்பில் உள்ள மணற்திட்டு கேணியில் சுவையான நீர் கிடைத்ததே... அதற்கும் ஆதாரமில்லை...

இலங்கைக்கு இராமசேது வழியாக நடந்து சென்றால் 23 யோஜனை தூரம் நடக்க காலதாமதம் ஆகும் என இராம லஷ்மணர்கள் வாநர வீரர்கள் ஹனுமன் / அங்கதன் தோள்களில் வான்வழிதான் கடந்தனர்...

அதற்காக இலங்கை திரிகோணமலை கோனேஸ்வரர் கோவிலில் இராமர் சிவ வழிபாடு செய்தார் ... இதற்கும் வால்மீகியில் ஆதாரமில்லை...

இராமர் புஷ்பக விமானத்தில் திரும்பும் வழியில் - இராமசேது அமைக்க இங்குதான் பூஜை செய்து தனிப் பெரும் ஈசரான  மகாதேவர் அருள்/ஆசி பெற்றேன் என்ற ஒரு குறிப்பு உள்ளது வால்மீகி  இராமாயணத்தில் யுத்த காண்டம் ஸர்க்கம் 126 ஸ்லோகம் 15-17...

லவணன் என்ற வீரனை (ருத்ரனிடமிருந்து சூலாயுதம் பெற்ற பரம்பரை) பரதன் கொல்வதாக ஒரு கதை வால்மீகியில் உண்டு (உத்தர காண்டம் ஸர்க்கம் 61 முதல்)... லவண சமுத்திரம் என திருநெல்வேலி ஜில்லாவில் ஒரு ஊர் இருக்கே... அதுவும் ஆதாரமில்லையா?!

நெல்லை - நாகர்கோவில் பாதையில் மகேந்திரகிரி என்ற மலை - அதன் மீதிருந்தே ஹனுமன் கடல் தாண்டுகிறான்.... இன்று அங்கு ISRO centre உண்டு... ராக்கெட் ஏவுதளம் உருவாக்கப்படுகிறது... அது ஆதாரமில்லையா?!

சஞ்சீவி மலையின் ஒரு துண்டு விழுந்து மருத்துவாழ் மலை கன்யாகுமரியில் இன்றும் உண்டு...

சீதை பிடித்த மணல் லிங்கத்தை ஹனுமன் அகற்ற நினைத்து - கைகளால் முடியாமல் போக - மணல் லிங்கத்தை வாலில் பிணைத்து இழுத்ததாக ஒரு வரலாறு அதற்கும் வால்மீகியில் ஆதாரமில்லை...

ஆனால் இராமநாத புரத்திலிருந்து இராமேஸ்வரம் செல்லும் வழியில் வாலாந்தரவு (அனுமன் வால் அறுந்து விழுந்த இடம்) என்ற ஊர் பற்றிய ஆதாரமும் வால்மீகியில் இல்லைதான்...

இவன் பெயரே சங்கரன்... சைவப் பற்றினால் வெறி கொண்டு எழுதுகிறான்...

நரசிம்மரின் உக்கிரத்தை தனிக்க சிவ பெருமான் ஸ்தோத்திரம் செய்கிறார்...

வ்ருத்தோத்புல்ல விசாலாக்ஷம்
விபக்ஷக்ஷயதீஷிதம் நிநாத த்ரஸ்த விஸ்வாண்டம் விஷ்ணும் உக்ரம் நமாம்யகம்...

விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் பார்வதி கேட்க... ஈஸ்வர உவாச...

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே...

ஈசன் விஷ்ணு வை வழிபட்ட விஷேஷங்கள் இன்னும் உண்டு...

திவ்யக்ஷேத்திரம் 7, திருக்கண்டியூர் - பிரம்மன் சிரத்தை கொய்த சிவனின் கையில் அந்த தலை திருவோடாக ஒட்டிக் கொண்டது ...

சைவர்கள் இதற்கு ஒரு  விமோசன கதை சொல்லுவார்கள்  -

காசியில் அன்னபூரணி அனுக்ரஹத்தால் - திருவோடு நிறைய - திருவோடு கையை விட்டு நீங்கியது என்று...

திருக்கண்டியூர் சிவன் மேற்கு பார்த்த சந்நிதி... கொஞ்சம் diagonally opposite (south west - குபேர மூலையில்) திவ்யக்ஷேத்திரம் 7ல் உள்ள பெருமாள் கோவில் இருக்குமிடத்தில் பிரம்மாவின் திருவோட்டுத்தலை கீழே விழுந்து நொறுங்கியது - பெருமாள் பெயரே ஹர சாப விமோசன பெருமாள் ...

பரம்பொருள் ஒன்றே பலவல்ல, சத்தியம் ஒன்றே இரண்டல்ல...

நமக்கு சில விஷயங்களை உணர்த்த - hero double/triple role களில் இவர் அவரைப் பணிவதும் - அவர் இவரைப் பணிவதும் very common...

சலந்தராசுரனிடமிருந்து சக்ராயுதத்தை மீட்டுத் தரக்கோரி மஹாவிஷ்ணு,  திருவீழிமிழலையில் மாப்பிள்ளை ஸ்வாமிக்கு  ஆயிரமாவது தாமரை மலராக தன் கண்ணையே இடந்து பாதத்தில் படைப்பதும்... சத்தியம்...
(பாதாள நந்தியும் விஷேஷம் இங்கே)...

வீர சைவர்களுக்கு சிவனே உசத்தி (மற்றபடி பெரும்பாண்மை சைவர்களுக்கு விஷ்ணு பேதம் கிடையாது) ...

ஆனால், பெரும்பாண்மை  வைணவர்களுக்கு... இராமேஸ்வரமே இல்லை... திருப்புல்லாணிதான் ஏற்றம்!!

வால்மீகி இராமாயண பாலகாண்டம் ஸர்க்கம் 36/37 கந்தனின் பிறப்பு பற்றிய குறிப்புகளை...

தாடகை வதத்துக்காக இராம லக்ஷ்மணர்களை  அழைத்துச் சென்ற விஸ்வாமித்திரர் வழிநடை கதையாகச் சொல்கிறார் ...

மஹாபாரதத்தில் ஜயத்ரதனிடம் சிவனே நேரில் வந்து சொல்கிறார் - க்ருஷ்ணன் (விஷ்ணு) சிநேகிதன் அர்சுனனுக்கு சாரதியாக வர,  பூபாரத்தை குறைக்க நானே எனது பாசுபதாஸ்திரத்தை அர்சுனனுக்குத்  தந்துள்ளதாக - (வியாஸபாரத வனபர்வத்தில்)

க்ருஷ்ணன் யுத்த நேரத்தில் கலங்கிய மனம் கொண்ட தர்மபுத்திரனை தேற்ற - தேவர்கள் சேனாதிபதியான முருகனைப் போல த்ருடத்யும்னன் இங்கே உங்களோடு இருக்கிறான் என்று பீஷ்ம பர்வத்தில் சொல்கிறார் ...

 ஹிந்துக்களே குறிப்பாக, தமிழர்களே -  சைவ - வைணவ பேதம் பார்த்து நம்மை நாமே அழித்துக் கொள்கிறோம் ...

வைணவர்களே, 

வ்ருத்தோத்புல்ல விசாலாக்ஷம் - உன்மை என்றால் சரபர் உன்மை...

வீர சைவர்களே,
 சட்டைநாதர் உன்மை என்றால் - ஹரசாப விமோசன பெருமாளும் உன்மை...

வால்மீகியில் விஸ்வாமித்திரர் இராமனுக்குச்  சொன்ன ஸ்கந்த புராணம் உன்மை ...

வியாஸ பாரதத்தில் எண்ணற்ற இடங்களில் உள்ள சிவ / ஸ்கந்த குறிப்புகளும் உன்மை...

#ஸ்ரீராமதூதமஹா_தீர
#ருத்ரவீர்யசமுத்பவ
அஞ்சனாகர்ப்ப ஸம்பூத
வாயுபுத்ரா நமோஸ்துதே...

ஒன்று பட்டால் நமக்குண்டு வாழ்வு - ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு!!

ஈஸ்வரோ ரக்ஷித்து:

சைவ வைணவ பேதம் இல்லை -1

#ஆதாரம்_1

இது மூலப்பத்திரம் பற்றிய அரசியல் பதிவு அல்ல - ஆன்மீக பதிவு!

தர்ம விஷயங்களை நாம் சொல்லும் போது - பீஷ்மர் தர்ப்பணம் கொடுத்தார்...

சீதை கயா வில் /அட்க்ஷய வடத்தில் மண்ணால் பிண்டம் உருட்டி தசரதன் கையில் கொடுத்தார் என்ற சம்பவங்கள் எல்லாம் சொல்கிறோம்!!

இதில் பல விஷயங்களுக்கு பிரமாணமாக வியாச பாரதத்தில் / வால்மீகி இராமாயணத்தில் ஆதாரங்கள் இல்லை.

கருட புராண கயா ஸ்ரார்த்த மஹாத்மியத்தில் கூட சீதை / தசரத குறிப்புகள் இல்லை...

ஆனாலும், கர்ண பரம்பரையாக சொல்லப்படும் விஷயங்களுக்கு - குறிப்பாக நம்பிக்கையின் அடிப்படையில் - தர்மத்தை அனுஷ்டிக்கச் சொல்லி வலியுறுத்தும் விஷயங்களுக்கு எல்லாம் ஆதாரம் கேட்பது என்பது மனிதனின் மன நோய் அல்லது அகம்பாவத்தையே காட்டுகிறது...

மனிதன் சில தர்மங்களை அனுஷ்டிக்க வேண்டும் - அதை வலியுறுத்தி அனுஷ்டிக்கச் செய்யவேண்டி தேவர்கள்/ தெய்வங்கள்   கூட அனுஷ்டித்ததாக உதாரணங்களை சொல்லி இருக்கலாம் - அல்லது அப்படிப்பட்ட ஆதாரங்கள் நமக்கு கையில் கிடைக்காமல் இருந்து இருக்கலாம்!

எல்லாவற்றுக்கும் ஆதாரம் ஆதாரம் என்றால் - வால்மீகியின் / வியாசரின் மூல original script ஒன்றை மட்டுமே தான் ஒப்புக்கொள்ள வேண்டும்.

ஸ்ரவணம் மூலம் செவிகளில் கேட்டு மட்டுமே அத்யயணம் செய்யப்பட்ட வேதங்களை படி எடுக்கும் போது - சில வார்த்தைகள் விட்டுப் போய் / அல்லது மாற்று அர்த்தத்தில் கூட பதியப்பட்டு இருக்கலாம்!!

தாய்/ தந்தைக்கான ஆதாரம் வேண்டி DNA certificate கூடவே கையில் எடுத்து அவவ்போது டிரைவிங் லைசென்ஸ் போல புதுப்பித்துக் கொண்டே இருக்க முடியுமா?!

பாரத தேசத்தில் இன்று வரை நடுவு நிலை / செக்யூலர் பேசிக் கொண்டு இந்துக்களுக்குள் ஒரு ஒற்றுமையுணர்வு இல்லாமல் போறதற்கே காரணம் - இரண்டு!!

#முதல்_காரணம்

தர்மத்தின் மீது நம்பிக்கை வைக்காமல் எல்லாவற்றுக்கும் ஆதாரம் தேடுகிறோம்/ கேட்கிறோம்.

simply, அக்னி சாட்சியான திருமண பந்தத்துக்குக் கூட இன்று தாலி போதுமானதாக இல்லை - திருமண பதிவு என்ற ரிஜிஸ்டிரார் தரும் சான்றிதழே அடிப்படையாக தேவைப்படுகிறது நமக்கு!

நன்றாக நினைவில் கொள்ளுங்கள் - ஹிந்து தர்மத்தில் சொல்லப்பட்டுள்ள 8 வித விவாகத்தில் (ஆதி பர்வம் - மஹாபாரதம் - துஷ்யந்தன் சகுந்தலா விவாகம்) தாலி என்ற அடையாளம் கூட வலியுறுத்தப்படவில்லை!!

சப்தஸ்திதி என்று 7 அடிகள் எடுத்து வைத்து மந்திர பூர்வ நடை மட்டுமே திருமண அடையாளம் / ஒப்பந்தம் - இப்படி தாலி இல்லாத திருமண முறிவுக்குக் கூட இன்று விவாகரத்து நீதி மன்ற ஆணை காகிதம் என்ற ஆதார லெவலுக்கு நாம் ஹிந்து தர்மத்தை நாமே கேவலப் படுத்திக் கொண்டு விட்டோம்!!

மாறாக ஒரு உதாரணம் சொல்கிறேன் -

இஸ்லாத்தில் அல்லா வின் ஆணை என்று,  நபி அறிவித்த முத்தலாக் சடங்கை -  அறிவித்ததற்கான  ஆதாரம் எங்கே என்று கேட்டு இஸ்லாமியர்கள்  போராடவில்லை!!

அது போல அந்த வார்த்தையே பிரமாணமாக ஏற்ற அவர்கள்  திருமண பந்தத்தை முறித்துக் கொண்டு, - மதத்தை (அவர்கள் தர்மத்தை) நம்புகிறார்கள்.

ஆனால், ஹிந்து ஆதாரம் தேடி நாசமானோம்!

#இரண்டாவது_காரணம்

ஹிந்து உணர்வில் இன்று இவ்வளவு ஒற்றுமையின்மைக்கு குறிப்பாக தமிழகத்தில் - தமிழர்க்கு மதமில்லை என்றும் - திராவிட பிரிவினைவாதம் பேசவும் - ஹிந்து ஒற்றுமைக்கு எதிராக திராவிடியம்/ இஸ்லாம்/ கிறித்தவம் ஒன்றிணைந்து - ஹிந்து தர்மத்தை அழிக்க / எதிர்க்க முக்கிய காரணமே சைவ - வைணவச் சண்டைதான் !!

இது பற்றி இன்னும் விரிவாக பேச வேண்டியுள்ளது எனவே தனி பதிவாக தொடர்கிறேன் இரண்டில்!!

சைவ வைணவ பேதம் இல்லை -3

மஹாபாரதம்  த்ரோணபர்வம் 15ஆவது நாள் முடிவு

துரோணர் மரணம் அடைந்துவிட்டார். அதனால், அவரது மகன் அஸ்வத்தாமன் மிக கோபத்தில் இருக்கிறார். பழிக்குப் பழி வாங்க சபதமேற்ற்கிறார்.  துரோணர் அர்ஜுனனுக்கே கற்று தராத பல அஸ்திரங்களை அஸ்வத்தாமாவுக்கு சொல்லி கொடுத்துள்ளார். அவைகளில் சில, அர்சுனன், ஏன் கண்ணனுக்கே தெரியாதவை என்ற உன்மையையும் அஸ்வத்தாமன் துரியோதனனிடம் தெளிவாக சொல்கிறார்!!

அதில் மிக முக்கியமான அஸ்திரம் ஆக்னேய அஸ்திரம்.

(பிரம்மாஸ்திரம் - Moscow உதவியுடன் தயாரிக்கப்பட்டதால் இந்திய ஏவுகணைக்குப் பெயர் பிரம்மோஸ் - அதே போல அக்னியை பொழியும்  - மகாபாரதத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளது - ஆக்னேய அஸ்திரம்   அதுதான் இந்தியாவின் அக்னி ஏவுகணைகள் இன்று)

அதை அஸ்வத்தமான் பிரயோகிக்க அதன் வெப்பத்தை தாங்க முடியாமல் பாண்டவர்கள் தவிக்கிறார்கள்.

அப்பொழுது கிருஷ்ணன் ஆலோசனைப்படி அர்ச்சுணன்,   வருண பகவானின் துணை கொண்டு அந்த அஸ்திரத்தின் பலத்தை இழக்க செய்கிறார்.

இதனால் போரில் விருப்பம் இல்லாமல் அஸ்வத்தாமன் விரக்தியில் போர்களத்தை விட்டு செல்லும் போது முதல் முறையாக வ்யாஸ மகரிஷி வருகிறார் (கெளரவ தரப்புக்காக குருக்ஷேத்திரம் வருவது இதுவே முதல் முறை).

அஸ்வத்தாமன் அவரிடம் நான் எந்தவிதமான யுத்த தர்மத்தையும் மீறவில்லை. இருந்தாலும் நான் பிரயோகித்த ஆக்னேய அஸ்திரம் பெரும்பாலான பாண்டவ தரப்பு சேனையை நாசம் செய்தது .... ஆனால்  கிருஷ்ணனையும் அர்ஜுனனையும் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்று கேட்கிறார்.

அப்பொழுது வ்யாஸ பகவான் நர நாராயண தத்துவத்தை (அவதார ரகசியத்தை) அஸ்வத்தாமாவுக்கு  சொல்கிறார்.

பல யுகங்களுக்கு முன் தர்மர் என்பவருக்கு நாராயண  என்பவர் மகனாக பிறக்கிறார்.  அவர் பிரம்மன் மற்றும் ருத்ரனை குறித்து கடும் தவம் செய்கிறார்.  முதலில் பிரம்மன் காட்சி கொடுக்கிறார்.  பின் நாராயண ரிஷி ருத்ரனை லிங்க வடிவில் பூஜிக்கிறார்.  அதில் மகிழ்ந்து பரமேஸ்வரன் காட்சி கொடுக்கிறார்.

அப்பொழுது நாராயண ரிஷி தவத்தால் மகழ்ந்த பரமேஸ்வரன் பெரிய வரம் ஒன்றை கொடுக்கிறார்.  எந்த ஒரு காலத்தில் நமக்குள்ளேயே பகை ஏற்பட்டாலும் என்னால் உன்னை வெல்ல முடியாது.  எனச் சொல்லி பல வரங்களை வழங்குகிறார்.

அதற்கு பிறகு நாராயண ரிஷி நரன் என்ற ஒருவரை படைக்கிறார்.

அந்த நர நாராயணர்களே அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணன் என்ற பெரிய உண்மையை விளக்குகிறார்.

இதை கேட்ட அஸ்வத்தாமன் வியாசர் மற்றும்  கிருஷ்ணா பகவான் இருந்த திசையை நமஸ்கரித்து விடை பெறுகிறார்.

பின்பு அர்ஜுனனனை சந்தித்த வ்யாஸர் இதே விஷயத்தை இன்னும் மிக தெளிவாக அர்சுனனுக்கு  எடுத்து உரைக்கிறார்.

அதற்கு காரணம் - அர்ச்சுனன் சொன்ன சேதி ... ஸ்வாமி நான் யாரையுமே இந்த யுத்தத்தில் கொல்லவில்லை....‌என் ரதத்துக்கு முன் ஜோதிப் பிழம்பாக தரையில் கால் படாது கையில் சூலாயுதம் ஏந்திய ஒருவரை கண்டு எதிரிகள் எல்லோரும் வீழ்ந்தனர்... ஆனால் காண்போர்கள் எதிரிகளை நான் வீழ்த்தியதாக நம்பியதாக அர்ச்சுனன் சொல்கிறான்.

இந்த இடத்தில் வ்யாசர் அர்ச்சனனிடம் அஸ்வத்தாமாவிடம் கூறியதை விட அதிக புராண மேற்கோள்களை / அம்சங்களை விளக்கி நர-நாராயண விவரங்கள் சிவ லிங்க பூஜையின் மகிமையால் நாராயணர் பெற்ற பலன்கள் ஆகியவற்றை விரிவாக விளக்குகிறார். (in depth description) ஈஸ்வரனின் பஞ்சபூத தத்துவம் உட்பட...

ப்ரம்மம் ஒகட்டே...‌பரப்ரம்மம் ஓக்கட்டே...

99% : 1% என்று இருந்தாலும் இருக்கின்ற இரண்டு வஸ்துக்களில் ஒன்று என்றுதான் ஆகிறது ...

எனவே, அயம் ஆத்மா ப்ரம்மம் - ப்ரம்மா விஷ்ணு சிவ - படைப்பு காத்தல் அழித்தல் - GOD - Generator பிரம்மா Organisor விஷ்ணு Destructor சிவன்.

Its only single person doing multiple roles!

சைவ  வைணவ பேதம் இல்லை என்பதை வ்யாஸ பாரதத்திலிருந்து  நாம் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

அவதாரங்கள்

அவதாரங்கள் என்றவுடன் நாம 10 என்று சொல்கிறோம் - ஆனால் அது தவறு...

ஆதி நாராயண ஸ்வரூபமாகி விராட புருஷ அவதாரமே எல்லா அவதாரங்களுக்கும் கருவூலம் ...

பிரளய காலத்தில் இவர் ஜல சயனத்திலிருந்தபோது  இவரது நாபிக் கமலத்திலிருந்து பிரும்மதேவர் தோன்றினார்...

பிரம்மதேவர்க்கு உதவியாக தக்ஷன், மரீசி...

(இவர்களுக்கு முன்பே பகவான் வாசுதேவன், இவ்வுலகை படைக்கக் கருதி - மஹத் - அஹங்காரம், 5 தன்மாத்திரைகள், 16 கலைகள் அடங்கிய விராட்புருஷ திருவுருவை மேற்கொண்டார்...

16 கலைகள் ...
(அந்தக்) அறிவுப்புலன்கள் 5 (புற) செயற்புலன்கள் 5 பூதங்கள் 5 + மனசு ஆகியவை உள்ளடங்கியவரே விராட் புருஷர்...

பிரும்மாவின் அம்சமான மரீசி முதலிய பிரஜாபதிகள் மூலம் தேவர்கள் மனிதர்கள் விலங்குகள் தோற்றுவிக்கப்பட்டனர்.....

விராட் புருஷனின் அங்கங்களிலிருந்து பல வகையான உலகப்படிகள் தோன்றின. (பிரபஞ்சங்களின் உற்பத்தி)

இவர்தான் பரம்பொருள் ஒன்றே பலவல்ல - சத்தியம் ஒன்றே இரண்டல்ல ...

இதை சுலபமாக புரிய வைக்க - அம்பாள் திரு நாமங்களில் 1 ப்ரம்ம விஷ்ணு சிவாத்மிகாயை நமஹ:

அதாவது ப்ரம்மா விஷ்ணு சிவன் எல்லோருக்குள்ளும் இருக்கும் ஆத்மா ஒன்று அதனுள் ஊடுருவி இருப்பதும் லலிதாதிரிபுரசுந்தரியாகிய இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி ஸ்வரூபிணி யாக ப்ரம்மா சரஸ்வதி விஷ்ணு லக்ஷ்மி சிவ பார்வதி ...

creator / Generator must hv new ideas / design - intellect - saraswathi

organisor - should have enough money - Lakshmi

destructor should have energy/ power சக்தி - Parvathi

1 விராட் புருஷரான பகவான் வாசுதேவனே முதலில் (ஸநத்குமாரர் முதலிய) கெளமார அவதாரத்தை மேற்கொண்டு அரிய பிரும்மச்சரிய விரதத்தை இடைவிடாது கடைபிடித்து ஒழுகினார்...

ஸநத்குமாரர் என்பவர்கள் - புரிதலுக்காக தக்ஷிணாமூர்த்தி காலருகே அமர்ந்து பாடம் கேட்பவர்கள் - கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறங்கம் முதற்கற்ற கேள்வி வல்லார்கள் #நால்வருக்கும் +...

கெளமார அவதாரம் - புரிதலுக்காக ஆதி சங்கரர் 74 பிரிவுகளாக இருந்த ஹிந்து தெய்வ வழிபாட்டு முறைகளை ஷண்மதங்களாக வகுத்தார் - சைவம் (சிவ) வைணவம் (விஷ்ணு) காணபத்யம் (விநாயகர்) செளரம் (சூரிய) சாக்தம் (அம்பாள்) கெளமாரம் (முருகன்) ....
வடக்கே முருகன் ப்ரம்மச்சாரிதான் - தொகுத்தவர் தெற்கத்தி சங்கரர் என்பதையும் நினைவில் கொள்க!...

2வது அவதாரம் வராக அவதாரம்

3 #தேவரிஷி_நாரதர் - வைஷ்ணவ சாஸ்திரமான பாஞ்சராத்ரம் (5இரவுகளில் தொகுக்கப்பட்டது) ஆகமம் செய்தவர்.

4 தர்ம பிரஜாபதி மனைவி மூர்த்தி என்பவளிடம் நர, நாராயண ரிஷிகளாக மன ஒடுக்கத்தை கைக் கொண்டு தவமியற்றுகின்றனர் (இதுவே துரோண பர்வம் - குருக்ஷேத்ரம் 15ஆவது நாளில் வியாஸரால் அஸ்வத்தாமாவுக்கு விவரிக்கப்படுபவர்கள்)

5 சித்தர்களின் தலைவனாக கபில வாசுதேவனாக - ஸாங்க்யம் என்ற யோகத்தை புதுபித்து ஆசுரி என்ற அந்தணருக்கு உபதேசிக்கிறார் (ஸாங்க்யம் - வழி/விதி முறைகள்)

6 அத்ரி மகரிஷி அனசூயா தேவிக்கு தத்தாத்ரேயா ஆத்ரேய புத்ரா வாக...  ஆன்ம ஞான உபதேசம் அலர்க்கன் - ராஜரிஷி மற்றும் பிரகலாதன். பகவானே அவதரித்த முதல் கோத்ரம் என்பதால் ஆத்ரேய கோத்ரத்துக்கு ஏற்றம் - மகிமை ...

7 ருசி என்ற பிரஜாபதி மனைவி ஆகூதி என்பவளிடம் யக்ஞன் என்ற அவதாரம் ...

8 நாபியின் மனைவி மேருதேவி வயிற்றில் ரிஷபதேவராக (சந்யாச தர்மத்தை நிலைநிறுத்த)

9 பிருது என்ற அரசராக

10 சாக்ஷுஷ மன்வந்தர முடிவில் ஏற்பட்ட மஹாபிரளயத்தில் மத்ஸ்யாவதாரம்

11 கூர்ம

12 தந்வந்திரி (custodian of அமிர்தம்)

13 மோகினி

14 நரசிம்மர்

15 வாமனர்

16 பரசுராமர்

17 வியாஸர் (பராசரர் சத்யவதி) (இராமருக்கு முற்பட்டவர் )

18 இராமன்

(இராமாயணம் ஆட்டோ பயோக்ராஃபி - பிறரால்  அறிந்து - சொல்லி  எழுதப்பட்டது)

19 பலராமன்

20 கிருஷ்ணன் (விருஷ்ணி வம்சம் - யது குலம்)

- பாகவதம் -  சுயசரிதை .... 20வது தன் அவதாரத்தை பற்றி 17வது அவதாரமே எழுதியது -

மகாபாரதம் கூட வியாசர் சொல்ல கணபதியால் எழுதப்பட்டது ....

21 கலியுக தொடக்கத்தில் கீகடம் என்கிற மகத ராஜ்யத்தில் அஜனன் என்பவர் மகனாக புத்தர் என்ற திருப்பெயருடன்

(this Bhuddha hijacked - separated - particularly by Christians after extensive study of our epics - with an conversion ideology - prior to Muslim/ Christians Adi Sankara and Azhvaars / Nayanmars kept them tact in fold .... During Christian rule thru Ambedkar  - promotion - declared constitutionally separate Religion - hope may be post corona China 160c+ population + other Buddhists country may come back to Hindu fold with vegetarian adoption atleast a majority portion)

22 கலியுக முடிவில் அரசர்கள் திருடர்கள் போல கொள்ளையர்கள் ஆகும்போது பகவான் விஷ்ணுயசஸ் என்கிற அந்தணனுக்கு கல்கி என்ற திருப்பெயரோடு பிறப்பார்.

வற்றாத ஏரியிலிருந்து எண்ணற்ற வாய்க்கால்கள் தோண்டப்படுவது போல - பகவானுக்கு அவதாரங்களும் எண்ணற்றவை

இந்த 22 + ஹம்ஸா மற்றும் ஹயக்ரீவ அவதாரமும் பகவானுக்கு உண்டு ...

#நாரதமுதலியமகரிஷிகள்  மனுக்கள்,  இந்திராதி தேவர்கள், மனு புத்திரர்கள் தக்ஷ ப்ராஜாபதிகளும் விராட் புருஷனின் கலைகளே!!

மேலே சொல்லப்பட்ட அத்தனை அவதாரங்களும் - விராட்புருஷனின் அம்சங்கள் - ஆணால்  ஸ்ரீ கிருஷ்ணன் சாட்சாத் பகவானே ...

ஆதாரம் : ஸ்ரீ மத் பாகவதம், முதல் ஸ்கந்தம், அத்யாயம் 3.

வேதஅத்யயணம் சத்தியம் எது_உயர்ந்தது

தன்னை மணந்து - தன் வயிற்றில் பரதன் என்ற மகனையும் தந்துவிட்டு நகரத்துக்கு வந்துவிட்ட துஷ்யந்தன் மீண்டு வரவேயில்லை என்பதால் சகுந்தலை தகப்பனார் கண்வர் என்ற மகரிஷியின் ஆஸ்ரமத்திலேயே வசிக்கிறாள் சகுந்தலை!!

ஒரு நாள் சகுந்தலையின் தகப்பனார் கண்வர் (ரிஷி) தன் மகள் சகுந்தலையிடம், நீ நகரத்துக்கு சென்று துஷ்யந்தனிடம் - நடந்ததைச் சொல்லி அவனோடு சேர்ந்து வாழ்வதே உனக்கும் / பரதனுக்கும் நல்லது என்று சொல்ல ...

சகுந்தலை மகன் பரதனோடு (நமது நாட்டின் பாரதம் என்ற பெயரின் காரண கர்த்தா இவனே - இராமன் தம்பி அல்ல) துஷ்யந்தனை சந்திக்கிறாள்...

துஷ்யந்தன் - சகுந்தலையை யார் என்றே தெரியாது என சாதிக்கிறான்!!

(சகுந்தலையை - துஷ்யந்தன்
#ஏற்றுக்_கொண்டானா

 இல்லை

#விரட்டினானா

என்பதை கணபதியின் திரைக்கதையில் காண்க!!)

சகுந்தலா தன்னை ஏற்க மறுத்த துஷ்யந்தனிடம் நிறைய தர்மம் / நியாயம்/ தர்க்கங்களை எடுத்துச் சொல்லி வாதிடுகிறாள்!!

1 என்னை அவதூறாக பேசுவதில் உமக்கு பெருமையில்லை துஷ்யந்த மன்னனே!

2 பிறரை தூஷிப்பதில் இன்புறுகிறவன் அயோக்கியன்.

3 யோக்கியனாக இருப்பவன் பிறர் தூஷிக்கப்படுவதை கண்டாலே வருந்துவான்!

4 நான் பேசும் சத்தியமான வார்த்தைகளை நீர் ஒதுக்கித் தள்ளுவது நல்லதல்ல!

5 சத்தியத்தை விட சிறந்தது எதுவும் கிடையாது.

6 நூறு கிணறுகளை விட ஒரு குளம் (நீர் நிலை) உயர்ந்தது

7 நூறு குளங்களை விட ஒரு யாகம் உயர்ந்தது!

8 நூறு யாகத்தைவிட ஒரு மகன் உயர்ந்தவன்...

9 நூறு மகன்களை விட ஒரு சத்தியம் உயர்ந்தது...

10 அதுமட்டுமல்ல 1000 அஸ்வமேத யாகங்களைக்  காட்டிலும் சத்தியமே உயர்ந்தது.

11 வேதங்கள் எல்லாவற்றையும் ஓதினாலும் சரி, எல்லா புண்ணிய நீர்த்தங்களில் நீராடினாலும் சரி அது சத்தியத்தின் ஒரு துளி பங்குக்கு ஈடாகாது.

12 சத்தியத்துக்கு சமமான புண்ணியம் வேறு எதுவுமில்லை.

13 அசத்தியத்துக்குச் சமமான கொடிய பாவமுமில்லை.

14 வாக்குறுதி என்பது சத்தியம் - கொடுத்த வாக்கை மறப்பது மீறுவது கொடிய பாவம் / நாசத்தை உண்டு பண்ணும்

என்று துஷ்யந்தனை நோக்கி சகுந்தலை ஆவேசமாக கூறுகிறாள்!!

இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் வற்றாத 100 கேணிகளுக்கு சமமானது ஒரு வற்றாத குளம் -

100 வற்றாத குளங்களுக்கு ஒப்பான மழையை பெற்றுத்தருவது ஒரு யாகம்!

100 யாகங்களை காட்டிலும் உயர்ந்தவன் ஒரு மகன் (தசரதனுக்கு இராமன் போல)

100 மகன்களை காட்டிலும் சத்யம் உயர்ந்தது - ஹரிச்சந்திரன் கதையை நினைவில் கொள்க!

1000 அஸ்வமேத யாகத்தை விட ஒரு சத்தியம் உயர்ந்தது!!

சதுர் வேதத்தை தொடர்ந்து  ஓதுவதை விட  / பல புண்ணிய தீர்த்தமாடலை விட பலமடங்கு உயர்ந்தது சத்தியம்.

இன்று கிணறுகளே அபூர்வம்...

குளங்களெல்லாம் ப்ளாட் போட்டாச்சு...

யாகம் எல்லாம் மூடநம்பிக்கை - தேவிடியா திராவிடியாவுக்கு பயந்து விட்டாச்சு...

விளைவு செயற்கை கருத்தரிப்பு மையம் ஐஸ்வர்யா வந்தோம் அடுத்தவனை நாடினோம் - இன்று எங்களுக்கும் ஒரு குழந்தை!

சத்தியம் தரப்படுவது - வாக்கை நம்மிடம் திருட.!

வாக்குக்காக தந்த சத்தியத்தை மீறுதல் ஆட்சியாளர்களின் முதல் கடமை!

நாடு எப்புடிய்யா உருப்புடும்!!

கொரோனா களத்தில் 39 எம்பி களையும்,   தமிழக அமைச்சர்கள் தவிர மீதி சுமார் 200 எம் எல் ஏக்கள் கூட தலைமறைவு ஆகிட்டானுங்களே!!

self கொரோன்டைன்ல இருக்காயிங்க போல இருக்கு - எத்தினி தலை உருளுமோ/ தப்பிக்குமோ?!

நாடு விளங்கிடும்!!

 இன்னும் 672 தப்ளிக்கை சிறப்பு விமானத்துல அழைச்சிக்கிட்டு வரணுமாம்!! ஜாங்கிரிபுல்லா பன்னி சொல்றான்.

கட்டிப்புடிச்சி நக்கி அம்மணமா அலைய வச்சி -

உதவிக்கு போன டாக்டர் போலீஸ் மேல எச்சி துப்பி / தாக்கி -

வரண்டாவுல மோண்டு பேண்டு...!!

சரி வுடு...

1976ல் வெளியான கிரகப்பிரவேசம்  - சிவாஜி கே ஆர் விஜயா நடித்த திரைப்படம்!

கண்ணதாசன் இயற்றிய,

எம் எஸ் விஸ்வநாதன் இசையமைப்பில்

டி எம். சவுந்திரராஜன் குரலில் பாடப்பட்ட

கீழே உள்ள இந்த பாடல் வரிகளே,  இப்போதைக்கு நமக்கு நிம்மதி தரக்கூடும்!!

சத்தியத்தின் சோதனைக்கு
எத்தனை பேர் போட்டி..

தர்மம் என்னை வாட்டுதம்மா..
சொந்தங்களை காட்டி..

அத்தனையும் தாங்கிவிட்டேன்
சக்தியினைக் கூட்டி..

ஆண்டவனும் சேர்ந்து கொண்டான்..
சங்கடத்தில் மாட்டி..

Tuesday, April 28, 2020

கலி புருஷன் தங்குமிடங்கள்

கலி புருஷனின் இருப்பிடங்களாக (தங்குமிடங்களாக) துவாபரயுக முடிவில் பரிஷீத் மஹாராஜனால் அனுமதிக்கப்பட்ட இடங்கள் 10

கள்

சூது

பெண்கள் அவமரியாதை செஎய்யப்படும் இடங்கள் - வேசிகள் வாழுமிடம்.

பிராணிகள் வதைக்கப்படுமிடம்

தங்கத்தின்மீது ஆசையுள்ள இடம்

அசத்யம் பேசும் இடம்

மதம் படிக்கப்படுமிடம் / அழகு/ பணம் உள்ள இடம்

காமம்/ ஆசை / இச்சை உள்ள இடம்

கோபம்

விரோதம் - வைரம் உள்ள இடம்.

முதல் நாலு இடங்களும் கலி புருஷன் காலூன்றிக் கொள்ளவும்.... தங்க ஆசையுள்ள இடத்தில் கலிபுருஷன் இடும்....

பின் மற்ற இடங்களை  தன் முயற்ச்சியால் ஆக்ரமிக்க வேண்டும் கலிபுருஷன் என்பதே உத்திரவு...


பகவானே சரணம்!

சைவர் ஆதி சைவர்

சைவர் -

என்றால் சிவபெருமானை வழிபடுபவர்கள்...

ஆதிசைவர் என்றால் சிவபெருமானாலேயே தோற்று விக்கப்பட்டவர்கள்.
+++

அனாதை என்றால் அப்பா அம்மா இல்லாமல் ஆதரவு இல்லாமல் (அன-ஆதரவு மருவி) அனாதையாக விடப்பட்டோர்.

+++

சங்கரர்...
ஆதி சங்கரர்...

இன்று நாம் கொண்டாடும் சங்கர ஜெயந்தி 2300+ ஆண்டுகளுக்கு முன்பாக உதித்த திராவிட (தென்னிந்திய) சிசு ஆதி சங்கரர் பெயரில் / திருநஷத்திர / திதி தினத்தில் பிறந்தவருடைய ஜெயந்தி!!

Indepth பீட பரம்பரை வரலாறு, காஞ்சி மடத்தில் 2300+ வருடங்களாக குருபரம்பரை - அவதார நக்ஷத்திரப் - சந்யாச ஏற்பு தினம் - மோக்ஷ திதி - successor விபரங்கள் யாவும் குறிப்பாக webல் கூட தெளிவாக உள்ளது.

ஆனால் - பொதுவில் - காஞ்சி தவிர மற்ற நான்கு மடங்களில் ஆதி சங்கரரின் ஜெயந்தியை / நக்ஷத்திர - திதி யை (காஞ்சி மரபை) ஜ்யோதிர் பூரி துவாரகா ஸ்ருங்கேரி ஆகியோர் அரசு அறிவித்த 1000 சில்லறை ஆண்டுகளான சங்கரர் ஜெயந்தியாக (இராமானுஜருக்கு சில காலம் முற்பட்டவர் ஜெயந்தியாக) கொண்டாடுகின்றனர்....

DOB/ DOD - எல்லாம் ஒன்றுதான்...

ஆனால் ஆதிசங்கரர் / சங்கரர் என்பவர்கள் இருவேறு நபர்கள் - சாதனையாளர்கள் - காலத்தவர்கள்...

ஒரே ஒரு உதாரணம் -

மண்டனமிஸ்ரர் (பிரம்மா அம்சம்) சம்சாரமாக வந்த சரசவாணி ஆதிசங்கரை தொடர்ந்து வரும்போது - கூட்லி யில் மலை மீது நின்ற கோலத்தில் -  ஸ்ருங்கேரி நதிக்கரையில் சாரதா அமர்ந்த கோலத்தில்!

இரண்டுமே இப்போதும் உண்டு!!

ஹரிஹரர் புக்கருக்கு முன் சிருங்கேரி?!

மற்ற 3 இடங்களில் பூரி துவாரகா ஜ்யோதிரில் குரு சிஷ்ய பாரம்பர்ய chain அறுந்துள்ளது!!

முட்டை சைவமா?! அசைவமா?!

இரு தரப்பில் வாதிடுவோரும் உண்டு!!

குறிப்பாக, பால் பசு/ மாடுகளின் ரத்தத் திரிபுதானே?!

அது போலத்தானே - கோழி முட்டையின் உள்ளடக்கமும்...

பால் சைவம் என்றால் முட்டையும் சைவமே!!

பால் கறந்து வைத்து காய்ச்சி பால் தோய்த்து தயிர் வெண்ணெய் நெய் என்ற பல மருத்துவ பலன்கள்  உண்டு!!

கன்று பாலை வயிறு முட்டக் குடித்து பின்னரும் பசுவின் மடியில் பால் இருக்குமாயின் அது பசுவுக்கும் வேதனை!

கறந்த பாலை காய்ச்சிப் பதப்படுத்தாவிட்டால் ஒரே நாளில் நோய்கிருமிகளை உற்பத்தி செய்யத் துவங்கி விடும்...

ஆனால் - கோழியின் முட்டையிலிருந்து - இன்னும் ஒரு உயிர் உற்பத்தி ஆக வாய்ப்புகள் உண்டு...

எனவே பால் சைவம் / முட்டை அசைவம்!!

சரி,

கருணையே உருவான அன்பே சிவமான கடவுள் எதற்காக ஜீவராசிகளை படைத்தான்?!

இப்போது, கொரோனா நோய்க்கான மருந்தை கண்டு பிடிக்க நாம் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்கிறோம்.

இடையில் 12 அல்லது 14 கட்டங்களில் கிருமித் தொற்றின் மீது சோதிக்கிறோம்...

may not be right and successful in all stages... but atleast in 3 or 4 stages, the test sample emerges as a meficine for some other deceases!!

அது போல கடவுள் தேனீங்களை படைக்கும் முயற்சியில் கொசு, ஈ, வண்டு என சில test களை முயற்சித்து இருக்கலாம்...

ஆடு என்பது பசுவின் பூர்வமாக கூட இருந்திருக்கலாம்!!

அன்னப்பக்ஷியின் பூர்வமாக வாத்து இருந்திருக்கலாம்...

சரி இந்த வாத்து கோழி ஆடு மீன்கள் எல்லாம் மனித குலத்துக்கு அவசியமா?!

அசைவ உணவு தவிர்க்க முடியாததா?!

இன்றைய உலகின் ஜனத்தொகை 650 கோடி - சராசரியாக ஒரு மனிதனுக்கு ஒரு நாள் உணவு தானிய தேவை 1 கிலோ என வைத்துக் கொள்வோம்.... எண்ணெய், காய்கறி, சோறு etc

இந்தக் கணக்குப்படி நாள் ஒன்றுக்கு 65 லட்சம் டன் உணவு உற்பத்தி தேவை ... வருடத்துக்கு,

65 லட்சம் × 365 வருடத்துக்கு 23 ஆயிரத்தி 425 டன் உணவு உற்பத்தி தேவை ...

Is it really possible?!

எனவே non - veg is just an alternate arrangement by God...

Ok, post corono, if the entire world becomes vegetarian... then what will happen...

may be after 2 or 3 months, மனித குலம் நடமாட முடியாத அளவு மிருகங்களே பூமியை ஆக்ரமித்து இருக்கலாம் ...

இந்தியாவிலிருந்து கடல் பரப்பு மீன்கள் மீதேறி நடந்தே ஆஸ்திரேலியாவுக்குச் சென்று விடலாம்...

கற்பனைதான்... ஆனால் யோசிக்க/ எழுத சுகமாக/ ஆர்வமாக / வித்யாசமான யோசனையாக இருந்தது!!

சரியாத்தான் இருக்குமோ?!

ஞானம்

ஹிந்து மஹா சமுத்ரம் என்றால் அது தப்பு...

நாம் இப்போது வசிக்கும் solar system எனப்படும் கிரகங்களின் தொகுப்பு எத்தனையோ நூறு நமக்கு அப்பாற்பட்டு உள்ளது...

நாமெல்லாம் குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டு இருக்கிறோம்!

கற்றது கடுகளவு ...
கல்லாதது கோள்களின் அளவு...

அறிவு - தெளிவு - ஞானம் -

பொதுவில், இது மூன்றும் ஒன்றேதான் என நாம் நினைக்கிறேம்...

இது 3ம் வேறு வேறானது -

அறிவு

என்பது just நமது மனதில் பதிய வைக்கப்பட்ட ஒரு செய்தி...

ஒரு தீவுக் காட்டில் ஒரு விமானம் விழுந்து விடுகிறது - விமானி பராசூட் மூலம் தப்பிவிட்டான்... அந்த விமானத்தை பார்த்த கிராமத்து விவசாயி அதை ஏதோ ஒரு வண்டி என நினைக்கிறான்...

தெளிவு

என்பது பதிய வைக்கப்பட்ட அந்த செய்தியை நாம் நமக்குள் இருக்கும் - முனைப்பு - பொறியை - சிந்தனா சக்தியை வைத்து develop  செய்து ... அறிவிலே - பதிய பட்ட செய்தியைப்பற்றி - ஒருவித தெளிவை - புரிதலை பெறுவது...

இன்னெருவன் அதன் உள்ளே புகுந்து பார்த்துவிட்டு - இதில் நிறைய gear system கள் உள்ளது எனவே இது ஒரு டிராக்டராக இருக்கும் என்கிறான்.

ஞானம்

என்பது நாம் புரிந்து கொண்டதை
குரு/திருவருள் துணை கொண்டு, அறிவிலே பதிவு செய்யப்பட்டு நம் சிந்தையால் வளர்த்து புரிந்து கொண்ட அந்த செய்தியை / பதிவை முழுமையாக புரிந்து கொண்டு அதன் பூரண தத்துவத்தை உணருவதே ஞானம்.

அந்த தீவிலே விழுந்த விமானத்தை மீட்டுச் செல்லவந்த பைலட் அதை விமானம் என்று விளக்குகிறான்! 

அறிவு = ஒரு பதிவு

தெளிவு = அறிவு + தன்முனைப்பு (சிந்தனை)

ஞானம் = அறிவு + சிந்தனை + குரு/திருவருள்! 

யுகங்கள்

யுகங்கள் Sankaran K

யுகங்கள் 4

முதலில் க்ருத யுகம்

காலம் 17 28 000 வருஷங்கள் (4,32,000 × 4)

சொர்க்க புரி

எல்லோரிடமும் ஞானமே இருந்தது எனவே எல்லோரும் பிராமணர்களே.

பசி தாகம் ஆசை அழுக்கு எதுவும் கிடையாது

க்ருத யுகத்தில் அழுகை கர்வம் சதி சண்டை பொறாமை கிடையாது

நினைத்தபோது நினைத்த காரியம் நடக்கும்

வேதம் ருக் வேதம்

நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடம் செல்ல முடியும் எனவே கைலாசம் வைகுண்டம் ப்ரம்ம லோகம் பாதாள லோகம் என்ற பிரிவுகள் இல்லை.

எல்லோரிடத்தும் ஞானம் இருந்தது

எலும்புதான் ப்ரதானம்
(ததீசி மஹரிஷி வஜ்ராயுதம்)

4 அவதாரங்கள்
மச்சம் - வேதம் தேடி
கூர்மம் - ஞானம் தேடி (பிறவா நிலை)
வராஹம் - பூமி தேடி
நரசிம்மம் - பிரம்மத்தை தேடி

முக தரிசன பாபம் போக்க

மயிலாடுதுறை மஹாதானத்தெரு, எங்கள் வீட்டு கூடம் (அநேகமாக எல்லா பழையகால வீடுகளிலும்) சுவர் முழுவதும் மரப்பட்டி அடித்து அதில் சிறு ஆணிகள் அடித்து வரிசையாக சுவாமி  படங்கள் தொங்கவிடப்பட்டு இருக்கும்.

வருட கேலண்டர்கள் கூட சுவாமி படங்களோடுதான் அச்சிடப்படும்.

வயது கூட கூட... படங்களின் பின்பு தூசு/ ஒட்டடை படிகிறது பல்லி பூச்சிகள் ஒளிகிறது என நான் அருவருப்பு அடைந்ததும் உண்டு.

பட்டணம் நகர்ந்தால் பெரும்பாலும் வாடகை வீடுகள்/ flat ... முதல் condition னே... ஆணி அடிக்கக் கூடாது...

சரி சொந்த விருப்பில் தனி வீடு கட்டிக் கொண்டாலும் interior design என்ற கணக்கில் சில லட்சங்கள்... ஆணி அடித்து சுவாமி படங்கள் ... மூச்... பூஜா அலமாரியோடு முடிந்து விடும் சுவாமி - படங்கள் எல்லை!

இன்னொரு காரணம் பகிஷ்டைகள் நடமாட்டத் தொல்லை!!

கேலண்டர்கள் எல்லாம் இப்போ - அரசியல் தலைகள் - நடிகர் நடிகைகள்....

அநேகமாக லிவிங் ரூம் ஒரு சலூன்தான் இன்று... மார்டன் art - கவர்ச்சிப் (கா விரிச்ச) படங்கள்... செய்தித்தாள்கள்... show case எல்லாம் நமது பந்தா/பவிசு காட்டவே...

ஊரடங்கு

நிறைய நேரம் கிடைத்தது - புத்தகம் படிக்க... வியாச பாரதம் - நெட்டுருவே பண்ணிக்கிட்டு இருக்கேன்...

15வத நாள் யுத்தம் - துரோணர் முடிகிறார்... 

குருக்ஷேத்திர யுத்த களத்தில் பாண்டவர் தரப்பில் முதல் சலசலப்பு - ஒற்றுமை குறைதல் இன்றுதான்....

அர்சுனன் - த்ருடத்யும்னன் வாக்குவாதம்

- கொன்ற விதம் தவறு என...

த்ருஷ்டத்யும்னன் - எதிர் பதில் -

நீ மட்டும் யோக்யமா... சிகண்டியை முன்னால் வைத்துதானே பீஷ்மரை முடித்தாய்....

சாத்யகிக்கு (அர்சுனன் சீடன்)  வந்ததே கோபம் - 

ஏய் த்ருடத்யும்னா,

அர்சுனன் என் குரு, துரோணர் என் குருவின் குரு - ஆதலின் பரம குரு - அர்ச்சுனன் துரோணர் இருவரையும் நீ அவமதித்துவிட்டாய் - உன்னை இப்போதே கொன்று போடுகிறேன் என்கிறான், சாத்யகி...

மீதி படிச்சுத் தெரிஞ்சுக்கோங்க!!

நான் சொல்ல வந்தது

சாத்யகி த்ருடத்யும்னனை பார்த்து சொல்லும் சொற்கள்தான் இங்கு highlight....

ஏய் த்ருடத்யும்னா உன் குல வழக்கமே துரோகம்தான் - உன் உடன் பிறப்பு சிகண்டி அலியாக இருந்து பீஷ்மரை முடித்தான் - நீயோ, ஆயுதமில்லாது நிஷ்டையிலிருந்த துரோணரை முடித்தாய்!!

த்ருடத்யும்னா,

உன் (உன் குலத்தோர்)  முகத்தை பார்த்தாலே, பாவம் நம்மை பீடிக்கும், என நம் வரிசையில் உள்ள அரசர்களும்  வீரர்களுமே (சாஸ்திரம் படித்த பண்டிதர்களைப் போல) சூரியனை பார்த்து உன் முக தரிசன பாவத்தை போக்கிக் கொள்கிறார்கள்! என்கிறான்.

வெளியில் / பகலில் நாம் யாராவது பாவியை பார்த்து விட்டால் உடனே சூரியனை பார்த்து பாவத்தை போக்கிக் கொள்ளலாம்!!

இரவில் / மேக மூட்டத்தில் / பாவி வீட்டேக்குள்ளேயே வந்து விட்டால் - பாவியின் முக தரிசனம் செய்த  பாவத்தை எப்படி போக்கிக் கொள்வது?

சிறு வயதில் எங்கள் வீட்டு கூடத்தில் / நிலை வாசலில் படங்கள் மாட்டி வைத்திருந்ததன் அர்த்தம் இப்போதுதான் புரிந்தது.

நண்பர்களே,

வெளியில் எங்கு சென்றாலும் நம்மைப் பெற்ற

தாய் (அல்லது)
குல ஆச்சாரியன் (அல்லது)
இஷ்ட தெய்வங்களின்

லேமினேட்டட் படத்தை பாக்கெட்டிலேயே வைத்திருங்கள் - நண்பர்களோ - உறவினர்களோ - எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ!!

இஷ்டமான,

தாய் / குரு/ தெய்வத் திரு முகத்தை அடிக்கடி தரிசிப்பது, பிறர் முக தரிசன  பாவம் சேர்ந்ததை  போக்கிக் கொள்ள உதவுமோ இல்லையோ,

புண்ணியத்தையாவது நம் கணக்கில் சேர்த்து வைக்குமே!

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...